Wednesday, February 24, 2010

திக் திக் ….கால்
இரண்டு நாளாய் ஒரே பட படப்பு ,
என் மொபைல் ரிங் டோனே
எனக்கு எதிரியானது.
என் எண் யாருக்கும்
தந்ததில்லை
அதனால் ஒருவருக்கும்
தெரிந்ததில்லை
ஆனால் அழைப்பு
வருவதும்
போவதும்
இதென்ன வம்பு

மறுபடியும் ரிங்டோன்
கண் மூடினேன்
விடாது அழைத்தது
பொறுக்காமல் எடுத்தேன்
மரண நிசப்தம்
சிறிது நேரம்
அடுத்து உருட்டுவது
போல் சப்தம்

உள்ளம் நடுங்கியது
உடல் வியர்த்தது
ஹலோ ஹலோ
.ஹலோ...யாரது ?
பதில் இல்லை
பரிதவிப்பு,படபடப்பு
பயம் எல்லை
கடந்தது.

தைரியமாக் மெசேஜ்
அனுப்பினேன்,
இனி அழைத்தால்
போலீஸ் வரும் என்று.
சிறிது நேரத்தில்
பயமுறுத்தும் ரிங்டோன்
தெரியும் அந்த நிசப்தம்
பற்றி,எடுக்கவில்லை

மீண்டும் மீண்டும்
கால்,வழியில்லாமல்
எடுத்தால்
பிரபல ப்ளாக்கர்
நான் தான் அக்கா
உங்கள் பெயர்
ஆ-வில் தொடங்குவதால்
அறியாமல் கை பட்டு
கால் வந்திருக்கும்.

அப்பாடா நிம்மதி
அதற்காக இப்படியா ?
அடிககடி அடித்தால்
பட படக்காதா?

இருவரும் சிரித்தோம்
அசடு வழிந்தோம்
கவனகுறைவால் கைபட்டு
மொபைல் அழைத்ததால்
பட்ட வேதனை நானறிவேன்.
அந்த திக் திக்
இன்னமும் நெஞ்சில்.

--ஆசியா உமர்.

22 comments:

Mrs.Menagasathia said...

சூப்பர்ர் போங்க.எவ்வளவு அழகா எழுதிருக்கிங்க...

asiya omar said...

கருத்திற்கு மகிழ்ச்சி மேனகா.சே இதைப்போய் சூப்பர்னு,,,

மங்குனி அமைச்சர் said...

ஆக இப்படியெல்லாம் பயபடுவிகளா கொஞ்சம் உங்க போன் நம்பர் குடுங்க (ஆஹா டேய் மகுனி இது டம்மி பிசுடா சும்மா மிஸ்டு கால் குடுத்தே சொத்த எழுதி வாகிடலாம்டா)
ஏம்பா பஸ்ட் கமென்ட் யாருக்குமே போடவிட மாட்டிங்கள (ஒரு குரூப்பா தாய அலையிறாங்கே)

suvaiyaana suvai said...

Interesting!!

asiya omar said...

அய்யா மங்குனி ,திடீர்னு வந்து கமெண்ட்ல கலக்குறீங்க,கமெண்ட் கருப்புன்னு பேரு வைக்கலாம் போல இருக்கு.

ஜெய்லானி said...

இது சப்ப மேட்டரு. சைலண்ட்டில வையுங்க .எதுக்கு பயபடனும். புது நெம்பர் வந்தால் எடுக்கவேண்டாம். நான் இப்படித்தான் செய்வேன்.

ஜெய்லானி said...

// மங்குனி அமைச்சர் said...ஏம்பா பஸ்ட் கமென்ட் யாருக்குமே போடவிட மாட்டிங்கள (ஒரு குரூப்பா தாய அலையிறாங்கே)//

யோவ் மங்குனி.காலையிலே அந்த பிளாக்குல வாங்கியது பத்தலையா ?.இப்ப இவங்ககிட்டையுமா?....

//கமெண்ட் கருப்புன்னு பேரு வைக்கலாம் போல இருக்கு.//

கேட்டியால நல்ல பேர் கிடச்சிருக்கு

asiya omar said...

