Sunday, February 14, 2010

அயிரை மீன் கூட்டு / Ayirai meen kootu


தேவையான பொருட்கள் :
அயிரை மீன் – அரைகிலோ
வெங்காயம் – 5 பெரியது
தக்காளி – 2
மிளகாய் – 4
பூண்டு – 6 -10  பல்
மல்லி கருவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மசாலாத்தூள் – 2 டேபிள்ஸ்பூன்(வீட்டு மசாலா)
புளி – எலுமிச்சை அளவு
தேங்காய் அரைத்தது - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு

செய்முறை :துடிக்க துடிக்க கிடைக்கும் அயிரை மீனை வாங்கியவுடன் ஒரு பாத்திரத்தில் கல் உப்பு போட்டு மூடி வைக்கவும்.துடிப்பு அடங்கியதும் நன்றாக உலசி வழுவழுப்பு போனவுடன் கழுவி எடுக்கவும் ,அதில் கசலி மீன் (அதே போல் மாறுபட்ட சிறு மீன்) இருக்கும்,அதனை எடுத்து விட வேண்டும்.இல்லாவிடில் அந்த மீன் கசக்கும்.
வாணலியில் எண்ணெய் விட்டு,வெந்தயம்,கடுகு,தட்டிய பூண்டு,மிளகாய்,கருவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம்,தக்காளி,சிறிது உப்பு போட்டு வதக்கவும்,மூடி போட்டு திறக்கவும்.
வதங்கியவுடன்,மிளாகாய்த்தூள்,மசாலாத்தூள் போட்டு பிரட்டி விடவும்.
புளிக்கரைசலை விடவும்.கொதிவந்ததும் அயிரை மீனை சேர்க்கவும்.சீக்கிரம் வெந்துவிடும்.வெந்தவுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து சிம்மில் வைத்து தேங்காய் வாடை அடங்கி எண்ணெய் மேலெழும்பி வந்ததும் நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.
ருசியான அயிரை மீன் கூட்டு ரெடி.இதனை வெறுஞ்சோறு,ரசத்துடனும்,அரிசிமாவு ரொட்டியுடனும் சாப்பிட அருமையாக இருக்கும்.
பின்குறிப்பு :
இந்த மீன் ஆறு ,குளம் உள்ள பகுதிகளில் கிடைக்கும். அரிதாக கிடைக்கும் இந்த மீன் குறிப்பையே என் ப்ளாக்கின் முதல் குறிப்பாக கொடுக்கிறேன்.
- ஆசியா உமர்

22 comments:

Jaleela said...

நீங்க மேலபாளையம் கிச்சன் என்றே பெயர் வையுங்கள்.

ரொம்ப அருமையான அயிலை, முதல் எடுத்ததும் கலக்கலா மீன் குழம்பு வந்துள்ளது.வாழ்த்துக்கள் ஆசியா. மீன் இப்படி துடிக்க துடிக்க வாங்கி நான் செய்ததில்லை. என் மாமியார் ஒரு முறை செய்து இருக்காங்க.

Roohi said...

ஆசியா மாமி... நான் இந்த அயிரை மீனை சாப்பிட்டதினால் எனக்கு அந்த ருசி இன்னும் நினைவில் இருக்கு...

asiya omar said...

ஜலீலா,உங்கள் கருத்திற்கு நன்றி.என் சொந்த ஊரின் பெயரை வைக்கலாம் என்று முதலில் நினைத்திருந்தேன்.வைத்திருக்கலாம் தான்.பார்ப்போம்.

asiya omar said...

ரூஹி,நீ வந்து பார்த்து கமெண்ட் எல்லாம் சொன்னதை நினைத்து சந்தோஷமாக இருக்கு.அப்ப அப்ப வந்து பார்த்து சமைக்க கத்துக்கோ.

செந்தமிழ் செல்வி said...

முதல் குறிப்பே ரொம்ப நல்லா இருக்கு.
ஆனாலும் ஒரு இனிப்பு கொடுத்திருக்கலாம்னு நான் நினைக்கிறேன்:-)

ஸாதிகா said...

ஆசியா,இதுவரை அயிரை மீன் சமைத்ததில்லை.உங்கள் முதல் ரெசிப்பியை கண்டிப்பாக செய்து பார்த்து விடுகிறேன்.படங்கள் எல்லாம் அழகு.வாழ்த்துக்கள் தோழி!

ஹுஸைனம்மா said...

புது பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்.

asiya omar said...

செல்விக்கா,உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றி.இனிப்பு தான் கொடுக்க வேண்டும் என்று நானும் நினைத்தேன்.தென் தமிழகத்தை ஆட்டிப்படைத்த காய்ச்சல் என்னையும் விட்டு வைக்கலை.இப்ப நடமாடுவதற்கே கஷ்டம்.இது முன்பே சமைத்தது.என் மகன் வந்த சமயம் இந்த மீன் கிடைக்கலை,குட்டி மீன் சமைத்தே தரலைன்னு பயணம் கிளம்பும் போது கூட சொன்னான்.அதனால் தான் இந்த ரெசிப்பி முதலில்.வீட்டில் யாருக்கும் தெரியாமல் ப்ளாக் ஆரம்பித்து மெயில் மூலம் தெரிவித்து, அவருக்கு ரொம்ப சந்தோஷம்.

asiya omar said...

