Tuesday, February 16, 2010

அபி இப்ப ஆசியா அப்ப

இந்த காய்ச்சல் வந்தாலும் வந்தது ,எல்லாம் தலை கீழாகிவீட்டது..ஏதோ சமைத்தோம் முடிந்த போது படம் பிடித்தோம்,இணையதளத்திற்கு அனுப்பினோம்னு இருந்த என்னை மர்மகாய்ச்சல் ஒரு வழியாக்கி விட்டது.
இப்ப தூங்குவது,நடமாடுவது,சாப்பிடுவது இது தாங்க நடக்குது.கொஞ்சம் சுகமானமாதிரி இருந்தது,சும்மா இருந்திருக்கலாம்,சமைத்து அசத்தலாம் என்று ஒரு ப்ளாக்கை ஆரம்பித்த் வேலை சுத்தமாக சமைக்க முடியாமல் போய்விட்டது.சரி ஏதாவது எழுதலாம்னு நினைத்த போது அபி வந்து முன்னே நிற்கிறான்,அபியை பற்றியே சொல்றேனே !

அபி எங்க வீட்டிற்கு ஏழு வருடமாக பழக்கம். வீட்டில் சமைத்து,ஏவின எல்லா வேலைகளையும் சூப்பர் வேகத்தில் செய்வதில் அவனுக்கு நிகர் அவனே.காலையில் 6.15 மணிக்கு ஆஜர் ,டீ போட்டு எல்லாருக்கும் தந்துவிட்டு வாசல் பெருக்கி தண்ணீர் தெளித்து ,நல்ல தண்ணீர்,உப்பு தண்ணீர் மோட்டர் போட்டு,பிள்ளைகள் ஸ்கூலிற்கு அனுப்ப வாட்டர் பாட்டில் நிரப்பி,கூட மாட ஒத்தாசை செய்து ஸ்கூல் வேனில் பையையும் பிள்ளைகளையும் ஏற்றிவிட்டு வந்து,மாமாவிற்கு வெண்ணீர் வைத்து திரும்ப அனைவருக்கும் இரண்டாவது டீ தந்து,டிபன் செய்ய் ஆரம்பித்து விடுவான்,கொஞ்சம் முச்சு விட்டுக்கறேன்,எஸ்.பி.பி மாதிரி மூச்சு விடாமல் பாடலாம்னால் முடியலைப்பா.

அப்புறம் ஆசிக்கு என்ன வேலை, நெட்டில் அரைமணி நேர உலா.அதற்குள் மாமா குளித்து வந்துவிட அபி சமைத்ததை அழகாக நாம சமைத்த மாதிரி பரிமாறிவிட்டு அடுத்து நம்ம டிபன் ,குளியல்,அதற்குள் மார்க்கட் வந்துவிட திரும்ப அபியுடன் சேர்ந்து கொஞ்சம் சமையல்,அபி தான் இருக்கானே.,எனக்கு தான் வலிக்காத இடத்தை யோசித்தால் கூட சொல்ல தெரியலை,ஒரு டம்ளர் தண்ணியை கூட கையால் தூக்க முடியலை,மணிக்கட்டு வலிக்கும்,வாய் கொப்பளித்தால் கை முழுவதும் வலிக்கும் இதை சொல்லனும்னா ஒரு இடுகை பத்தாது. இதயமாவது சும்மா இருக்கா?அவர் அங்கு இருப்பதால் எந்நேரமும் வலி.இதற்கிடையில் மாமியை கவனிக்கிறது,அதுவும் அபி தான்,வெண்ணி தண்ணி கொடுப்பதோடு சரி என் வேலை.அவர்கள் டிபன் முடியும் வேலை எங்கள் மதிய சாப்பாடு அதுவும் அபி பரிமாற சாப்பிட்டு விட்டு ,நெட் ஒரு மணி நேரம்,அபியும் வேலையை முடித்து மதியம் ரெஸ்ட் எடுக்க கிளம்பினால் வீடே அமைதியாகி ஒரு தூக்கம். நீ என்ன தான் செய்து கிழிச்சேன்னு மனதில் நினைப்பது தெரியுதுபா,வெயிட்,மூச்சு விட்டுக்கறேன்.

