Saturday, February 20, 2010

சிறு கிழங்கு பொரியல்











தேவையான பொருட்கள் ;
சிறு கிழங்கு - அரை கிலோ
வெங்காயம் - 2 பெரியது
பூண்டு - 2 பல் 
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு

செய்முறை :
சிறு கிழங்கை மண் ,அழுக்கு போக கழுவி சிறிது நேரம் தண்ணீரில் போட்டு தோல் நீக்கி பொடியாக கட் செய்து ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரிலேயே போடவும்.வெங்காயம் கட் செய்து கொள்ளவும்.

அதனுடன் உப்பு சேர்த்து வேகவைக்கவும்,பக்குவமாக வெந்தவுடன் தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.
சீரகம்,மிளகாய்,பூண்டை மிக்ஸியில் சுற்றி,தேங்காய் துருவலாக இருந்தால் அதனுடன் சேர்த்து மிக்ஸியில் 2 பல்ஸ் செய்தால் போதும்,பூந்துருவலாக வந்துவிடும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம் பருப்பு,கருவேப்பிலை போட்டு வெடித்தவுடன் வெங்காயம் போட்டு சிறிது வதக்கவும்,ரெடி செய்த தேங்காய் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி அதனுடன் வேகவைத்த சிறு கிழங்கை சேர்க்கவும்.சிறிது அடுப்பை சிம்மில் வைத்தால் பொரியல் ஆகிவிடும்.

உதிரி உதிரியாக பார்க்க அழகாக இருக்கும்.மல்லி இலை விரும்பினால் கட் செய்து தூவி இறக்கவும்.

ருசியான சிறு கிழங்கு பொரியல் ரெடி.


டிப்ஸ் ;அசைவப்பிரியர்கள் இந்த சிறுகிழங்கை,கொத்துக்கறியுடனும், மீனுடனும் சேர்த்து சமைத்தால் அசத்தலாக இருக்கும்.
நாங்க எங்க வீட்டில் அயிரை மீனை சிறு கிழங்கு சேர்த்து கூட்டு செய்வோம்.சூப்பராக இருக்கும்.

-ஆசியா உமர்.

5 comments:

neela said...

hi,
excellect job.......u r really great. I have some questions. please answer it
1. How the siru kilangu look like.

2. How to choose senai kilangu...i bought one time and it was not nice

thank you.

asiya omar said...

நீலா வருகைக்கு மகிழ்ச்சி.சிறுகிழங்கு சின்னதாக உருண்டையாக கரும்ப்ரவுன் கலரில் இருக்கும்.கருணைக்கிழங்கு மாதிரி சின்னதாக உருண்டையாக இருக்கும்.தைமாதம் பொங்கல் சமயம் தமிழ் நாட்டில் அதிகமாக கிடைக்கும்,இனி ஊர் வந்தால் தான் வாங்கி சமைக்கமுடியும்,இங்கு மார்க்கெட்டில் இருந்தால் படம் இணைக்கிறேன்.

சேனைக்கிழங்கு பெரியதாக இருப்பதால் மார்க்கெட்டில் கட் செய்து வைத்திருப்பாங்க,ஈசியாக நல்லது கெட்டதை தரம் பிரித்து விடலாம்.உட்புறம் ஈரப்பதமாக இருக்கணும், கருப்படிக்காமல்,பச்சை கலராமல், ப்ரைட் ஆரஞ்மஞ்சள் கலரில் இருந்தால் வாங்கலாம்.நாட்பட்டது வாங்கினால் ருசியாக இருக்காது.

இமா said...

நான் கேட்க நினைத்ததை நீலா கேட்டு நீங்கள் பதிலும் சொல்லி விட்டீர்கள் ஆசியா. இது சேனைக் கிழங்கு போலவே சின்னதாக இருக்குமோ?

கோமதி அரசு said...

எங்கள் ஊரில் கிடைக்கும் சிறுகிழங்கு பொங்கல் சமயத்தில் வரும்.
இங்கு கிடைப்பது இல்லை.
ஊரிலிருந்து வரும் போது வாங்கி வந்தால் செய்யவேண்டும்.
சிறுகிழங்கு பொரியல் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும்.

Asiya Omar said...

இமா வருகைக்கு மகிழ்ச்சி.நன்றி.

கோமதியக்கா மிக்க நன்றி.நெல்லையில் இந்த சீசனில் சூப்பராக கிடைக்கும்.இங்கும் கிடைக்கிறது.அதனால் எப்பவாவது வாங்கி செயவதுண்டு.