ஸாதிகா உங்கள் பாராட்டிற்கு மகிழ்ச்சி .மீன் கிடைக்கும் பொழுது செய்து பாருங்கள்.

asiya omar said...

ஹுசைனம்மா வருகைக்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.தொடர்ந்து வந்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்க.

Mrs.Menagasathia said...

முதல் குறிப்புக்கு வாழ்த்துக்கள் அக்கா!!

கூட்டு ரொம்ப சூப்பராயிருக்கு.சின்ன சந்தேகம் அயிரை மீன்னா நெத்திலி மீன் தானே?படத்தில் பார்க்கும்போது அப்படிதான் தெரியுது.

asiya omar said...

வாழ்த்திற்கு நன்றி.மேனகா அயிரை மீன் ஆறு,குளத்தில் தனி வலை வைத்து பிடிப்பது ,சாப்பிடும் பொழுது முள்ளே வாயில் தட்டுப்படாது,நெத்திலியை விட மிக மிகச்சிறியது.இது greyish black -கலராக இருக்கும்.

kavisiva said...

ஆசியா முதல் குறிப்பே அசத்தல்! ஆனால் எனக்கு இந்த அயிரை மீன் கிடைக்காதே :-( நெத்திலியில் செய்தாலும் நல்லா இருக்குமா?

asiya omar said...

கவிசிவா கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.நெத்திலியில் உருட்டு நெத்திலி பார்த்து வாங்கி,(சப்பைநெத்திலியில் இடை முள் இருக்கும்,மேல் மெல்லிய செதிலும் இருக்கும்,தவிர்த்து விடவும் ) மீனின் வயிற்று பக்கம் நம் பெருவிரல் நகப்பகுதியால் வாலில் இருந்து தலைநோக்கி பிரித்து முள் எடுத்து ,தலையையும் கிள்ளிவிட்டு சமைத்தால் குழந்தைகளுக்கு கூட பயம் இல்லாமல் கொடுக்கலாம்.நெத்திலி வாயு அதிகம் உள்ள மீன்,பூண்டு பல் கொஞ்சம் அதிகம் தட்டி சேர்த்து இதே முறையில் சமைத்தால் அசத்தலாக இருக்கும்.

u$$$ said...

asiya akka kalakkal, Iyra meen kuttuu saapidda asai vanthuduchuu May maatham oorukku varum poothuu kattayam saaptay aahanum

asiya omar said...

u$$$ உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.என்னை அக்கான்னு சொல்றீங்க,நீங்க யாருன்னு தெரியலையே,உறவினராக இருக்க்ணும் என்று நினைக்கிறேன்.

athira said...

ஆசியா.. இரண்டு நாட்களுக்கு முன்பு, இதில் உங்களுக்கு ஒரு வாழ்த்தனுப்பினேன்.. கிடைக்கவில்லையோ.. மீண்டும் அனுப்புகிறேன்... எனக்கிது ஹைஷ் அண்ணனின் நட்பில் பார்த்தபின்னர்தான் கண்டேன்... வாழ்த்துக்கள். தொடருங்கோ நேரமுள்ளபோது வந்து எல்லாம் படிக்கிறேன்.

prabhadamu said...

பார்க்கும் போதோ சாப்பிடனும் தோனுது. அந்த மாதிரி மீன் குழம்பு என்றால் அது எந்த மீன் என்று கொஞ்சம் படம் காண்பித்தால் பார்த்து தொரிந்து கொள்ள வசதியாக இருக்கும். அயிர மீன் எப்படி இருக்கும் அக்கா.

asiya omar said...

பிரபா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி..நிச்சயம் நீங்கள் கேட்டதை இணைக்க முயற்சி செய்கிறேன்.

asiya omar said...

அதிரா உங்கள் வாழ்த்தை கண்டு பதிலும் கொடுத்து இருக்கிறேனே.அடிப்படை மசாலா இடுகையில்.நன்றி.

saleemyousuf said...

really awesome chachi, vaalthukal try medicine kali, kaayam, nel maavu roti etc etc, en full support ungaluku thaan, keep rocking chachi

asiya omar said...

சலீம் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி.உன்னோட கமெண்ட் 2 தடவை பதிவாகி விட்டது,சரி இருந்திட்டு போகட்டும் நினைச்சேன்,அப்புறம் டெலிட் எப்படி பண்ணனும்னு இதையே ட்ரை பண்ணி பார்த்திட்டேன்,இப்பதான் எல்லாத்தையும் apply பண்ணி பார்க்கிறேன்.