Thursday, February 25, 2010

ஈசி வத்தக்குழம்பு















தேவையான பொருட்கள்;


சுண்ட வத்தல் – ஒரு கைபிடி
சாம்பார் பொடி – 1 டேபிள்ஸ்பூன்
இட்லி மிள்காய்ப்பொடி – 1-2 டீஸ்பூன்
புளி – சிறிய எலுமிச்சை அளவு
கருவேப்பிலை – 2 இணுக்கு
நல்ல எண்ணெய் – 100 மில்லி
உப்பு – தேவைக்கு

செய்முறை ;
சுண்ட வத்தலை சிறிது எண்ணெய் விட்டு பொரித்து எடுக்கவும்.
பாதியை சாம்பார் பொடி,இட்லி மிளகாய்ப்பொடியுடன் மிக்ஸியில்
சுற்றி எடுக்கவும்.
கரைத்த புளியில் மிக்ஸியில் பொடித்ததை போட்டு கலந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கருவேப்பிலை போட்டு வெடித்ததும்,புளிக்கரைசலை விட்டு பொரித்து எடுத்து வைத்த
சுண்ட வத்தலை போட்டு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் சிம்மில் வைக்கவும்.எண்ணெய் மேலெழும்பி வரும்.அடுப்பை அணைக்கவும்.
ஈசியான சுவையான வத்தக்குழம்பு சில நிமிடத்தில் ரெடி.சாதம்,அப்பளம்,கூட்டுடன் பரிமாறவும்.

பின் குறிப்பு :
இட்லிமிள்காய்ப்பொடியிலும்,சுண்டவத்தலிலும் உப்பு இருக்கும்,உப்பு பார்த்து போடவும்.

ஆசியா உமர்.

16 comments:

ஜெய்லானி said...

சமைத்து அசத்துங்க!!!

suvaiyaana suvai said...

This is new one with Idli milakay podi.
I'll try one time

prabhadamu said...

அக்கா வத்தக் குழம்பு பாக்கும் போது வாயில் நீர் ஊறுகிறது. சூப்பர் அக்கா.

asiya omar said...

ஜெய்லானி கருத்திற்கு நன்றி.ஒரேடியாக சமையலும் இருக்காது.மற்றதும் இருக்கும்.திக் திக் கால் போய் பாருங்க,அந்த பிரபல ப்ளாக்கர் கருத்து சொல்லி இருக்காங்க.

asiya omar said...

சுஸ்ரீ சும்மா இதெல்லாம் ஐடியா சமையல் தான்.

asiya omar said...

ப்ரபாதாமு ,கொஞ்சம் போட்டு பிசைந்து கூட்டு,பொரியல் அப்பளமுடன் சாப்பிட்டால் திவ்யமாக இருக்கும்.நெய் கூட சேர்த்து சாப்பிடலாம்.

மங்குனி அமைச்சர் said...

மேடம் சுடு தண்ணி எப்படி வக்கிறதுன்னு ஒரு 4 பக்கதுகுள்ள எழுதுங்களேன் (எப்ப பாரு சாப்பாடு, சமையல் ,புடவை, நக சுத்த போருப்பா நீங்க )
ஒரு காமெடி இல்ல ஒரு மொக்க ட்ரை பன்னகூடாதா ????

asiya omar said...

அமைச்சரே அனுபவத்தில் எங்க வீட்டு அபியை பத்தி கொஞ்சம் வாசித்து பாருங்க,எல்லாம் கலந்து கொடுக்க ட்ரை பண்றேன்.இப்பதான் மொக்கைன்னா என்னன்னு தெரிகிறது.

மங்குனி அமைச்சர் said...

அபி - ய போய் பார்த்தேங்க உங்களுக்குள்ள இவ்வளவு தெறம ஒளிஜிக்கிட்டு இருக்கிறத நினச்சா ................................................................................................................................................................. நாண்டுகிட்டு சாகலாம் போல இருக்கு (அங்கயும் புல்லா சமைகிறது சாபிடுறத பத்தி தான் எழுதிருக்கிங்க)

sulthana said...

Dear aunty, actually i ve bought these turkey berries from india, but have not tried it so far. In fact, i asked mom and mami during chat abt this receipe. I wil surely try this one and let u know for sure.I luv these turkey berries along with pappad and spicy coconut chutney.Yummy!!!

ஜெய்லானி said...

///மங்குனி அமைச்சர் said...மேடம் சுடு தண்ணி எப்படி வக்கிறதுன்னு ஒரு 4 பக்கதுகுள்ள எழுதுங்களேன் //

மங்குனி சுடுதண்ணில இதுவர குளிச்சதே இல்லையா ? 4 பக்கத்துக்கு கேக்கிர !! பாத்துயா!!கப்சி ஸ்மெல் அடிக்குது..

டீக்கடையில ஒரு கிளாஸ் வாங்கு அது போதும் உனக்கு.

asiya omar said...

sulthana most welcome.how is life in italy?turkey berries - oh i must say the botanical term of sundaikai (solanam tarvum).yesterday 1 saw your mami,she gave me some nuts and hawaaian gums (from italy),it tastes good.my regards to naseem.

asiya omar said...

ஜெய்லானி,மங்குனியும் நீங்களும் போடுற மொக்கை தாங்க முடியலை,அதற்கு என் ப்ளாக் தான் கிடைச்சுதா?

sulthana said...

Conveyed your regards to him.mami told abt ur visit and heard u r goin to dbx nxt mnth.i tried your receipe with a slight variation. I added tomatoes and onion to make it a thick gravy, rest was same as u mentioned. It came well and he liked it vry much.

asiya omar said...

yes aulthana,i also used to do sometimes like you.thanks for your comment.

asiya omar said...

மங்குனி அமைச்சரே,சமையல் பற்றிய ப்ளாக்கில் சமையல் பற்றி எழுதினால் தானே பொருத்தமாக இருக்கும்.