Friday, March 12, 2010

மரணம் பற்றி சுஜாதா

மரணம் பற்றி

மனித உயிர் என்பது ஓர் வற்றாத அதிசயம். அதன் ரகசியத்தை அறிந்துகொண்டால் ஏறக்குறைய கடவுளுக்கு அருகில் கொண்டு சென்றுவிடும். உயிரின் ரகசியத்தை அறிய விஞ்ஞானிகளும் வேதாந்திகளும் செய்யும் முயற்சிகளைத் தொகுத்துத் தந்து அவைகளிலிருந்து கிடைக்கும் முடிவுகளை படிப்பவருக்கே விட்டுவிடும் நோக்கத்தில் எழுதப்பட்டது இந்த நூல்.
இறப்பு என்பது முற்றுபுள்ளியா? – சுஜாதா
செத்த பின் என்ன என்று தெரிந்து கொள்வதால் யாருக்கு லாபம்? நான் செத்த பின் நானாக இருந்தால்தான் எனக்கு பிரயோசனம்; என் மூளை ,என் புத்தகங்கள் ,என் லேசான முதுகெரிச்சல் எல்லாம் இருந்தால்தான் நான் நானாக இருக்க முடியும் .செத்தாலும் ஆத்மா தொடர்ந்து இந்தோனேசியாவிலோ அல்லது வெனிஸ் நகரத்தில் ஒரு படகோட்டியாகவோ பிறப்பதில் அர்த்தமில்லை.நான் நானாகவே தொடர வேண்டும் . அதற்கு என்னை அறிந்தவர்கள் வேண்டும். உறவினர்கள், என் வாசகர்கள் வேண்டும் . கட்டுரை அனுப்பினால் அதை பற்றி விமர்சிப்பவர்கள் வேண்டும். தமிழ் வேண்டும் . அதெல்லாம் இல்லாவிடில் உயிர் என்பது தொடர்ந்தால் என்ன , முடிந்தால் என்ன? எனவே சாவு என்பது கொஞ்சம் யோசித்து பார்த்தால் நம் நினைவுகளின் அழிவுதான்.

அப்பா மரணத்தைப் பற்றி ஒரு முறை சொன்னது ஞாபகம் வருகிறது “அது ஒரு முற்றுப் பள்ளி.வி ஸீஸ் டு எக்ஸிஸ்ட்.எபிக்யுரஸ் சொன்னதை மறுபடி படி”“Death is nothing to us since so long as we exist death is not with us but when death comes. we do not exist”.ஒருவர் தன் தந்தை இறந்ததை பற்றி சுஜாதாவிற்கு உருக்கமாக மெயிலனுப்பிய போது, வந்தது பதில்,” Nobody dies; they live in memories and in the genes of their children”. How True ?“மனைவி, மக்கள், பழைய பள்ளி, தெரிந்த பாட்டுகள், திறமைகள், கவிதைகள், கடிதங்கள், காதல்கள் எல்லாம் மறந்துபோய் சாப்பிடுவது மட்டும் ஞாபகம் இருந்து, நாளடைவில் சாப்பிடுவதற்காக மட்டும் ஞாபகம் இருந்து, நாளடைவில் சாப்பிடுவதற்கு வாயசைப்பதையும் மறந்துவிடுவோமாம். உயிருடன் இருப்பது என்பது இது தான். உயிர் என்பது மூச்சுக் காற்றல்ல; ஞாபகம்தான்” — 12 வருடங்களுக்கு முன்பு (18-1-1998)

சுஜாதா எழுதியிருந்த கட்டுரையின் ஒரு பகுதி.‘எழுத்தும் வாழ்க்கையும்’ – சுஜாதா கட்டுரையில் இருந்து… (11-05-2003)‘யாருமே சாவதில்லை’. இது என் அம்மா இறந்தபோது அப்பா சொன்னது. ‘அவள் இறந்ததாக நான் ஏன் எண்ணிக்கொள்ள வேண்டும் ? அவள் குரல் ஏன் பேத்தியிடம் இருக்கிறது. அவள் சாயல் உன்னிடம் இருக்கிறது. குணம், பிடிவாதங்கள், அழகு, டயபடிஸ் எல்லாவற்றையும் அங்கங்கே பாகம் பிரித்துக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறாள். அவள் நினைவுகள் நம் எல்லோரிடமும் உள்ளது’ என்று சொல்வார்.

