Sunday, February 14, 2010

திறப்பு விழா



சமைத்து அசத்தலாம்
என் புதிய ப்ளாக்கை அன்பை வெளிப்படுத்தும் தினமாகிய இன்று பிப்ரவரி -14 திறப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
என்னை இணைய தளத்தில் ஊக்குவித்த பிரபல சமையல் இணைய தளங்கள் அறுசுவை.காம்,தமிழ்குடும்பம்.காம் அவற்றின் அட்மின்கள் அன்பிற்கும்,மதிப்பிற்கும் உரிய அறுசுவை பாபு அவர்களையும்,தமிழ்குடும்ப அட்மின் தமிழ்நேசன் அவர்களையும் மிக நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.
என் அருமை அறுசுவை தோழிகள்,தமிழ்குடும்ப தோழிகள் மற்றும் என் உடன் பிறவா சகோதரர்கள்,தோழமைகள்,என் பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய உறவினர்கள் அனைவரையும் அன்போடு என் ப்ளாக்கை பார்வையிட்டு ரசிக்க ருசிக்க அழைக்கிறேன்.
இந்த ப்ளாக்கை என் உயிரினும் இனியவருக்கும்,என் இரு கண்ணின் மணிகளாம் ஸாஹித்,ருமானாவிற்கு அன்புப்பரிசாக கொடுக்கிறேன்.

14 comments:

Jaleela said...

வாழ்த்துக்கள் ஆசியா உங்கள் நெல்லை சமைலை அசத்துங்கள்.

ஸாதிகா said...

பிளாக்கின் தலைப்பு "சமைத்து அசத்தலாம்" அடடா..செம அசத்தல் தோழி.

asiya omar said...

ஜலீலா நிச்சயம் நெல்லை சமையல் தான் அதிகம் இருக்கும்.ப்ளாக்கை இன்னும் டெவலப் பண்ணனும்.நேரம் தான் இல்லை.

asiya omar said...

ஸாதிகா உங்கள் பாராட்டே எனக்கு மிகப்பெரிய ஊக்கம்.நன்றி.

Mrs.Menagasathia said...

நானும் வந்துட்டேன்...வாழ்த்துக்கள் ஆசியாக்கா!!உங்கள் சமையல் குறிப்புகளை அதிகம் எதிர்ப்பார்க்கிரேன்.

kavisiva said...

ஹாய் ஆசியா நீங்களும் ஜோதியில் ஐக்கியமாயாச்சா! வாழ்த்துக்கள். நிறைய நெல்லை குறிப்புகள் எதிர்பார்க்கிறேன்.

asiya omar said...

மேனகா உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சி. என்னால் முடியும் பொழுது நிச்சயம் குறிப்புக்கள் இடம்பெறும்.

asiya omar said...

கவிசிவா வாங்க,கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.நிச்சயமாய் கவி,
நெல்லை சமையல் எப்பவும் இருக்கும்.

ஜெய்லானி said...

ஆரம்பமே அசத்தலா இருக்கே!!.வாங்க.........வாங்க........(Word Verification-வேண்டாமே)

asiya omar said...

ஜெய்லானி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.word verification -க்கு no சொல்லியாச்சு.

SUMAZLA/சுமஜ்லா said...

ம்...அக்கா...எல்லாரையும் பாராட்டும் நல்ல உள்ளமாகிய உங்களை நாங்கள் பாராட்ட ஒரு வாய்ப்பு!

சமையல் பற்றி மட்டும் அல்ல, கண்டவை, கேட்டவை, ரசித்தவை, ருசித்தவை என்று உங்களுக்குத் தோன்றும் எதையும் எழுதுங்கள்.... அப்படி எழுத நினைத்தால், தலைப்பையும் சற்று மாற்றாலாம்....!


நான், என் படிப்பின் காரணமாக தற்சமயம் பதிவுலக ஓய்வில் இருக்கிறேன் என்று சொல்லலாம். ஆகையால், நேரம் கிடைக்கும் போது, விசிட் செய்கிறேன்.

வாழ்த்துக்கள்!

asiya omar said...

சுமஜ்லா உங்களைப் போன்ற பதிவுலக முன்னோடிகள் வருகை தருவது மிக்க மகிழ்ச்சியை தருகிறது.உங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் என்றும் தாருங்கள்.

cheena (சீனா) said...

திறப்பு விழா - அருமையான் பதிவு ஆசியா உமர்- விழாப் பரிசாக இனியவருக்கும் ஸாஹித் மற்றும் ருமானாவிற்கும் அன்புப் பரிசாக வழங்கியமை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

இமா said...

ஆஹா! அழைப்பிதழ், திறப்புவிழா என்று அசத்தலாகத்தான் ஆரம்பித்திருக்கிறீர்கள் ஆசியா. அருமை.