ஒரு ப்ளாஸ்க் நிறைய டீ போடுறது தாங்க என் வேலை.மாமாவை பார்க்க வருகிறவர்களுக்கு டீ பரிமாற்றம்,அதற்குள் பிள்ளைகள் பள்ளியில்ருந்து வர ஒரு அரைமணி நேரம் கூச்சல் தான்,ஓயும் நேரம் அபி வந்து பிள்ளைகள் சாப்பாட்டு கூடையை சரி செய்து விட்டு இரவு சப்பாத்தி போட ஏற்பாடாகிவிடும்.இதை எல்லாம் சில சமயம் வாக்கிங் ஸ்டிக் வைத்து நடந்து சரி பார்ப்பேன்,என்னம்மா கண்ணு ரஜினி, சத்யராஜ் கற்பனையில் ஓடினால் நான் பொறுப்பு இல்லை, சிக்கன் குனியாவினால் எனக்கு இடது கால் தான் ஊன்றமுடியாது, இடது காலை எடுத்து வைக்கும் பொழுது வலது கையில் உள்ள ஸ்டிக்கை ஊன்றி,ஊன்றி நடக்கவேண்டும்,இப்படி தாங்க என் வீடூ உழா.மூச்சை விட்டுகறேன்......

இரவு அபி சமைத்ததை நான் சமைத்ததாக நினைத்து மாமா,மாமிக்கு பரிமாறிவிட்டு,பிள்ளைகளை  சாப்பிட வைத்து பால் கரைத்து கொடுத்து வேலை முடிந்து அக்கடான்னு உட்கார்ந்தால் அக்கா நான் வரட்டா? அபி கேட்கும் பொழுது தான் தூங்கும் வேளை வந்து விட்டதேன்னு கவலை,வலியில் தூக்கம் வரனுமே,அதை மறக்க திரும்ப நெட் தான்....

அபியை பற்றி சொல்லனும்,அபி என்கிற ஜாகிர் ஹுசைன் ,எனக்கு தம்பி மாதிரி,ஏன்னு அவனுக்கு அபின்னு பேருன்னா அவன் எல்லோரையுமே அபின்னு தான் கூப்பிடுவான், சோ நான் அவனை அபின்னு கூப்பிடுவேன்,பொம்பளைன்னு சொல்ல முடியாது ஆனால் சுத்தமான ஆம்பிளை தாங்க எங்க அபி, அவன் சமையல் மட்டும் செய்ய மாட்டான்,இடையில் பாட்டு டான்ஸ் எல்லாம் உண்டு ,கடைசியாக அபி சொன்னது என்ன தெரியுமா?உங்க வீட்டிலே வாக்கப்பட்டாச்சு, வாழ்நாள் முழுவதும் இங்கே தான்.ஆனால் கோவில் திருவிழா,அரசியல் கூட்டம் , புதுப்பட ரிலீஸ் என்றால் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடுவான்,அப்ப நிஜமாகவே முச்சு விட முடியாமல் வேலை இருக்கும்.அப்பாடா மூச்சு விட்டுக்கறேன். காய்ச்சல் வந்தவங்களில் சில பேர் தவழ்றாங்களாம், நானாவது தத்தி தத்தி நடக்கிறேனே! காம்ப்ளான் பாய் சொன்ன மாதிரி நான் இப்ப நடக்கிறேனே அம்மா !காய்ச்சல வரும் போகும்,இதெல்லாம் வாழ்க்கையில் சகஜமப்பா !
இப்ப புரியுதா அப்ப ஆசியாஸ் கிச்சன், இப்ப அபிஸ் கிச்சன்.

--ஆசியா உமர்.

22 comments:

ஸாதிகா said...

ஹை..ஆசியா தோழி நீங்களா!!???

ஸாதிகா said...

