Thursday, March 4, 2010

நெல்லை சிக்கன் தம் பிரியாணி

 உங்கள் எல்லோருக்கும் பிரியாணி பரிமாறனும்னு ஆசை எல்லோரும் வந்து ரசித்து ருசித்து சாப்பிட வாங்க.தானே செய்யனும்னு ஆசைப்படுறவங்க செய்முறையை பாருங்க,உங்களுக்காக பெரிய பாத்திரத்தில் நிறைய செய்து இருக்கேன்.சாப்பிட்டுட்டு கருத்து சொல்லிட்டு போங்க.அது போதும் எனக்கு.மொத்தமாக செய்த ஏழு கிலோ பிரியாணி இது, நான் உங்களுக்காக 1 கிலோ அளவை கொடுத்திருக்கிறேன்.

தேவையான பொருட்கள்;
ஒரு கிலோ சீரக சம்பா பச்சை அரிசிக்கு அல்லது பாசுமதி அரிசி
ஓண்ணேகால் கிலோ சிக்கன்
இஞ்சி பூண்டு விழுது - 3 டேபிள்ஸ்பூன் குவியலாக
கரம் மசாலா - ஒன்றரை - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2- 3 டீஸ்பூன்( 2 டீஸ்பூனே போதுமானது)
ஏலம் - 5
பட்டை - 2 துண்டு
கிராம்பு -5
எண்ணெய் - 150 மில்லி
நெய் - 150 மில்லி
வெங்காயம் - 300-400 கிராம்
தக்காளி - 400 கிராம்
பச்சை மிள்காய் - 8
மல்லி ,புதினா - தலா இரண்டு கைபிடி
எலுமிச்சை -பெரியது -1
தயிர் - 200 மில்லி
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
கலர் - ஆரஞ்ச் ரெட் பின்ச்
லெமன் யெல்லோ - பின்ச்
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
சிக்கனை தயிரில் பாதி,ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு ,சில்லி பவுடர் ஒரு டீஸ்பூன்,சிறிது உப்பு சேர்த்து ஊற வைக்கவும்.

பிரியாணி பாத்திரத்தில் எண்ணெய் நெய் கலந்து நீளவாக்கில் கட் செய்த வெங்காயத்தை சிவற வதக்கவும்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா சேர்த்து பிரட்டி சிம்மில் வைத்து மூடவும்,மணம் வந்தவுடன் மல்லி,புதினா தலா ஒரு கைபிடி சேர்க்கவும்.கிளறவும்.

கட் செய்த தக்காளி,மிளகாய்,1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து நன்கு வதங்கினால் எண்ணெய் மேலெழும்பி வரும்.

பின்பு ஊறிய சிக்கன்,மீதி தயிர் சேர்க்கவும்.சிறிது நேரம் வேகவைக்கவும்.பாதி வெந்ததும்,எலுமிச்சை பழம் பிழிந்து பிரட்டி அடுப்பை அணைக்கவும்,பாத்திரத்தை இறக்கவும்.

அரிசியை க்ளைந்து ஒரு பெரிய பாத்திரத்தில் பட்டை,கிராம்பு,ஏலம் போட்டு தண்ணீர் கொதிவந்ததும் அரிசியை தட்டி,உப்பு போட்டு ,உப்பு சரி பார்க்க வேண்டும்.சோறு முக்கால் பதம் வேகவைத்து வடித்து எடுத்து தம் போட வேண்டும்


அரிசி வெந்ததும் சிக்கன் கிரேவி ரெடி செய்த பாத்திரத்தில் போட்டு மல்லி புதினா தூவி,சிறிது நெய் விட்டு,கலர் ஆங்காங்கு தெளித்து விடவும்.கீழே நெருப்பு இருக்க வேண்டும்.


சிறிது நேரம் கழித்து கிரேவி கொதித்து ஆவி வரத் தொடங்கியதும் மேலே உள்ள சோறை ஒரு பிரட்டு பிரட்டி சமப்படுத்தி மூடி போடவும்.


