Monday, March 1, 2010

ஊர் கந்தூரி ஸ்பெஷல்,மட்டன் அக்னி குருமா.

எங்க ஊரில் ஊர்கந்தூரி ரொம்ப விஷேசமாக இருக்கும், ஒவ்வொரு தெருவிலும் இரண்டு மூன்று கொந்து இருக்கும்,கொந்து என்றால் பிரிவு(கூட்டம்னு சொல்லலாம்)ஒரு தெருவில் சுமார் இருநூறு வீடு இருக்கும்,இருநூறு வீட்டிற்கும் சேர்த்து ஒரே சமையலில் ஊரார் கூடி ஆக்கி சாப்பிடுவது தான் இந்த ஊர்ச்சோறு.இதனை நபிகள் நாயகம்(ஸல்) அவ்ர்கள் பிறந்த தினமாகிய ரபியுல் அவ்வல் மாதம் பிறை 12 -டில்(மீலாதுந்நபி) கொண்டாடுவது வழக்கம்,அந்த நாளில் தான் இந்த ஊர் சோறு ஆக்கி பகிர்ந்து சாப்பிட்டு மகிழ்வது வழக்கம்.
ஊர் தலைவரின் மருமகள் கேமராவை தூக்கிட்டு சமைக்கிற இடத்துக்கு சென்றால் அதுவே பெரிய கொண்டாட்டமாகிவிடும்.எங்க ஊரு கொஞ்சம் பட்டிகாடா பட்ட்ணமா தான்.அதனால எங்க வீட்டு வாசலில் நின்று கிளிக்கிய ஒரே படம்,இந்த தடவை எங்க கொந்தில் மருந்து சோறும் தால்ச்சாவும்.கறி சால்னா அவரவர் வீட்டில் ஆக்கி கொள்ளனும்,வசதி படைத்தவர்கள் பணமோ பொருளாகவோ(அரிசி,பருப்பு மற்றும் இதர செலவிற்கு தொகை கொடுப்பது வழக்கம்) மிகுதியை வசூல் செய்து கொள்வார்கள்.மருந்து சோறு ரெடியாகிட்டு இருக்கு.இது மாதிரி மூன்று பாத்திரத்தில் சமைத்தார்கள்.எங்கள் தெருக்கள் பொது சுவரோடு எளியவர்,வசதி படைத்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் சேர்ந்து வாழ்வது வழக்கம்.


சரி நான் என்ன சமைத்தேன்,வீட்டில் மட்டன் அக்னி குருமா,சிக்கன் ஃப்ரை,அப்புறம் ஆனியன் ரைத்தா அவ்வளவே தான்.அதற்கு
தேவையான பொருட்கள்;
மட்டன் - 1 கிலோ
வெங்காயம் - 4
தக்காளி - 4
பச்சை மிளகாய் -4
மல்லிகீரை,புதினா -கைபிடியளவு
தயிர் -100 மில்லி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் குவியலாக
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
கரம் மசாலா- அரை ஸ்பூன்
எண்ணெய் - 100 மில்லி
தேங்காய் - ஒரு மூடி
முந்திரிபருப்பு - 10
உப்பு -தேவைக்கு.

பரிமாறும் அளவு - 8 நபர்.
செய்முறை:
கறியை சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீர் வடித்து எடுக்கவும்.குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் சிறிது வெங்காயம் வதக்கி,இஞ்சி பூண்டு பேஸ்ட் ,கரம் மசாலா போட்டு வதக்கி,தக்காளி,மீதி உள்ள வெங்காயம்,மல்லி,புதினா,உப்பு போட்டு சிறிது பிரட்டி,மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,சீரகத்தூள்,பெருஞ்சீரகத்தூள் சேர்த்து,மட்டன், தயிர் சேர்த்து பிரட்டி சிறிது தண்ணீர் தெளித்து குக்கரை மூடி வேக விடவும்.தண்ணீர் அதிகம் சேர்க்காமல் வேகவைத்தால் மசாலா சார்ந்து இருக்கும்.குக்கரை 3-5 விசில் கறியின் தன்மையை பொருத்து வைத்து இறக்கவும்.கறி வெந்து இறக்கியவுடன் இப்படி இருக்கும்.


அரைத்த தேங்காய்,முந்திரி விழுதை சால்னா தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து விட்டு கொத்திக்கவிட்டு,தேங்காய் வாடை மடங்கி மணம் வரும்போது அடுப்பில் சிம்மில் வைக்கவும்.


சிம்மில் வைத்தால் எண்ணெய் மேலெழும்பி இப்படி அக்னி மாதிரி சால்னா வரும்,அடுப்பை அணைக்கவும்.சால்னா கொஞ்சம் திக்காக இருக்குமாறு வைக்கவும்.பரிமாறும் பொழுது எண்ணெய்யை நீக்கிவிட்டு எடுத்தால் கடைசிவரை எண்ணெய் நெலுநெலுப்புடன் இருக்கும்.சூப்பர் சுவையான மட்டன் அக்னி குருமா ரெடி.இதனை நெய்சோறு,தேங்காய் சோறு,மருந்து சோறு,பரோட்டா,சப்பாத்தி,நாண்,ஆப்பம் உடன் பரிமாறலாம்.

