Monday, February 15, 2010

எங்க ஊர் (வீட்டு) அடிப்படை மசாலா

இந்த மசாலா இல்லாத இஸ்லாமிய வீட்டை எங்கள் ஊரில் பார்ப்பது அரிது .மசாலாத்தூள் ஊர்க்கடைகளிலும் திரித்து ரெடிமேடாக கிடைக்கிறது மசாலாப்பொருட்களை காயவைத்து சுத்தம் செய்து திரித்து வைத்துக்கொண்டால் ஆறு மாதம் வரை அதே மணத்துடன் கெடாமல் இருக்கும்.கைபடாமல் பழகினால் ஒரு வருடம் வரை கூட அப்படியே இருக்கும்.

தேவையான பொருட்கள் ;

முழுமல்லி – 1 கிலோ
மிளகாய் வற்றல் – 200 கிராம் (காரம் அதிகம் வேண்டுவோர் 50 கிராம் அதிகம் சேர்க்கவும்.)
மஞ்சள் – 200 கிராம்
சீரகம் – கால் கிலோ
பெருஞ்சீரகம் – 50 கிராம்

இவற்றை மிஷினில் கொடுத்து திரித்து வைத்துக்கொண்டால் சமையல் அனைத்தும் அசத்தலாக இருக்கும்.எங்கள் ஊரில் இதனை டால்கம் பவுடர் மாதிரி நைஸாக திரித்து தருவார்கள்.எல்லாவகை குழம்பிற்கும்,குருமாவிற்கும் இது தான் அடிப்படை,மீன் சமைக்கும் பொழுது இந்த மசாலாவுடன் மிளகாய்த்தூள்,பூண்டு மட்டும். கறி சமைக்கும் பொழுது இஞ்சி பூண்டு,கரம் மசாலா என்று சேர்த்து சமைக்கலாம் அல்லது பாதி மசாலாத்தூள் மீதி மிளகாய்த்தூள் என்றும் சேர்க்கலாம். இந்த மசாலாவை சமையலில் எத்ற்கெல்லாம் சேர்த்தால் ருசி தருமோ அவை எல்லாவற்றிலும் சேர்த்து அசத்தலாம்.

-ஆசியா உமர்.

14 comments:

ஸாதிகா said...

எங்கள் பக்கமும் சிறிது வித்தியாசத்துடன் இதே போல் மசாலா செய்வார்கள்.நான் தனியா,மிளகாய்,மஞ்சள் இவற்றை தனித்தனியாகவும்,ஜீரகம்,சோம்பு,மிளகு இவற்றை ஒன்றாகவும் அரைத்து வைத்து உபயோகிப்போம்.வீட்டில் எப்பொழுதும் இந்த மசாலா பொருட்கள் இருக்கும்.

asiya omar said...

தோழி ஸாதிகா உடன் கருத்திற்கு மகிழ்ச்சி.உங்கள் முறையும் நல்ல உபயோகமான தகவல்.நன்றி.தொடர்ந்து வந்து உங்கள் கருத்துக்களை பதிக்கவும்.

athira said...

ஆசியா... புதுவீட்டுக்கு வாழ்த்துக்கள். எனக்குத் தெரியாமல் போச்சே.... இப்போ ஹைஷ் அண்ணன் மேலே எடுத்துவிட்டமையாலேயே கண்டேன்

asiya omar said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அதிரா.தொடர்ந்து வந்து உங்களின் மேலான கருத்துக்களை தருக.

Mrs.Menagasathia said...

உங்கள் குறிப்பு அருமை அக்கா!!இதனுடன் எங்கம்மா மிளகு,கறிவேப்பில்லை சேர்த்து அரைப்பாங்க..

asiya omar said...

மேனகா,நான் மிளகுத்தூள் தனியாக வைத்து இருப்பேன்,தேவைப்படுவதற்கு சேர்த்துக்கொள்வேன்.ஒரு முறை இப்படி திரித்து பாருங்களேன்.உங்களுக்கு பிடித்து போகும்.

SUMAZLA/சுமஜ்லா said...

சமையலில் நீங்கள்ளாம் கிங்காக, சாரி குயினாக இருக்கும் போது, எனக்கு சற்று பொறாமையாகக் கூட இருக்கிறது. ஏனோ, ஓரளவுக்கு நன்றாகவே சமைத்தாலும், எனக்கு மட்டும் அதில், ஈடுபாடு வருவதே இல்லை! அசத்துங்க...அசத்துங்க!

ஜெய்லானி said...

அப்படியே சாம்பார் பொடி பத்தியும் எழுதுங்க.

மகி said...

வாழ்த்துக்கள் ஆசியாக்கா!
உங்கள் சைவக் குறிப்புகளை சமைத்து ருசிக்கும்
ஆவலுடன்,
மகி

asiya omar said...

சுமஜ்லா உள்ளதை தானே சொல்ல சொல்லி இருக்கேன்,இல்லாததை சொல்லி பொறுப்பை கூட்டுறீங்கப்பா.வருகைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

எங்க அக்காவை ஜெய்லானின்னே கூப்பிடுவதால்,உங்கள் பெயரைப்பார்த்தவுடன் ஒரு சகோதரப்பாசம் தானப்பா,சாம்பார் பொடிதானே அதற்கு கொசுறாக ரசப்பொடியும் கொடுத்திடுறேன்,ரெடிமேடாக.

asiya omar said...

நிச்சயம் மகி,வெஜ் குறிப்பென்றால் எனக்கு பாயாசம் சாப்பிடுவது போல்,வருகைக்கு மகிழ்ச்சி.

Jaleela said...

உங்க ஊர் மசாலா பொடிதான் எங்கூர் மசாலா பொடியும் தங்கை இது போல் தான் திரித்து வைத்து கொள்வாள்.

எங்க வீட்டில் சோம்பு சேர்ப்பது பிடிக்கல ஆகையால் தனித்தனியா திரித்து வைத்து சில டிஷ்களுக்கு மட்டும் சேர்த்து கொள்வோம்.

நல்ல அருமையான பொடி, அம்மாவும் சில‌ ச‌மைய‌ம் ப‌ய‌ன் ப‌டுத்துவார்க‌ள்.

asiya omar said...

நன்றி ஜலீலா,சோம்பு ஒரு கிலோ மல்லிக்கு வெறும் 50 கிராம் தான் அதன் வாடையே தெரியாது,வயிற்றுக்கு நலலதாச்சே.