Saturday, March 6, 2010

லூஸாப்பா நீ


எல்லாருக்குள்ளேயும் ஒரு லூஸு இருக்கு.யாராவது இல்லேன்னு சொல்லுங்க பார்ப்போம்.ஒவ்வொருத்தர் இடுகிற இடுகையை படிக்கும் பொழுது லூஸு இல்லாதவங்களும் லூஸாயிடுவாங்க,அப்படி சிலதை படிக்கும் பொழுது ஒண்ணுமே புரியலை,ஆனால் அதை விழுந்து விழுந்து படிக்கிறவங்க தான் ஜாஸ்தி.என்னமோ இப்ப உள்ள ட்ரண்ட் ஒரே டயலாக் தான்,எல்லாரும் கதாசிரியராக போலாம்.


ப்ளாக் ஆரம்பித்து ஒரு மாசம் கூட ஆகலை அதுக்குள்ள மண்டை காய்ஞ்சு போச்சு.எல்லாரும் லூசாப்பா நீன்னு கேட்கத்தான் இல்லை.ஆளுக்கு ஒரு ஐடியா,அங்கப்பார்த்தா ஒரு ஐடியா,இங்கப்பார்த்தா ஒரு ஐடியா சரின்னு எழுதப்போனால் ப்ளாக்கர் ஜனகோடிகளில் யாராவது முந்திக்கிறாங்க.அப்புறம் நம்ம கஷ்டப்பட்டு எழுதினதையோ,அல்லது கண்டது கேட்டதை தேத்தி கீத்தி ரெடி பண்ணினால் அது அதற்குள் இன்னொரு இடத்தில பல்லைக்காட்டும்.போச்சா ட்ராஃப்டாக எத்தனையை வைப்பது. அப்புறம் டெலீட்டோ டெலீட்.


இதுக்குத்தான் சொல்றேன்,அக்கம் பக்கம் திரும்பி பார்க்காம எழுது,எழுதிகிட்டே இருங்கிறேன்.அப்புறம் யாரு படிக்கிறது.அதுக்கு ஒரு செட்டப்பு வைச்சுக்கணும்,வாய் உள்ள பிள்ளை தாம்ப பொழைக்கும்,இல்லை இல்லை எழுத ஏணி தேவையில்லை, எழுத்தாணி இருந்தால் போதும்,கொஞ்சம் கிருக்கத் தெரிஞ்சா போதும்,அதான் லூஸுத்தனமா.என்ன இன்னும் புரியலையா?லூஸு மாதிரி புலம்ப வச்சிட்டாங்களே.


12 comments:

sarusriraj said...

ஆசியா நீங்க எப்பொழுதுமே பிளாக் பத்தியே யோசிச்சுகிட்டு இருக்கிங்களா

மங்குனி அமைச்சர் said...

ஹலோ ஹலோ.....
?
?
?
ஹலோ ஆசியா உமர் இருக்காங்களா ?
?
?
?
ஹலோ சாரி மேடம் ராங் நம்பர்

*நம்பர் கரெக்டா தானே இருக்கு அப்புறம் எப்படி ராங் நம்பராகுது ?

லாரி டிரைவர் :டேய் லூசு நீ சாவுறதுக்கு என் வண்டி தான் கிடசுச்சா ரோட்ட பாத்து பைக்க ஓட்ரா

ஜெய்லானி said...

என்னுடைய முதல் பதிவை பாருங்க .இதே காரனத்தால் ஒரு வருஷம் நா எதுவுமே எழுதல. என் ப்ளாக்குல வெறும் ரேடியே மட்டுமே வைத்திருந்தேன்.

kavisiva said...

ப்ளாக் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா! கூல் ஆசியா கூல்

athira said...

லூஷாப்பா நீ?// சத்தியமாக அப்படி நினைக்கவில்லை:):).. அதிராவாவது லூஷாகிறதாவது..லூஷாக்கிறதாவது.... இப்ப லூஷாகியிருப்பீங்களே!!!கிக்..கிக்...கிக்...

உங்களுக்கு ஒண்ணு தெரியுமோ? ஆசியா.. உலகிலேயே மிக மலிஞ்ச சரக்கு இந்த “மக்கள்ஸ்ஸ் இடமிருந்து கிடைக்கும் இலவச அட்வைஸ்தான்”

asiya omar said...

saru,இனி அப்படியில்லை,அப்படித்தான் இருக்குமோ?

asiya omar said...

மங்குனி இருந்தா ஜெய்லானி இருந்தே ஆகணுமே,மகிழ்ச்சி.அமைச்சரே இடுகை பார்த்தவுடன் போன்காலா?போன் என்றாலே இப்போதைக்கு அலர்ஜி.
ஜெய்லானி இன்று நேரம் கிடைத்ததால் உங்கள் ப்ளாக் முழுதும் பார்த்தேன்.

asiya omar said...

கவி,அதிரா நானும் இப்ப கிக் கிக் என்று சிரித்து கொண்டேன்.யாரும் லூஸில்லைபா.சும்மா லூஸாப்பா நீன்னு லைலா கேட்பது பிடிக்கும்.

ஜெய்லானி said...

//மங்குனி இருந்தா ஜெய்லானி இருந்தே ஆகணுமே,மகிழ்ச்சி//

மங்கு இன்னைக்கு முந்திகிட்டது தெரியாது.ஜஸ்ட் மிஸ்டு

//ஜெய்லானி இன்று நேரம் கிடைத்ததால் உங்கள் ப்ளாக் முழுதும் பார்த்தேன்.///

அப்ப ஒரு வழியா ஆயிருப்பீங்க.தலைப்புகேத்த மாதிரி!!

##முதல் கமெண்ஸ்சே கவிபேரரசி மலிக்கா கிட்டேஇருந்துன்னா சும்மாவா ?## பாத்ததுக்கு சந்தோஷம்..

Jaleela said...

ஹா ஹா அப்ப நானும் என்னை கேட்டுக்கனும், அப்படி தான் இருக்கேன்

Chitra said...

என்ன இன்னும் புரியலையா?லூஸு மாதிரி புலம்ப வச்சிட்டாங்களே.

ஒவ்வொருத்தர் இடுகிற இடுகையை படிக்கும் பொழுது லூஸு இல்லாதவங்களும் லூஸாயிடுவாங்க,

..............இந்த இரண்டுக்கும் சமபந்தம் இருக்கு என்ற உங்கள் கண்டுபிடிப்பு - அடேங்கப்பா!
நீங்களா, லூசு?

ஸாதிகா said...

யம்மாடி ஆசியாதோழி..இந்த இடுகையை இன்னும் நாலு தடவை படிச்சால் நான் லூஸாகித்தான் விடுவேன்ப்பா..ஹாஹாஹா...