மரணம் தொடர்பாக சுஜாதா ஆயத்தமாகவே இருந்தார் எனச்சொல்ல வேண்டும்। “இப்போதெல்லாம் ஹிந்துவில் முதலில் obtituary தான் பார்க்கிறேன்। இறந்தவர் என்னைவிட இளையவர் என்றால் பரவாயில்லை நாம் இன்னும் இருக்கிறோம் என்று சந்தோஷப்பட்டுகொள்கிறேன்। என்னை விட வயதானவர் என்றால் என் நாள் எந்நாள் என்று யோசனை வருகிறது” – இதை அவரின் ‘கற்றதும் பெற்றதும்’ என்ற நூலில் குறிப்பிட்டிருந்தார்।அவர் ஒரு விஞ்ஞான எழுத்தாளரென்பதால் அவரிடம் திரும்ப திரும்ப மரணத்தை வெல்வது பற்றி பல்வேறு கேள்வி பதில்களில் பல்வேறு விதங்களில் கேட்கப்பட்டதுண்டு. அதற்கு அவரின் பதில்“மரணிக்காமல் வாழ்ந்துகொண்டே இருந்தால் வாழ்க்கையின் சுவாரஸ்யம் போய்விடும்”சுவாரஸ்யம் போய்விட்டதா சுஜாதா??


நிறமற்ற வானவில் – சுஜாதா நாவலில் இருந்து சில பகுதிகள்…..மிக நெருக்கமானவர்கள் மரணத்தில் தான், நமக்கு உண்மையான தரிசனம் கிடைக்கிறது. தினம் தினம் பல பேர் இறக்கிறார்கள். அந்தச் சாவெல்லாம் நம்மைப் பாதிப்பதில்லை.‘மரணம் – கடவுளுக்கு வாசல்’ என்று ரஜனீஷ் சொல்லியிருக்கிறார். மனிதனால் இதுவரை களங்கப்படாத ஒரே ஒரு சங்கதி மரணம். அதை அவன் இன்னமும் கொச்சைப்படுத்தவில்லை. கொச்சைப்படுத்தவும் முடியாது. அது துல்லியமானது. அதை அவனால் அறியவே முடியாது. அதை அவனால் ஒரு விஞ்ஞானமாகவோ, வேதாந்தமாகவோ மாற்றமுடியாது. அது அவன் கைப்பிடியிலிருந்து எப்போதும் வழுக்கிச் செல்கிறது. உங்கள் வாழ்வில் எதிர்பாராமல் மரணம் குறுக்கிடும்போது உங்கள் வாழ்வு அர்த்தமற்றதாகிறது. ஆம், வாழ்வு அர்த்தமற்றதுதான். ஒவ்வொருவரும் கொஞ்சம் இறக்கிறோம்.”சாவுங்கறதே ஒரு முடிவு இல்லை. ஒரு தொடர்ச்சிதானாம். நம்ம உடம்பில் அறுநூறு கோடி செல் உயிரணுக்கள் இருக்கு. ஒவ்வொரு இருபத்துநாலு மணி நேரமும் அதில ஒரு பகுதி செத்துக்கிட்டே இருக்கு. முப்பது வயசுக்கப்புறம் நம்முடைய மூளை வருஷத்துக்கு ஒரு பர்சென்ட் செத்துக்கிட்டு இருக்காம். கொஞ்சம் கொஞ்சமா, செதில் செதிலா அழிஞ்சுண்டு வர்றோம். அதனால நாம எப்போ சாகறோம். எப்போ உயிரோட இருக்கோம்கிறதே சரியா சொல்ல முடியாது. பிறந்த நிமிஷத்திலிருந்து இறந்து கொண்டே இருக்கோம்…”“அதனால…?”“இறந்து போயிட்டாங்கன்னு சொல்றதில அர்த்தமேயில்லை..”“எப்படி ?”“நம்ம மனசிலே அவங்களைப் பத்திய நினைப்புகள் இருக்கிற வரைக்கும் தே டோன்ட் டை !”மஹாபலி – சுஜாதா சிறுகதையில் இருந்து…..‘How did you die?’‘Death comes with a crawl,or comes with a pounceAnd whether he is slow or spryIt is not the fact thatyou are dead that countsBut only, how did you die?’
அவரது எழுத்துக்கு என்றும் மரணமில்லை. மறுபிறவி பற்றி சுஜாதா (கற்றதும் பெற்றதும்)உடி ஆலன் “எனக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை. ஆனால், எதற்கும் ஒரு செட் பனியன், அண்டர்வேர் எடுத்துச் செல்லப்போகிறேன்” என்றார்.என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது — உங்களுக்கு மறுபிறவியில் நம்பிக்கை உண்டா ? இதன் கிளையாக ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா ?அது உடலில் எங்கு இருக்கிறது ? சாவை வெல்ல முடியுமா ? நாம் சாசுவதமாக வாழ முடியுமா என்பவை அந்தக் கேள்வியின் பல வடிவங்கள். நாற்பது வயசுக்குப்புறம் பலர் மனத்தை இது குடைகிறது. இதற்கெல்லாம் பதில் தரும் விதத்தில், Immortality பற்றி ஒரு விஸ்தாரமான கட்டுரை சமயம் கிடைக்குபோது நிச்சயம் எழுதுகிறேன். அதைப்பற்றி எனக்கு தெளிவான கருத்துக்கள் உள்ளன. இப்போதைக்கு Edward Young என்பவரின் ‘Night Thoughts on Life , Death and Immortality ‘ என்னும் கட்டுரையிலிருந்து ஒரு மேற்கோள் கொடுக்கிறேன் –“நீங்கள் சாசுவதமாக வாழ முடியும் என்பதை ஏன் சந்தேகிக்கிறீர்கள்? நீங்கள் உயிர் வாழ்வதே ஒரு அதிசயம் அல்லவா, வியப்பல்லவா ?


