
தே.பொ:-
உருளைகிழங்கு - கால் கிலோ
உருளைகிழங்கு - கால் கிலோ
எண்ணெய் - 1 -2 டேபிள்ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு
மிளகாய்த்தூள் - கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
பெருங்காயம் பெரிய பின்ச்.
பெருங்காயம் பெரிய பின்ச்.
உப்பு - தேவைக்கு
2 நபர்களுக்கு.
செய்முறை:-
முதலில் கிழங்கை தோல் நீக்கி,பொடியாக கட் செய்து பாத்திரத்தில் தண்ணீரில் போடவும்.
அதனை 5 நிமிடம் கொதிக்க விடவும்,தண்ணீரை வடிகட்டவும்.
ஒரு நான்ஸ்டிக் ஃப்ரை பேனில் எண்ணெய் விட்டு கடுகு,கருவேப்பிலை தாளித்து,பெருங்காயம் சேர்த்து கட் செய்த உருளைக்கிழங்கை வதக்கவும்.
சிறிது பொரிந்தவுடன் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்புத்தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வதக்கினால் முடிந்தது.
டேஸ்டி,கிரிஸ்பி பொட்டடோ ஃப்ரை ரெடி.சூப்பராக இருக்கும்.
27 comments:
அவசரத்திற்கு உதவும் பொட்டடோ ஃபிரை.எங்கள் வீட்டில் அடைக்கடி சமைப்பது.படத்தில் மகளா?சூப்பர் போஸ்!
தமிழிஷ் போல ஏதாவது வலை தளத்தில் சேருங்க .(ஊரில் தான் ஓட்டு போடமுடிவதில்லை இங்கேவாவது போடலாம்)
ஹாய் ரூமானா வாழ்த்துக்கள் , நல்லா செய்து இருக்கிறீர்கள்
ஆசியாக்கா..கலக்கறாங்க ருமானா...வாழ்த்துக்கள்!
நூலைப் போல சேலை..தாயைப் போல பிள்ளை!:D :D :D
ஸாதிகா,ஆமாம்,இந்த ஃப்ரையை நான் செய்தா அவ செய்த மாதிரி வராது,அவள் ருசி தனிதான்.அவளுக்கு பொழுது போகலைன்னா இதை செய்து தானும் சாப்பிட்டு எல்லோருக்கும் கொடுப்பா,ஒரு ஆளுக்கு கால் கிலோ,அப்படியே உள்ளே போய்விடும்.
ஜெய்லானி நான் ஏற்கெனவே சேர்ந்து இருக்கேன்.ஆனால் மற்றவர்களுக்கு எப்படி ஓட்டு போடனும்னு எனக்கு தெரியலை.
சாரு வாழ்த்துக்கு நன்றி.
மகி,சில நேரம் எனக்கே கோபமாக வரும்,நான் தான் சமைப்பேன்,என்று அடம் பண்ணும் பொழுது.தூங்கும் பொழுது அதை தா,இதை தா அடம் பிடிப்பா.
ருமானாவுக்கு என் அன்பு வாழ்த்துக்கள். நெல்லை வந்தால் எனக்கும் செய்து தருவீங்களா ருமானா?!
ருமானா ஸ்கூல் போயிருக்கா, வந்தால் கேட்டு சொல்றேன் கவி.
ருமானாவுக்கு வாழ்த்துக்கள்!! உருளை ப்ரை ரொம்ப சூப்பராயிருக்கு...உங்களைப் போலவே மகளும் கலக்குறாங்க ஆசியாக்கா..ருமானா ஒரு ப்ளேட் பார்சல் பண்ணுங்க...
//ஜெய்லானி நான் ஏற்கெனவே சேர்ந்து இருக்கேன்.ஆனால் மற்றவர்களுக்கு எப்படி ஓட்டு போடனும்னு எனக்கு தெரியலை//உங்கள் பெயரை லாகின் செய்துவிட்டு வோட் என்னும் இடத்தை க்ளிக் செய்தால் வேலை முடிந்தது ஆசியாக்கா!!ஈசி தான்...
http://blog.tamilish.com/pakkam/5 இதை அட்ரஸ் பாரில் காப்பி பேஸ்ட் செய்து அதில் சொன்னபடி செய்தால் தமிழிஷ் ஓட்டு பட்டை கிடைக்கும்.
