Friday, February 26, 2010

கொத்துக்கறி கோஸ் / Cabbage Keema Curry


தேவையான பொருட்கள்;-
கொத்துக்கறி - கால் கிலோ
முட்டை கோஸ் – கால் கிலோ
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – 2 பெரியது
தக்காளி – 2
மிளகாய் -1
தயிர் – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
கரம்மசாலா –கால்டீஸ்பூன்
மிளகாய்த்தூள் –அரைஸ்பூன்
குழம்புமசாலாத்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு -4
மல்லி இலை- சிறிது
உப்பு – தேவைக்கு

செய்முறை:


கறியை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடிகட்டிக்கொள்ளவும்.
கோஸ்,வெங்காயம்,மல்லி,தக்காளி கட் செய்து கொள்ளவும்.தேங்காய்,முந்திரி அரைத்து கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் வீட்டு காய்ந்ததும் வெங்காயம் வதக்கி,இஞ்சி பூண்டு,கரம்மசாலா, சேர்த்து வதக்கவும்,பின்பு தக்காளி,மல்லி,மிளகாய்,உப்பு சேர்த்து பிரட்டவும்.
கறியை சேர்க்கவும்,தயிர்,மிளகாய்த்தூள்,மசாலாத்தூள் சேர்த்து பிரட்டி குக்கரை மூடி 3 விசில் வைக்கவும்.
ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து முட்டை கோஸ் சேர்த்து,தேங்காய் விழுது சேர்த்து உப்பு பார்த்து குக்கரை மூடி 1 விசில் வைத்து இறக்கவும்.சுவையான கொத்துக்கறி கோஸ் கூட்டு ரெடி.
இதனை சப்பாத்தி,மற்றும் ரசம் சாதமுடன் பரிமாறலாம்.

15 comments:

ஜெய்லானி said...

நீங்க சொன்ன மாதிரி ஈசி வத்த குழம்பு வச்சிப் பார்தேன். ஹீம்...உங்க கை பக்குவம் போல வரலியே...

asiya omar said...

ஜெய்லானி இட்லி மிளகாய்ப்பொடி இல்லாமல் சாம்பார் பொடி மட்டும் கூட் போட்டு வைக்கலாம்.முதலில் செய்யும் பொழுது சரியா வராது.திரும்ப செய்யும் பொழுது நல்ல வரும்.

Chitra said...

இந்த அருமையான ரெசிபிக்கு நன்றி.

prabhadamu said...

ஆசியா அக்கா. எப்பயும் இப்படி நாவில் நீர் ஊறவைத்து என்னை கஷ்டப்படுத்த கூடாது. இது கொஞ்சம் கூட நல்லா இல்லை.

இனி நீங்கள் செய்யும் சமையல் எல்லாம் எனக்கு எங்கள் வீட்டில் பார்சல் வந்தால் தான் இனி உங்கலுக்கு பதில்.

asiya omar said...

சித்ரா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

ப்ரபா அனுப்பிட்டா போச்சு.கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

ஸாதிகா said...

அட..வித்த்யாசமாக இருக்கே!பொதுவாக நெல்லை மாவட்ட முஸ்லிம்கள் காய்கறிகளில் கூட்டு சமைக்கும் பொழுது கூடவே மாசி,எறால்,இறைச்சி போன்றவற்றை அதிகம் சேர்ப்பார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்.உண்மையா?

asiya omar said...

தினமும் நான்வெஜ் மணம் இல்லாமல் இருக்காது,அதனால்லேயே ஏதாவது இப்படி எல்லாவ்ற்றிலும் எங்கள் வீட்டில் காயை சேர்ப்பதுண்டு.ஸாதிகா நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம்.

மங்குனி அமைச்சர் said...

மேடம் அப்ப கோபம் எதுவும் இல்லையே? நீங்க வேற உங்க சமையல் குறிப்பில ரெண்டு மூன எடுத்து என் வொயிப் கிட்ட குடுத்து இருக்கேன்

saleemyousuf said...

my favourite karooli chaachi enaku romba pidikum............

SUMAZLA/சுமஜ்லா said...

//அதனால்லேயே ஏதாவது இப்படி எல்லாவ்ற்றிலும் எங்கள் வீட்டில் காயை சேர்ப்பதுண்டு//

வழிமொழிகிறேன். அப்புறம் எப்படிப்பா இப்படி சமைக்க சமைக்க பொறுமையா போட்டோ எடுக்கறீங்க???

asiya omar said...

சுஹைனா டெய்லி எடுத்தால் நிறைய போடலாம்,என்னால் முடியலை,இங்கு ஊரில் ஆள் வருவதும் போவதும் அவ்ர்களிடம் பேசுவதும் கவனிப்பதும் இதற்கு தான் அதிக நேரம் தேவைப்படுகிறது.ஏற்கனவே நான் மற்ற தளங்களில் கொடுத்த குறிப்பாகவும் இருக்கக்கூடாது.பார்ப்போம்.வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

சலீம் வா செய்து தருகிறேன்,தவறாமல் வருகை தருவது மகிழ்ச்சி.

Krish said...

Asiya, today only I could spare time to fully go through your blog. Really, we, especially I am so astonished about your neat, cool and natural presentation of each and every article. We are so proud that we had also been your favourite guests and tasted some delicious foods since 1992. Please continue the simplicity in writing - With best wishes Krish & Radhika

asiya omar said...

கிறுஷ்ணவேல் சார்,ராதிகா உங்கள் இருவரையும் வருக வருக என்று வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.