உயிரெனும் அற்புதத்தைக் கொடுத்தவனால் அதன் முடிவை ரத்து செய்ய முடியாதா ? இதில் என்ன அதிசயம் !”யோசித்து வையுங்கள் விவாதிப்போம். சுஜாதா பதில்கள் – பாகம் 2 (உயிர்மை பதிப்பகம்)

‘நாமும் ஒரு நாள் இறந்துவிடுவோம்’ என்கிற எண்ணம் உங்களிடம் எந்த மனநிலையை உருவாக்குகிறது ?பயத்தையும், அவசரத்தையும்.
மரணமுற்ற பிறகு வேறு எந்த வடிவிலாவது மனிதன் வாழ வாய்ப்பிருக்கிறதா ?
வாய்ப்பிருந்தாலும் ஞாபகம் இருக்காது.எனக்கு கொஞ்ச நாளாக மரண பயம் இருக்கிறது. இதைப் பற்றி சொல்லவும் ?


முதலில் உங்களுக்கு எதனை வயது, சொல்லுங்கள். எஞ்சிய வாழ்நாளில் எதையாவது சாதிக்க வேண்டிய தீர்மானம் இருந்தால் மரண பயம் இருக்காது

எளிமையாய் தற்கொலை செய்து கொள்வது எப்படி ?

ஏ. கே. ராமானுஜனின் கவிதை ஒன்றைப் படியுங்கள். தற்கொலை செய்து கொள்ள விரும்பும் நண்பனுக்கு (விருப்பத்தைக் கைவிடு) நீ ஏற்கனவே இறந்து போயிருக்கலாம் என்கிறார்.

-சுஜாதா பற்றி மெயிலில் வந்தது.