அப்படி ஓட்டு பட்டை வந்ததும் அதில் சப்மிட் பட்டனை அழுத்தினால் (முதலில் அதில் ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுங்க)அதில் வழிமுறை கிடைக்கும்.
மற்றவர்களுக்கு ஓட்டுபோட ஓட் பட்டனை அழுத்தினால் தமிழிஷ் மெயின் பேஜ் வரும் லாகின் செய்தால் உங்கள் ஓட்டு அவர்க்கு விழுந்து விடும்.
ஜெய்லானி,என்ன டவுட் கேட்டாலும் உடனே பதில் சொல்வதற்கு மிக்க நன்றி.
மேனகா மிக்க நன்றிபா,ருமானாட்ட நிச்சயம் பார்சல் அனுப்ப சொல்றேன்.
ஆசியா அக்கா பொட்டேட்டோ பிரை சூப்பர். அத குட்டி பொண்ணும் தான். அந்த அழகு குட்டி தோவதைக்கு என் வாழ்த்துக்கள்.
பிரபா உன் அன்பிற்கு மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கு நன்றி.
ஆசியா உங்களின் வலைப்பூல் இன்று தான் பதிவு போட முடிந்தது.. உருளை ஃப்ரை ரொம்ப சுலபமாக இருக்கு.. மகளும் அருமையாக இருக்காங்க
சிநேகிதி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.மகிழ்ச்சி.
ஆசியா, உங்க மகளா? நல்லாவே போஸ் குடுத்திருக்காங்க. பாவப் ப்ரை செய்து களைப்பா இருக்காப்லா.
சுப்பர் ப்ரை+ உங்க மகளும்.
எனக்கு ரொம்ப பிடித்த அயிட்டம். இந்த ரெசிப்பி ரொம்ப இஸியா இருக்கு. ட்ரை செய்துடவேண்டியதுதான்.
நன்றி,விஜி.அவ சமையல் எல்லாம் ஈசியாகத்தான் இருக்கும்.மதியம் நாங்க ரெஸ்ட் எடுக்கும் பொழுது சிலநேரம் கிச்சனை உருட்டிட்டு இருப்பா.
ஆசியா உங்கள் மகள் இந்த பொட்டெட்டோ பிரை சாப்பிட்ட ஆனந்தம் தெரிகிறது.
நானும் அடிக்கடி, மோர் குழம்பு, ரசம் சாதத்திற்கு செய்வேன், சூப்பரா இருக்கும்.
முன்பு ஒரு நாள் ஒரு தெரிந்தவரை பார்க்க போகும் போது அவங்க ஷேரிங் பாக்கிஸ்தானி இந்த உருளையை சின்னதா கட் செய்து , எம்மாடி பிரெஞ்ச் பிரை போல் நிறைய எண்ணையில் ஒரு கிலோ அளவிற்கு பொரித்து கொண்டு இருந்தார்கள்.
பரவாயில்லை மகள் கையால் சாப்பிடுகிறீர்கள்.
ஜலீலா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.முதல் முதல்ல ருமானாட்ட காபி போட்டு கேட்டேன்,கொஞ்சம் சுக்கு போட்டுக்கன்னு சொன்னேன்,அவ்வளவு தான் எவ்வளவு சுக்கு போட்டான்னு தெரியாது,மகள் போட்டு த்ந்த காபியேன்னு மூச்சு காட்டாம குடிச்ச பிறகு வயிற்றை ஒரு வழி பண்ணிவிட்டது,நான் ஏதாவது சத்தம் போட்டால் காப்பி போட்டு தரட்டான்னு கேப்பா வேண்டாம்மா,ஒரு தடவை குடிச்சது போதும்னு சொல்வேன்.
rumana,superb crispy potato
mohamed வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
எப்படி இப்படி அருமையாக சமைக்கிறீங்க. எங்க கத்துகிட்டீங்க. எனக்கும் கொஞ்சம் சொல்லிதாங்களேன்.
Post a Comment