ஆசியா.அபியை கொஞ்ச நாள் இந்த பக்கம் அனுப்பி வையுங்கள்.நானும் சிறிதுநாள் ஹாயாக உலா வந்து இப்படி ஜாலியாக பதிவு போடுகிறேன்.

ஸாதிகா said...

ஆசியா,அபியை அப்படியே கண்முன் நிறுத்தி விட்டீர்கள்.உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்காத நகைசுவை உங்கள் இடுகையில் மிளிர்கிறது.கிக் ..கிக்..கிக்..(அதிரா மாதிரி இப்ப வெல்லாம் சிரிக்க ஆரம்பித்துவிட்டேன்)

asiya omar said...

நன்றி.
ஹை..ஆசியா தோழி நீங்களா!!???
முடியலைபா,அதனால கதையை இப்படி தான் ஒட்டனும்.
அபியை அனுப்பி வைக்கிறேன்,அவன் மும்பை,ஆந்திரா,கர்நாடகா எல்லாம் ப்யணம் செய்து இப்ப தான் எங்க வீட்டு பக்கம் வந்திருக்கான்,சென்னை என்றால் கால் நடையாகவே கிளம்பி விடுவான்.எந்த மொழியில் பேசினாலும் பதில் சொல்ல நமக்கு தெரியணும்.இப்ப ஆங்கிலம் ஓடுது.ஏதோ அவன் பேசும் இங்லிபிஷை சாமாளிக்கிறேன்.

asiya omar said...

ஸாதிகா எல்லாரும் வலையுலகில் டிஸ்கி போடறாங்களே அப்படின்ன என்ன? நானும் போட்டுகறேன்.

kavisiva said...

ஆசியா காய்ச்சல் உங்களை படாத பாடு படுத்துகிறது போல! இன்னமும் ஊரில் இந்த காய்ச்சல் நடமாடுகிறதா? ஏன்னா நான் மார்ச் அல்லது ஏப்ரலில் ஊருக்கு வரலாம் என்று இருக்கிறேன். பயமாத்தான் இருக்கு. ரெண்டு மாசம் ஜாலியா இருக்கலாம்னு வந்து முடக்கிப் போட்டுடக் கூடாதே!

அபி... இன்ட்ரெஸ்டிங் கேரக்டர். நான் ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்க. ஊருக்கு வரும்போது கொஞ்சம் எங்க வீட்டுக்கு அனுப்பி விடுங்க.

ஜெய்லானி said...

ஊரில் யாரை கேட்டாலும் பத்தில் ஒருவர் காய்ச்சல்னு சொல்றாங்க ஒரு வேளை BT கத்திரிகாயை போல வேறு ஏதாவது சொல்லாம கொல்லாம வந்துடுச்சா ??

விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.

Jaleela said...

ஆசியா இன்னும் உங்களுக்குசரியாகலையா?

உஙக்ளுக்கு கிடைத்தமாதிரி எனக்கு ஒரு அபி தம்பி கிடைத்தால், ஒரு நாளைக்கு 100 சமையல் குறிப்புகள் அனுப்பிடலம்.

சூப்பர் அபி, ஆனால் ஊரில் எங்க வீட்டில் இருக்கிறாகள் நிறைய அபிக்கள் இருக்கிறார்கள், எல்ல்லொருக்கும் செல்லமா எங்க அம்மா எஙகலை கவனிப்பது போலவே அவர்கலையும் கவனிப்பார்கள்.

பதிவு நல்ல இருக்கு

asiya omar said...

கவிசிவா,வெயில் வந்தால் எல்லாம் சரியாகிவிடுமாம்.தைரியமாக வந்து விட்டு போகலாம்,கொசுக்கடியால் வந்ததாம் இந்த காய்ச்சல்.அபியை அனுப்பினால் எங்கள் பொழுது எப்படி போவது.

asiya omar said...

ஜெய்லானி கத்திரிக்காய் மூலம் பரவியதாயும் சில பேர் சொல்றாங்க,உங்க வேண்தலுக்கு நன்றிங்க.எல்லாம் வல்ல இறைவன் தான் அருள் செய்யனும்.

asiya omar said...