சுஸ்ரீ வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

ஜெய்லானி என்னோட மொபைல் flip type -திறந்தால் ஆன் ஆகிவிடும், டெக்னாலஜில நமக்கு அவ்வளவா விவரம் பத்தாது.

ஜெய்லானி said...

என்ன மாடல் நோக்கியாவா? சாம்சங் ஆ ?

ஜெய்லானி said...

போன் மாடல் ,பேட்டரியை கழட்டி பார்தால் கீழே இருக்கும் ,அதை சொல்லுங்க.

இலா said...

இதுக்கெல்லாமா பயம்... இந்த மார்கெட்டிங் கால்ஸ் வருமே. ஒரு நாள் கேட்டாங்க "மாம்" வீட்டில இருக்காங்களான்னு.. நோ மை மம்மி வில் பி பேக் அட் 9 . கேன் ஐ டேக் தெ மெச்சேஜ்ன்னு சொன்னேன் :))

asiya omar said...

இலா. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.இலா போன்றவர்கள் எல்லாம் படிக்கிற மாதிரி எழுதனுமேன்னு கொஞ்சம் கவலை வருது.

மங்குனி அமைச்சர் said...

மேடம் எனக்கு இந்த ப்ளாக்-ஸ் ரொம்ப புதுசு வந்து ஒரு வாரம் தான் ஆகுது
கடைசி வரைக்கும் போன் நம்பர் தரலையே. (அமைச்சரே இன்னும் பயிற்சி வேண்டுமோ)

//ஜெய்லானி said... //

ஓசி அரண்மனைல இருந்தும் இன்னும் அடங்கலைய நீ , அப்புறம் நேத்து நடந்த நம்ம சாட்டிங்-க வெளியற்றுவேன் ஜாக்க்க்க்கக்க்க்க்க்கக்க்க்கிரத

asiya omar said...

ஒரு வாரத்திலேயே இப்படி கண்ணைக்கட்டுதே,அய்யோ நான் எஸ்கேப்.

SUMAZLA/சுமஜ்லா said...

அக்கா, என்ன சுவையா சொல்லி இருக்கீங்க?!! அது என் போன்ல இருந்து தான் வந்ததுன்னு சொல்லாம விட்டுட்டீங்க! ஆனா, நீங்க பயந்திங்களோ இல்லையோ, போலீஸ்னதும் நான் பயந்தே போயிட்டேன். ஏதோ, விளையாட்டு எஸ்.எம்.எஸ்.னு நினைத்து நானும் ஸ்க்ரோல் பண்ணி பண்ணி பார்த்தேன். மிரட்டிட்டீங்க!

asiya omar said...

சுஹைனா,நீங்க தான் அந்த பிரபல ப்ளாக்கர்னு சொல்லலாம்னு நினைசேன்,நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியாதே,நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்,நீங்கள் ஒரு எதார்த்த மனுஷின்னு சொல்லாமல் சொல்லிட்டீங்க.

மகி said...

ஆசியாக்கா..நான் வழக்கம் போல உங்க பதிவைப் படிச்சதுமே கால் வந்தது சுமஜ்லா கிட்ட இருந்துதான்னு கண்டுபிடிச்சுட்டேன்..ஹி,ஹி!!

asiya omar said...

மகியா கொக்கா?நான் தான் மக்கு.

kavisiva said...

அழகா சொல்லியிருக்கிங்க ஆசியா!

asiya omar said...

நன்றி கவிசிவா.சிறிது நாளாக காணோம்னு நினைச்சேன்.வ்ந்திட்டீங்க.

kavisiva said...

//நன்றி கவிசிவா.சிறிது நாளாக காணோம்னு நினைச்சேன்.வ்ந்திட்டீங்க//

உங்களுக்குத்தான் தெரியுமே ஆசியா நான் அடிக்கடி சொல்லாமல் கொள்ளாமல் சிங்கப்பூர் ஓடிவிடுவேன்னு :-). அப்படி ஒரு திடீர் பயணம் போனவாரம். இப்பதான் ஒவ்வொரு பதிவா படிச்சு பின்னூட்டம் கொடுத்துக்கிட்டு இருக்கேன்.