என் கருத்து:
மரணத்தை எப்பவும் எதிர்பார்த்து ,மரணம் என்பது எப்பவும் வரலாம் என்ற எண்ணத்தில் காலத்தை ஓட்டினால் எந்த இக்கட்டையும் எளிதில் சமாளிக்கும் திறனை நாமும்,நம் குடும்பத்தில் உள்ளவர்களும் பெற்று விடலாம்.தீடீர் மறைவு என்பது ஈடுகட்ட முடியாதது தான்,ஆனால் நம் வாழ்வு நம் கையில் இல்லை என்பதை தெளிவாக புரிந்துவிட்டால் ,அந்தப்பக்குவம் இருந்தால் அதையும் சமாளித்து விடலாம்,என் தாயாரை 5 வயதிலும்,தந்தையாரை 17 வயதிலும் இழந்து காலமும் கடந்து வாழப்பழகி வெற்றி நடை போட்டாச்சு.இன்னும் ஈடுகட்ட முடியாத உறவினர்களின் இறப்புக்கள் எத்தனையோ.எல்லாம் அவன் செயல்,அவன் நாடுவது நன்மைக்கே என்று விட்டு விடுவது நல்லது.
இறப்பு நம் கைக்குள் இருந்தால் இறைவனே இல்லை என்று சொல்லி விடுவோம். அதற்காகத்தான் அதை மட்டும் நமக்கு அவன் விட்டுத்தரவில்லையோ.
எல்லோரும் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள்.
--ஆசியா உமர்.

21 comments:

prabhadamu said...

////இறப்பு நம் கைக்குள் இருந்தால் இறைவனே இல்லை என்று சொல்லி விடுவோம். அதற்காகத்தான் அதை மட்டும் நமக்கு அவன் விட்டுத்தரவில்லையோ.////


super akka

ஹைஷ்126 said...

என்னை கவர்ந்த வாசகம், புதுச்சேரி கருவடிக்குப்பம் மின் தகனம் செய்யும் சுடுகாட்டின் வாசலில் எழுத்தப்பட்ட வாசகம்” இன்று இவர் நாளை நீ”

அருமையான பதிவு.

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.

Chitra said...

நம் வாழ்வு நம் கையில் இல்லை என்பதை தெளிவாக புரிந்துவிட்டால் ,அந்தப்பக்குவம் இருந்தால் அதையும் சமாளித்து விடலாம்,என் தாயாரை 5 வயதிலும்,தந்தையாரை 17 வயதிலும் இழந்து காலமும் கடந்து வாழப்பழகி வெற்றி நடை போட்டாச்சு.

....... உங்களின் மனப்பக்குவம் எல்லோருக்கும் இருந்தால் கவலை ஏது? வாழப் பழகிக் கொண்டீர்கள். வாழ்த்துக்கள்.

asiya omar said...

ப்ரபா பாராட்டுக்கு மிக்க நன்றி.எல்லோரும் நீண்ட ஆயுளுடன் வாழ் வாழ்த்துக்கள்.

asiya omar said...

சகோ.ஹைஷ் வருகைகும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

சித்ரா இது தான் நெல்லை பாசம் என்பதோ? தவறாமல் கருத்து தருவது மகிழ்ச்சி.

athira said...

ஆசியா... மிக அருமையான தொகுப்பு..கட்டுரை. எனக்கு இப்படியான கட்டுரை என்றால் எத்தனை தடவை படித்தாலும் அலுப்பதில்லை.

யார் என்னதான் சொன்னாலும் இறப்பென்றால் எனக்குப் பயம், விருப்பமில்ல. அவர்கள் எம்மோடுதான் வாழ்கிறார்கள் என நாம் மனதை ஆறுதல்படுத்தவே சொல்கிறோமே தவிர, இழந்தால் இழந்ததுதானே?. இழந்தவரின் இடத்தை ஆயிரம் பேர் வந்தாலும் நிரப்பிடமுடியாது.

எல்லோரும் நீடூழி வாழ நானும் வாழ்த்துகிறேன்.. வேண்டுகிறேன்..

ஜெய்லானி said...

///என் தாயாரை 5 வயதிலும்,தந்தையாரை 17 வயதிலும் இழந்து காலமும் கடந்து வாழப்பழகி வெற்றி நடை போட்டாச்சு.இன்னும் ஈடுகட்ட முடியாத உறவினர்களின் இறப்புக்கள் எத்தனையோ.எல்லாம் அவன் செயல்,அவன் நாடுவது நன்மைக்கே என்று விட்டு விடுவது நல்லது///

உதடு எதுவானாலும் சொல்லும் ஆனால் மனசு ???!!!!(இதயம் மரத்தா போகும்).
:-(

asiya omar said...

