Sunday, March 7, 2010

ஆண்களே கொண்டாடுங்கள்



பெண்கள் வீட்டின் கண்களாம்
ஏன்
நாட்டின் கண்கள் எனலாம்.
மானிடராய் பிறக்க தவம்
செய்ய வேண்டும், அதிலும்
மங்கையராய் பிறக்க
மாதவம் செய்திருக்க வேண்டும்.


ஆணிற்கு பெண் என்பவள்
பேணி பாதுகாக்கும் பாட்டியாய்
போற்றி வளர்த்த தாயாய்
உயிரைக்கொடுத்த உற்றதுணையாய்
சரிபங்கு கொடுத்து உண்ணும் சகோதரியாய்
மட்டற்ற மகிழ்ச்சியை தரும் மகளாய்
மரியாதை தரும் மருமகளாய்
கொஞ்சி விளையாடும் பேத்தியாய்
அன்பைப்பொழியும் அத்தையாய்
பாசம் பொங்கும் பெரியம்மாவாய்
சிரித்து விளையாடும் சித்தியாய்
துயரைத்துடைக்கும் தோழியாய்

இன்னும் சொல்ல முடியாத
எத்தனையோ அத்தனையும்
தந்த பேரின்பமாய்
திகழ்ந்த பெண்மையை போற்ற
ஆண்களே கொண்டாடுங்கள்
பெண்கள் தினத்தை.

-ஆசியா உமர்.

16 comments:

ஜெய்லானி said...

///ஆண்களே கொண்டாடுங்கள்
பெண்கள் தினத்தை.///

எங்களுக்கு எப்பங்க ஒரு தினம் வரும். (திட்டு வாங்காம இருக்க.. )

asiya omar said...

ஜெய்லானி இப்படி ஒரு ஆதங்கம் இருக்கா?

ஸாதிகா said...

தோழி ஆசியாவுக்கு ஒரு ஆஹாவுடன் வாழ்த்துக்கள்.சகோதரர் ஜெய்லானிக்கு ஒரு த்சோ...:-(

sarusriraj said...

Happy Womens Day

kavisiva said...

ஜெய்லானி... மகளிருக்கு ஆண்டின் ஒரு தினம் மட்டும்தான். மீதி 364நாட்களும் உங்களுக்கானதுதானே!

என்னைப்பொறுத்தவரை எல்லா நாட்களும் எல்லாருக்குமானதே!

ஆசியா பெண்ணின் பலமுகங்களை அழகாக சொல்லியிருக்கீங்க!

ஹைஷ்126 said...

பேஷா கொண்டாடி விடுவோம் :)

அருமையான வரிகள்.

பெண்குலம் வாழ்க வளமுடன்

மங்குனி அமைச்சர் said...

//ஆண்களே கொண்டாடுங்கள்
பெண்கள் தினத்தை.//

ட்ரீட் எல்லாம் கிடையாதா ?
பெண்கள் தின வாழ்த்துக்கள் மேடம்

asiya omar said...

தோழி ஸாதிகா பாராட்டுக்கு மகிழ்ச்சி.
கவி,சாரு மிக்க நன்றி.

asiya omar said...

சகோ.ஹைஷ் வருகைகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.உங்களைப்போன்ற பெண்மையை மதிப்பவர்களுக்கு என் நன்றிகள்.

asiya omar said...

அமைசசரே ! வீட்டம்மா தான் தினமும் ட்ரீட் தருவாங்களே.நீங்கள் இந்த தினத்தில் அவர்களுக்கு ட்ரீட் கொடுங்க.

இலா said...

அருமையா இருக்கு ஆசியா அக்கா!!! இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!

Chitra said...

அத்தனையும்
தந்த பேரின்பமாய்
திகழ்ந்த பெண்மையை போற்ற
ஆண்களே கொண்டாடுங்கள்
பெண்கள் தினத்தை.


.......... :-) உள் குத்து பலமா இருக்கே!

asiya omar said...

இலா உன் பாராட்டு பெண் இனமே திரண்டு பாராட்டியது போல் உள்ள்து.வாழ்த்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

சித்ரா, பலமாக இருக்கா?என்ன பலம்,அடங்கித்தானே போக வேண்டியது இருக்கு.

Jaleela said...

ஆசியா ரொம்ப அருமையா போட்டு இருக்கீங்க, ஆண்களை கொண்டாட சொல்லி ஆமாம் (உள் குத்து பலமா இருக்கும் மங்குனி அமைச்சருக்கு.

asiya omar said...

ஜலீலா மிக்க மகிழ்ச்சி.மங்குனியை இழுக்காம இருக்க முடியாதா? நீங்க சென்னை தானே,அமைச்சர், சம்சாரமும் அங்கே தான்.