Monday, February 22, 2010

சுரைக்காய் கடலைபருப்பு கூட்டு
















தேவையான பொருட்கள் ;
சுரைக்காய் – கால் கிலோ
கடலை பருப்பு – 50 கிராம்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – அரை ஸ்பூன்(விரும்பினால்)
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – கால் ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 1
கருவேப்பிலை மல்லி இலை – சிறிது
தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு –தேவைக்கு

செய்முறை :
சுரைக்கயை தோல் சீவி சிறியதாக கட் செய்து வைக்கவும்,பிஞ்சாக இருந்தால் விதை நீக்காமல் கட் செய்யவும்.
கடலை பருப்பை ஊற வைக்கவும்.வெங்காயம்,தக்காளி,மல்லி இலை கட் செய்யவும்,மிளகாயை கீறி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு,வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடித்ததும்,வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட்,சேர்த்து வதக்கி,தக்காளி,மிளகாய் சேர்த்து,மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் சேர்த்து,சுரைக்காய்,கடலை பருப்பு ,உப்பு சேர்த்து கிளரவும்.சுரைக்காயில் ஊறும் தண்ணீரே போதும். மூடி வெயிட் போடவும்.2 விசில் விடவும்.
ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து தேங்காய் துருவல் சேர்த்து கிளறி மல்லி இலை தூவி பரிமாறவும்.
சுவையான சுரைக்காய் கடலைபருப்பு கூட்டு ரெடி.இதனை சாதம்,சப்பாத்திக்கு சைட் டிஷ் ஆக பரிமாறலாம்.
-ஆசியா உமர்.

6 comments:

Mrs.Menagasathia said...

என் செய்முறையும் இதே தான் ஆசியாக்கா.ரொம்ப நல்லாயிருக்கு....

asiya omar said...

நன்றி மேனகா.நீங்களும் இஞ்சி பூண்டு சேர்ப்பீங்களா?

Mrs.Menagasathia said...

இஞ்சி பூண்டு இருந்தால் சேர்ப்பேன் இல்லைன்னா சேர்க்க மாட்டேன் ஏன்னா அரைப்பதற்க்கு சோம்பேறிதான்...

மகி said...

இஞ்சி பூண்டு இது வரைக்கும் நான் சேர்த்ததில்லை..சுரைக்காய்ல பொரியல், குழம்பு தான் செய்திருக்கேன்..இந்த கூட்டு புதுசா இருக்கு..ரெசிப்பிக்கு நன்றி ஆசியாக்கா!

asiya omar said...

மகி மகிழ்ச்சி,துவரம் பருப்புடனும் சமைத்தால் அருமையாக இருக்கும்.

Mahi said...

ஆசியாக்கா,நேற்று சப்பாத்திக்கு இந்த கூட்டுதான் செய்தேன்,சூப்பரா இருந்தது.என்னவருக்கும் மிகவும் பிடித்தது. :)