Monday, March 1, 2010

காலம் மாறிப்போச்சு

நெல்லை,தூத்துக்குடிமாவட்ட பள்ளிக்கூடங்கள் சார்பாக பாளயங்கோட்டையிலே நடந்த spartan spelling bee zonal competition - க்கு என் மகளை அழைத்து போன போது எடுத்தது.ப்ளாக்கர் கண்ணாடி போட்டாச்சில்ல இனி அந்த கண்ணோட்டம் தான்.தயாராகிக்கொண்டிருந்த மாணவக்கண்மணிகளை பார்த்தால் பையன்கள் சீரியஸாக படிச்சிட்டு இருந்தாங்க,பொண்ணுங்க அரட்டை கச்சேரி தான்,நம்ம காலம் வேற இந்தக்காலம் வேறல்லோ! பையன்களுக்கு ரொம்ப பொறுப்பு வந்துவிட்டது.காலம் மாறிப்போச்சுங்க.


பிள்ளைங்கள் அனுப்பிவிட்டு பெற்றோர்கள் வெயில் கூடத்தெரியாமல் மொக்கை போட்டுகிட்டு இருக்காங்க.

வெற்றி பெற்றவர்கள் லிஸ்ட்காக பெற்றோரின் அலைபாயும் கூட்டம்.நமக்கு சும்மா ஒரு இடத்தில் இருக்க பிடிக்காமல் கிளம்பியாச்சு.கையில் தான் கேமரா இருக்கே.zonal நடந்த பள்ளியில் காந்தி சிலையை பார்த்தவுடன் ஜலீலா மகன் நினைவு வந்தது,உடனே கிளிக்கியது.

லவ் பேர்ட்ஸ் கூண்டை பார்த்தவுடன் செல்விக்கா நினைவு,இந்தாங்க இத்தனை லவ் பேர்ஸ்சும் உங்களுக்கு தான்.அதிரா இந்த அழகான நீந்தும் வாத்தை பார்த்தவுடன் நம்ம தாராவின் (அதிரா)நினைப்பு வந்து விட்டது.தாரா தாரா வந்தாரா சங்கதி எல்லாம் சொன்னாரா?


ஸ்டேட் லெவலில் செலக்ட் ஆகிவிட்டோம்னு சந்தோசமாக குச்சி ஐயிஸ் சாப்பிடும் குயின்.காலையில் பத்து மணிக்கு போய்விட்டு மாலை ஆறானது.நல்ல அனுபவம்.
--ஆசியா உமர்.

24 comments:

ஸாதிகா said...

ஆஹா..அருமை.///ப்ளாக்கர் கண்ணாடி போட்டாச்சில்ல இனி அந்த கண்ணோட்டம் தான்///உண்மைதான் தோழி..இனி போகின்ற இடமெல்லாம் பிளாக்குக்காக கேமராவைத்தூக்க வேண்டியதுதான்.சந்தோஷமாக குச்சி ஐஸ் சாப்பிடும் குயீன் ருமானா தானே?ஸ்டேட் லெவலில் செலக்ட் ஆகியாச்சா?ரொம்ப சந்தோஷம் தோழி.என் வாழ்த்துக்களும்,துஆக்களும்.

asiya omar said...

நன்றி தோழி,உங்க பாராட்டிற்கும்,வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.

suvaiyaana suvai said...

Congrats!

asiya omar said...

thanks susri.

இலா said...

அருமையான பதிவு... குச்சி ஐஸ் சாப்பிடும் குவீன் வாழ்த்துக்கள்!!! :))

அடடா.. என் கிட்ட one specific புத்தகம் இருக்கே( published in 1950) எப்படி அனுப்ப??

asiya omar said...

இலா வாழ்த்து,பாராட்டுக்கு மகிழ்ச்சி.1950 லேயே இந்த fever வந்திடுச்சா?

ஜெய்லானி said...

சமையலில் தான் அசத்துவீங்கன்னு பாத்தால், போட்டோவும் அதுக்கு கமெண்ட்ஸும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....ஓகே!! ஓகே!!.இதிலேயும் அசத்துங்க!!!

Chitra said...

வாழ்த்துக்கள்.

Chitra said...

very good photos. அந்த குச்சி ஐஸ் -------- I miss it!!!!

மகி said...

Congrats to Rumaana aasiyaakka!

அன்புடன் மலிக்கா said...

நல்லதொரு பதிவு..

Jaleela said...

எல்லா ப‌ட‌மும் அருமை , அங்கு போயிம் என் பைய‌ன் ஞாப‌க‌ம் வ‌ந்த‌து ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம்,
அதிராவின் அன்ன‌ம் அருமை. செல்வி அக்காவின் லவ் பேர்ஸ்ஸும் சூப்ப‌ர்,

ஐ குச்சி ஐஸ் என‌க்கும் சாப்பிட‌னும் போல‌ இருக்கு.

ஆமாம் பொண்ணுங்க இந்த காலத்தில் ஹாயா அர‌ட்டை பாவ‌ம் பைய‌ன்க‌ளுக்கு பொறுப்பு அதிக‌ம் தான்

Jaleela said...

ஸ்டேட் லெவலில் செலக்ட் ஆகிவிட்டோம்னு சந்தோசமாக குச்சி ஐயிஸ் சாப்பிடும் குயின் ருமானாவுக்கு வாழ்த்துக்கள்

asiya omar said...

ஜெய்லானி நீங்கள் கொடுக்கும் ஊக்கத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

மலிக்கா உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .

asiya omar said...

சித்ரா அவ வாங்கி கேட்டா நாமெல்லாம் அனுபவிச்சு இருக்கோமே என்று வாங்கி கொடுத்தேன். வாழ்த்துக்கு மகிழ்ச்சி .

asiya omar said...

You are most welcome,thanks mahi.

asiya omar said...

ஜலீலா இனி காந்தி கண்ணாடி பார்த்தாலே ஹக்கீம் நினைவு விடும்.வாழ்த்திற்கும் ,கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

saleemyousuf said...

saleem: congrats rumaanah
creative writing chaachi
keep going!!!!!!!!!!!

asiya omar said...

thanks saleem.

athira said...

ஆகா ஆசியா.. எப்படி இதை நான் மிஸ் பண்ணினேன்... சோடி அன்னம் சூப்பரோ சூப்பர். பூனை அங்கு இருக்கவில்லையோ?

நல்லவேளை நீங்கள் சொன்னதால் தேடிக்கண்டுபிடித்தேன்.... அந்த இடத்தில் என் ஞாபகமும் வந்ததுக்கு மிக்க நன்றி. அழகான சுற்றுலாவாக இருக்கு உங்கள் dayசுற்றுலா..

asiya omar said...

இரண்டும் நீந்தி கொண்டு இருந்தது,மற்றவை(ducklings) நடை பயின்று கொண்டு இருந்தது,பூனை இல்லாமலா?என் கேமராவில் சிக்கவில்லை.

செந்தமிழ் செல்வி said...

மகளுக்கு வாழ்த்துக்கள் ஆசியா.

ஐ! அத்தனையும் எனக்கா??!!! அங்கேயே இருக்கட்டும், கூண்டை பெரிதாக்கி விட்டு எடுத்துக்கறேன். லவ்பேர்ட்ஸ்னாலே என் நினைவு வருதா ஆசியா? நன்றி.

asiya omar said...

செல்விக்கா,வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.உங்கள் லவ்பேர்ட்ஸ் தொடர் என் மனதில் பதிந்து விட்டது,very touching.ஒரு நல்ல தாயின் பரிவை அதில் பார்த்தேன்.