அதிரா,ஆமாம் நானும் எனக்குத் தெரியாமல் மிகவும் பயப்படுகிறேனோ,அதனால் தான் இப்படி எல்லாம் எழுதி என்னை தேற்றிக்கொள்கிறேன்,என் கடமைகளை நான் இருந்து நிறைவேற்றனும் என்ற ஆசையில்லாமலா?

asiya omar said...

ஜெய்லானி,என்னதான் சால்ஜாப்பு சொன்னாலும் யாரும் மனதால் தயாராவதில்லை.உண்மை.சிக்கன் குனியா வந்து பட்ட அவதியில் முதல் முதலாக மரண பயம் வந்து விட்டது.

ஸாதிகா said...

ஆயிரம்தான் வாய்கிழிய பேசினாலும் மரணம் என்றால் மானிடர்களுக்கு பயம் இல்லாமல் இருக்காது.அதுதான் அதனை மட்டும் இறைவன் நாம் அறியாமலே வைத்து இருக்கிறான்.துயரங்களில் சீக்கிரம் போய் சேர்ந்துவிட்டால் நல்லது என்று நினைக்கும் மனிதமனம் அந்த சீக்கிரம் அருகே வந்துவிட்டால் ஆட்டம் காணாமல் இருக்குமா?

asiya omar said...

பெரிய எழுத்தாளரல்லோ ! அது தான் கேள்வி எழுப்பி சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.

இலா said...

Sometimes i fear to die ! Oh! God!! I have not done any good to anyone so far.Especially when you are in hospital or when sick! Then I pray god ! If I have to cross this hurdle and live to see day light I will change the way i see world or do something worthwhile.. Days go by untill i see me in the same boat again! For I fear to die that I have not accomplished my actions to gratify my existence...

Asiya Akka! I liked your version of it... Everyone has an opinion!

asiya omar said...

thanks ila,anyhow oneday, one by one we have to go only it may vary thats all.

Anonymous said...

asiya akka, wht made u to write this article ? But still thx to share some great writing of Sujatha.Nowadays u r spending lot of time reading books :) which gives you peace of mind.

asiya omar said...

usman,thanks for your visit and comments.

kavisiva said...

அறுவைசிகிச்சைக்கு என்னைக் கொண்டுபோகும் போது ஒரு நொடி யோசித்தேன் இங்கேயே என் உயிர் போய்விட்டால்... திரும்பி ஒருமுறை எல்லோரையும் பார்த்துவிட்டு கண்ணை மூடிக் கொண்டேன். அதன் பின் எதையும் யோசிக்கவில்லை. மயக்கம் தெளிந்த பின் முதலில் என் காலை அசைத்து நான் உயிருடன் இருப்பதை உறுதி செய்து கொண்டேன் :-)

ஆனால் இரண்டுமணிநேர அறுவை சிகிச்சை 5மணிநேரம் நீண்டதால் என் குடும்பத்தினர் அனுபவித்ததுதான் மரணவேதனை என்று பின்னர்தான் தெரிந்து கொண்டேன்.
நல்ல பதிவு ஆசியா

asiya omar said...

கவி என்ன சிகிச்சை ஒன்றும் புரியவில்லை.மகப் பேறா?

kavisiva said...

//கவி என்ன சிகிச்சை ஒன்றும் புரியவில்லை.மகப் பேறா?//

இல்லை ஆசியா!சில வருடங்களுக்கு முன் கர்ப்பப்பையில் உள்ள கட்டிகளை அகற்ற செய்து கொண்ட அறுவை சிகிச்சைதான் அது.

5% ரிஸ்க் உள்ள சிகிச்சை என்று மருத்துவர் சொன்னதால் வந்த பயம் அது.

asiya omar said...

கவி,இனி ஒரு பிரச்சனையும் வராது,வல்ல இறைவன் அருள்புரிவானாக.

கோமதி அரசு said...

இறப்பு நம் கைக்குள் இருந்தால் இறைவனே இல்லை என்று சொல்லி விடுவோம். அதற்காகத்தான் அதை மட்டும் நமக்கு அவன் விட்டுத்தரவில்லையோ.
எல்லோரும் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள்.//
நன்றாக சொன்னீர்கள். வாழ்த்துக்கு நன்றி.
சுஜாதா பற்றி
அருமையான பகிர்வு.