Tuesday, March 23, 2010

முட்டை குழம்பு / Egg Kuzhambu

தேவையான பொருட்கள்;-
முட்டை -4
உருளைகிழங்கு - 200 கிராம்(விரும்பினால்)
வெங்காயம்- 2
தக்காளி -2
மிளகாய் - 2
மல்லி கருவேப்பிலை - சிறிது
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா -கால்ஸ்பூன்.
மிளகாய்த்தூள்,சீரகத்தூள்,சோம்புத்தூள்,மிளகுத்தூள் தலா அரைஸ்பூன்
கறிமசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் -3 டேபிள்ஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்,முந்திரிபருப்பு-4 (அரைக்க)
உப்பு - தேவைக்கு.
முதலில் முட்டை, உருளையை வேகவைத்து தோலுரித்து கொள்ளவும்.

நான்கு நபர்களுக்கு.

செய்முறை:
தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.

முதலில் கடாயில் எண்ணெய் விட்டு கட்செய்த பாதி வெங்காயம் வதக்கி,இஞ்சிபூண்டு பேஸ்ட்,கரம்மசாலா,மிளகாய்,மல்லி கருவேப்பிலை வதக்கவும்.


மீதியுள்ள வெங்காயம்,தக்காளி,மசாலா பொருட்கள்,தேங்காய்,முந்திரிபருப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்


அரைத்த மசால் கலவையை கடாயில் வதக்கியவற்றுடன் சேர்க்கவும்,நன்றாக அடிபிடிக்காமல் வதக்கவும்,சிம்மில் வைக்கவும்.



கிரேவி மணம் வரவும்,தண்ணீர் சேர்த்து நன்கு கொதிவந்ததும் அவித்த முட்டை லேசாக கீறி,விரும்பினால் உருளைகிழங்கும் போட்டு பிரட்டி விடவும்.எண்ணெய் மேலெழும்பி வந்து குழம்பு ரெடியாகி விடும்.இது ஊற்றி சாப்பிடுவது போல் கெட்டியாக இருக்கும்.இதனை சாததுடன் பரிமாற சுவை அபாரமாக இருக்கும்.




ஏதாவது சிம்பிளாக செய்யனும்னால் இந்த முட்டை குழம்பை செய்து அசத்திவிடலாம்,உடன் பொரித்த அப்பளம் இருந்தால் போதும்.சாப்பாடு உள்ளே போவதே தெரியாது,

--ஆசியா உமர்.

15 comments:

Chitra said...

நீங்கள் திருநெல்வேலி ஆளா? :-)

asiya omar said...

ஆமாம் சித்ரா இதில் என்ன சந்தேகம்,நான் உங்களுக்கு என் ப்ளாக்கில் இரண்டு மூன்று தடவை பதில் சொல்லி இருக்கேன்.சுத்தமான நெல்லை பிரஜை .சித்ரா என்னோட மட்டன் குறிப்பில் தலைக்கறியில் விவரம் சொல்லியிருக்கேன்,சிக்கன் பிரியாணியிலும் சொல்லியிருக்கேன்.பிட் பிட் ஆக டிடைல்ஸ் இருக்கு.

ஜெய்லானி said...

முட்டை கொதிக்கும் வாசனை இங்கு வரை அடிக்குதே!! பேஷ்..பேஷ்.. ரொம்ப நன்னாயிருக்கு...

Mrs.Menagasathia said...

சூப்பர் அக்கா,வாசனி தூள் கிளப்புது.விரதம் முடிந்ததும்தான் நான் வெஜ் சமைக்கனும்..

மகி said...

வெங்காயம்,தக்காளி அரைத்து செஞ்சதில்லை..குழம்பை பார்க்கும்பொழுதே சாப்பிடலாம் போல இருக்கு! கலக்கிட்டீங்க ஆசியாக்கா!:P :)

asiya omar said...

மேனகா,மகி நிச்சயம் செய்து பாருங்க.கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

ஸாதிகா said...

சப்பாத்தி,பரோட்டாவுக்கு ஏற்ற முட்டைக்குழம்பு.

asiya omar said...

ஸாதிகா மிளகு சேர்ப்பதால் சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

srinu said...

MUTTAIKULAMBU NEENGAL SONNA VITHATHIL SEITHU PARTHU NANDRAGA IRUUNTHATHU. UNGAL RECIPE ELLAME SUPER

Asiya Omar said...

Srinu, செய்து பார்த்து பின்னூட்டமும் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

Mahi said...

ஆசியாக்கா, முட்டை குழம்பு வைச்சு திருப்தியா சாப்பிட்டும் ஆச்சு! சாதத்துடன் சூப்பரா மேட்ச் ஆச்சு, அப்பளம் கூட இல்லை! ;)

பகிர்வுக்கு நன்றிக்கா!

Asiya Omar said...

செய்து பின்னூட்டமும் தந்தமைக்கு மகிழ்ச்சி மகி.மிக்க நன்றி.

kamalaveni said...
This comment has been removed by the author.
Asiya Omar said...

மீடியம் சைஸ்- சுமார் 100கிராம் வெங்காயம்,100 தக்காளி உங்க டேஸ்ட்க்கு கமலவேணி.

kamalaveni said...
This comment has been removed by the author.