கீழே பழைய தவா போட்டு மேலே வடித்த கஞ்சியையே வெயிட்டுகு வைத்து
தம் போடவும்.அடுப்பை சிம்மில் கால் -அரை மணி நேரம் வைக்கவும்.மூடி டைட்டாக பொருத்தமாக இருக்க வேண்டும்,இல்லாவிடில் தம் ஆகாது.தயார் ஆனதும் அடுப்பை அணைக்கவும்,


திறந்து ஒரு போல் பிரட்டவும்,இப்பொழுது கமகம்க்கும் நெல்லை சிக்கன் தம் பிரியாணி ரெடி.இதனை ரைத்தா,சுருட்டு கறி அல்லது ஃப்ரை ,தால்ச்சா,ஸ்வீட் உடன் பரிமாறவும்.

--ஆசியா உமர்.

14 comments:

kavisiva said...

ஆஹா பிரியாணியா! இப்பவே வாயில் எச்சில் ஊறுதே! ஒரு பார்சல் ப்ளீஸ் :-)

asiya omar said...

முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நல்ல திருப்தியாக சாப்பிட்டீங்களா?கவி.

Chitra said...

நீங்க நெல்லை பக்கமா? நம்ம ஊரு மணம் கமழுதே ................. ரெசிபிக்கு நன்றி.

ஸாதிகா said...

கிட்டத்தட்ட களறி ப்ரியாணி மாதிரி..நெல்லைக்கு வந்துட வேண்டியதுதான்.

ஜெய்லானி said...

நேத்து கந்தூரி சோறு , இன்னைக்கு தம் பிரியாணியா ? ம்ம்ம்ம்ம்ம்ம்...

prabhadamu said...

ஆஹா பிரியாணியா! இப்பவே வாயில் எச்சில் ஊறுதே! ஒரு பார்சல் ப்ளீஸ்...............

asiya omar said...

சித்ரா,உங்கள் வருகை எனக்கு மிக்க மகிழ்வை தருகிறது.நெல்லை -5 பிறந்து வளர்ந்தது,வாக்கப்ப்ட்டது எல்லாம்.வீடு நெல்லை -7 -லில் கட்டி இருக்கோம்.

asiya omar said...

ஸாதிகா எங்க அக்கா வீட்டில் நானும் அக்கா மகன் ஹாஜி எல்லோரும் சேர்ந்து போட்ட 7 கிலோ அரிசி பிரியாணி.சின்ன களறி மாதிரி.

asiya omar said...

ஜெய்லானி திருப்தியாக சாப்பிட்டீங்களா? சாப்பிட்டவங்க மனசு நிறையணும் என்னைப்பொருத்தவரை.

asiya omar said...

ப்ரபா,சிங்கையில் நெல்லை கேட்டரிங் சர்வீஸ் ஆரம்பித்து விடலாம்.பார்சல் அனுப்பிட்டேன்.

மங்குனி அமைச்சர் said...

மேடம் கொஞ்சம் prawn (இறால் ) பிரியாணி பத்தி எழுதுங்க. நம்ம வீடுகாரம்மா சென்னை வந்த பின் தான் ப்ரானவே பாத்திருக்கு (நானும்தான் ஹி ஹி ஹி ஹி ). ஏற்கனவே எழுதியிருந்தா உங்க ப்ளாக்-ல எங்க இருக்குன்னு சொல்லுங்க.

Jaleela said...

களறி பிரியாணி ரொம்ப நல்ல இருக்கு என்ன ஊரில் சமையனாக்கள் வெளியில் கரி அடுப்பில் தீ பத்தி செய்வார்களே அது போல் இருக்கு , நீங்க செய்ததா?
களறி பிரியாணி ருசி சூப்பராக இருக்குமே

asiya omar said...

ஜலீலா,எங்க அக்கா வீட்டில் அக்கா மகனுடன் நானும் இருந்து செய்தது.நான் தனியாக 30 நபருக்கு பிரியாணி செய்திருக்கேன்,அதற்கு மேல் என்றால் அரிசி வடித்து தம் போட்டு எடுக்க துணைக்கு ஆள் வேண்டும்.

Shama Nagarajan said...

tempting biriyani akka