Tuesday, February 23, 2010

முருங்கைக்கீரை சால்னா

















தேவையான பொருட்கள் :

முருங்கைகீரை – 2 கப்
வெங்காயம் -2
பூண்டு – 4 பல்
மிளகாய் வற்றல் - 2
சீரகம் – அரைஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் – 2  டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு – 4
அரிசி – 1 டேபிள்ஸ்பூன் (வ்றுத்து சேர்க்க வேண்டும்)
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு

செய்முறை:


முருங்கைகீரையை ஆய்ந்து அலசி எடுத்து கொள்ளவும்.
வெங்காயம்,பூண்டு கட் செய்து கொள்ளவும்.அரிசியை லேசாக மணம் வர வறுத்து எடுத்து அதனுடன் முந்திரி பருப்பு,தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு,சீரகம்,உளுத்தம் பருப்பு,வற்றல்,பூண்டு ,வெங்காயம் சேர்த்து வதக்கி,கீரையை சேர்க்கவும் .
4 கப் அரிசிக்கழனி அல்லது தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு,அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் வைத்து இறக்கவும்.
சுவையான சத்தான முருங்கைக்கீரை சால்னா ரெடி.
இதனை வடகம், ப்லைன் சாதத்துடன் பரிமாறவும்.

-ஆசியா உமர்.

14 comments:

ஜெய்லானி said...

அட ரொம்ப ஃபாஸ்ட் ஒரே நாளில் (இரண்டு மணி நேரத்தில்) இரண்டு சமையல் குறிப்பா? மாஷா அல்லாஹ்.

asiya omar said...

ஜெய்லானி ,உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் தான் காரணம். உங்களின் வரும் முன் காக்கவில் சொன்னபின்பு இந்த குறிப்பு நினைவு வந்தது.உடனே இன்று செய்தாச்சு.நன்றி.

kavisiva said...

ஆசியா முருங்கைக்கீரையில் நான் துவரன் மட்டும்தான் செய்வேன். குழம்பும் வைக்கலாம்னு இப்பதான் கத்துக்கிட்டேன். தொடரட்டும் புதிய குறிப்புகள்

asiya omar said...

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி கவி.

மங்குனி அமைச்சர் said...

ஹலோ மேடம் சமையல் குறிப்பு எல்லாம் வார புக் எழுதிகுவாங்க நீங்க ப்ளாக் -ல இருக்கீங்க
என்னை மாதிரி ஆக்க பூர்வமா ட்ரை பன்னுங்க (அமைச்சரே நீங்க ஆக்கபூர்வமா சிந்திகிரின்களா ......... எல்லாம் நேரம் )

asiya omar said...

மங்குனி அமைச்சர் உங்கள் நகைச்சுவை மிகவும் ரசிக்கும் ப்டி உள்ளது.வருகைக்கு நன்றி.

Mrs.Menagasathia said...

நல்ல சத்தான கீரை சால்னா அருமையா இருக்கு.இந்த கீரையில் சால்னா செய்ததில்லை.வாங்கினால் உங்க குறிப்பின்படி செய்து பார்க்கனும்.

asiya omar said...

மேனகா,நிச்சயம் செய்து பாருங்க,பாலக்கில் கூட செய்யலாம்.

Jaleela said...

முருங்கக்கீரை சால்னா, நல்ல சத்தானதா செய்து இருக்கீங்க.

asiya omar said...

நன்றி ஜலீலா உங்கள் கருத்திற்கு .மிக்க மகிழ்ச்சி.

Daisy Blue said...

Pudhusa irukku... looks nice..

மகி said...

பார்க்கவே அருமையா இருக்கு..

ஆனா இங்கே முருங்கைக் கீரையா?? ஊஹூம்..நோ சான்ஸ் ஆசியாக்கா!! கண்ணுக்கு மட்டுமே விருந்து!

பாலக்கீரைல வேணா செய்துபாக்கிறேன்.

asiya omar said...

டெய்ஸி,உங்கள் வருகை,கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

மகி,எங்கள் வீட்டில் அடிக்கடி முருங்கை வகை சமையல் இருக்கும்,இங்கு இருக்கும் பொழுது அனுபவிக்கலாம் தானே.