ஸாதிகா நானும் நம்ம தோழியர் வட்டத்தில் பழகி ஓரளவு சிரிக்க ஆரம்பித்து விட்டேன் தோழி,கி,கி,கி....

asiya omar said...

ஜலீலா,கருத்திற்கு மகிழ்ச்சி.அபியின் சமையலை படம் எடுக்க முடியாது,அது துபாய் மெட்ரோவை விட வேகம்,சூப்பர் ஜெட்.சோறு வடிப்பது ரசம் வைப்பது மட்டும் அவனின் முக்கிய வேலை,மற்றது எல்லாம் நாங்க கை பார்க்கணும்.சுத்தம் பார்த்தால் சோறு கிடைக்காதே.

kavisiva said...

//கவிசிவா,வெயில் வந்தால் எல்லாம் சரியாகிவிடுமாம்.தைரியமாக வந்து விட்டு போகலாம்,கொசுக்கடியால் வந்ததாம் இந்த காய்ச்சல்//

வெயிலை நினைத்தால் இன்னும் பயமாக இருக்கிறது :-(. வெளியில் தலை காட்ட முடியாத படிக்கு பொசுக்கி எடுக்குமே! . ஆனால் எப்படி இருந்தாலும் நம் ஊர்தான் நமக்கு சொர்க்கம்.

Mrs.Menagasathia said...

ஆசியாக்கா இன்னும் உங்களுகு உடம்பு சரியாகலையா?விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.

அபி பத்திய பதிவு நல்லாயிருக்கு.

asiya omar said...

பிரார்த்தனைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி மேனகா.

sayed m said...

அசத்திட்டெ ஆசியா. அபி அப்ப ஆசியா இப்ப அருமையான இலக்கியம் படிப்பது போல் குடும்பம் முழுவதும் சேர்ந்து படித்து சிரித்தோம். உன்னுடைய இலக்கியத்திறமை வளர வாழ்த்துக்கள்.

asiya omar said...

sayed m (காக்கா)உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நீங்க வேற இதெல்லாம் இலக்கியமா ? சரி கிடைத்த கமெண்ட்டிற்கு நன்றி.

mohamed said...

hello,asiyakka,

abi in dance um songs um kaakka uronaal varanum.
subi,

asiya omar said...

பார்க்க வாங்க தம்பி, ஆனால் நீங்க யாருன்னு தெரியலையே.கருத்திற்கு மகிழ்ச்சி.

athira said...

சூப்பராக இருக்கு.... நான் அபியைச் சொன்னேன். படத்தைப் போட்டிருக்கலாமே.

நான் சின்னப்பிள்ளையாக இருந்தபோது, கணேசன் என ஒருவர் உங்கள் அபிபோலவேதான் இருந்தார். எங்காவது போகும்போது, அம்மா நகைகளை எல்லாம் கொடுத்து வீட்டுத்திறப்பையும் கொடுப்பா... பத்திரமாகப் பார்த்துக்கொள்வார். என்னைச் சின்னச் செட்டியார் என செல்லமாக அழைப்பார்(ஏனோ தெரியாது, நாங்கள் செட்டியார் பரம்பரை இல்லை). பின்னர் அவர் திருமணமாகி நல்ல பணக்காரராக இருந்தார். பொல்லாத ஏதோ கொடிய கிட்னி வியாதி வந்து இறந்துவிட்டார்.அவரின் நினைவு வந்துவிட்டது இப்போ.

asiya omar said...

எங்க ஊரிலும் பொத்து பொத்துன்னு செழிப்பாக இருக்கும் குழந்தைகளை செட்டி மாதிரி இருப்பதாக சொல்வார்கள்,ஏனோ தெரியலை.

cheena (சீனா) said...

அன்பின் ஆசியா - அபி இப்போ ஆசியா அப்போ - கலக்கறீங்க போங்க - அபியினைப் பற்றீய பதிவு நன்று - நல்வாழ்த்துகள் ஆசியா - நட்புடன் சீனா