மருந்து சோறு ரெசிப்பிக்கு இங்கு கிளிக்கவும்.
-ஆசியா உமர்.

15 comments:

ஸாதிகா said...

களறி சோறு,கந்தூரி சோறு ஆசையை தூண்டிவிட்டுவிட்டீர்களே நியாயமா?ஆசைப்பாட்டேன் என்று என் உம்மா போன வருஷம் களறி சோற்றை ஐசில் வைத்து ஊரில் இருந்து வந்த ஆளிடம் அனுப்பி வைத்தார்கள்.என்ன இருந்தாலும் ஃபிரஷ் ஆக சாப்பிடுவது போல் இருக்குமா?நான் ஊருக்குப்போகும் சமயம் இப்படி எந்த விஷேஷமும் வருவதில்லை.:-(

Chitra said...

உங்கள் அக்னி குருமா வாசனை, மூக்கை துளைக்குது.

Thank you for sharing the recipe.

ஜெய்லானி said...

///ஸாதிகா said...நான் ஊருக்குப்போகும் சமயம் இப்படி எந்த விஷேஷமும் வருவதில்லை.//

என்நிலையும் இதுதான். போட்டோவை பாத்தே ஏங்க வேண்டீருக்கு என்ன செய்ய. இக்கரைக்கு அக்கரை பச்சை.

asiya omar said...

சித்ரா செய்து பாருங்க,நான் மல்லித்தூள் போடமாட்டேன்,சிலபேர் அதையும் சேர்ப்பாங்க,மல்லித்தூள் போட்டால் கொஞ்சம் வெடு வெடுன்னு இருக்கும்.பிரியம்னால் சேர்த்து செய்யுங்க.

asiya omar said...

ஊருக்குப்போனால் வித விதமாக சமைத்து அசத்துவாங்க தானே,அப்ப எஞ்சாய் பண்ணுங்க.அப்புறம் இந்த தமிலிஷ் ஓட்டு போடவும்,இணைக்கவும் முடியலை,என் பாஸ்வேர்டு மறந்து forgotten,போனாலும் புதுசாக பாஸ்வேர்ட் செட் பண்ண சொல்லி மெயில் வந்தது,அதுக்கு போனால் எரர் வருது.மண்டையை போட்டு உருட்டாமல் எதுவும் நடக்க மாட்டேங்குது.

Jaleela said...

ஊரில் மொத்தமா ஆக்குற சோறு ம்ம் அப்பா வாசம் இங்கு வரை வருது.

அதுவும் களறி சோறு அதன் சுவையே தனி தான்

asiya omar said...

ஜலீலா ஆமாம்,மணமாகத்தான் இருக்கும்,அதனை மறு நாள் தீயெரிச்சு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

மங்குனி அமைச்சர் said...

டாக்டர்ஸ் எல்லாம் வேஸ்டா பசிக்கு டேப்லட் எழுதி குடுக்குராங்க, பேசாம உங்க ப்ளாக்-யும் நம்ம ஜலீலா மேடம் ப்ளாக்-யும் பாக்க சொன்னா போதும் , பசி தான வரும்

asiya omar said...

வாங்க அமைச்சரே,அப்படியே அந்த ப்லேட்டை எடுத்து சாப்பிடுங்க.

Rahila said...

hi asiya akka
Really superb.keep it up. thanks for giving a appoutunity to see miladi nabi food photos from here.
i made everything same like that(but it doesn't taste like that).
navaz stated checking u r website daily.
Rahila

athira said...

சூப்பர் ஆசியா.... பார்க்கத்தானே முடியுது என்னால்:(... எனக்கும் இப்படி சமைத்து எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவதென்றால் நன்கு பிடிக்கும்.

asiya omar said...

அதிரா நாம தான் கறபனையிலே குதிரை ஓட்டுகிறவங்க ஆச்சே,எடுத்து சாப்பிட்டா போச்சு.உங்கள் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

mohamed said...

///தீயெரிச்சு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.///அப்படி என்றால் என்ன ஆசியா??

asiya omar said...

எங்க ஊரில் முதல் நாள் ஆக்கிய சோறை கறி சால்னா,தால்ச்சா இரண்டும் மிக்ஸ் செய்து கொதிக்க வைத்து அதில் விஷேச சோறை போட்டு கிண்டி வைத்து சாப்பிடுவது.இப்ப கேஸ் அடுப்பு,அந்தக்ககாலத்தில் விறகு அடுப்பு தீயை உண்டாக்கி இதனை செய்வதால் இந்த பெயர்.

asiya omar said...

rahila,thanks for your comment,i know you are an excellent cook.