Sunday, March 14, 2010

கிரில் கிங் ஃபிஷ் ஃப்ரை

எனது டிப்ஸ் மற்றும் அனைத்து இடுகைகளை தமிழ்குடும்பத்தில் காண இந்த பகுதிக்கு செல்லவும். கிரில் கிங் ஃபிஷ் ஃப்ரை செய்முறையை படங்களுடன்  காண தமிழ்குடும்பத்தை கிளிக்கவும்.

அங்கு செல்ல முடியாவிட்டால் இதோ உங்களுக்காக குறிப்பு:

தேவையான பொருட்கள் :

 கிங் ஃபிஷ் – 1 கிலோ
உப்பு தேவைக்கு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

 
மசாலா தயாரிக்க :

சில்லி பவுடர் – 1 டீஸ்பூன்
சிக்கன் 65 மசாலா – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் அரைஸ்பூன்
எலுமிச்சை பாதி
சோய் சாஸ் – 2 டீஸ்பூன்
பூண்டு தட்டிக்கொள்ள – 4 பல்
உப்பு தேவைக்கு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் 
 
 செய்முறை:
தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும்.

முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து துண்டு போட்டு கழுவி,மஞ்சள் ,உப்புத்தூள் கலந்து  கால் மணி நேரம் ஊறவைக்கவும்.

பின்பு திரும்பவும் கழுவி மசாலா பொருட்கள் தயாரிக்க கொடுத்த பொருட்களை கலந்து பேஸ்டாக்கி வைக்கவும்.
மீனை ஒவ்வொரு துண்டாக எடுத்து மசாலாவை தடவவும். ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
பின்பு எலக்ட்ரிக் அல்லது கேஸ் ஒவனில் இரண்டு பக்கமும் அனல் வருவது போல் செட் பண்ணவும்.முற்சூடு 5 நிமிடம் செய்யவும்
 கிரில் ப்லேட்டில் மீணை அடுக்கவும்
 ஒவனில் வைத்து மூடவும். மீன் ஓரளவு வெந்தவுடன் திருப்பி வைக்கவும்.
அடுத்த பக்கமும் வெந்தவுடன் எடுக்கவும்.மீன் சீக்கிரம் வெந்து விடும்,அரை மணிக்குள் ஆகிவிடும்
 சுவையான கிங் ஃபிஷ் கிரில் ரெடி.மீனை சூடாக காய்கறி மற்றும் விரும்பிய உணவுடன் பரிமாறவும்.
எண்ணெயில் பொரித்து சாப்பிடுவதை விட கிரில்செய்து சாப்பிடுவது ஆரோக்கியமாகும்.
இது பொரித்து சாப்பிடும் மீனின் ருசி போலவே இருக்கும்.


தமிழ்குடும்பம்.காமில் நான் எண்ணற்ற டிப்ஸ்,சமையல் குறிப்புக்கள் மற்றும் பல்வேறு என்னுடைய இடுகைகளை zaru என்ற பெயரில் கொடுத்து உள்ளேன்.zaru -வின் விரிவாக்கம் zaahid rumaana என் பிள்ளைகளின் பெயரின் ஆரம்ப எழுத்துக்கள் தான். இந்த கிரில் கிங் ஃபிஷ் ரெசிப்பியை செய்து பார்த்து கருத்துக்களை சொல்லவும். எனக்கு தமிழ்குடும்பத்தில் டிப்ஸ்க்காக புத்தகப்பரிசு அறிவித்தார்கள்,அது கைக்கு கிடைத்ததும் அதனை பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. -ஆசியா உமர்.

12 comments:

Mrs.Menagasathia said...

ஆசியாக்கா பிஷ் பிரை சூப்பராயிருக்கு.நீங்கதான் ஜாரு என்ற பெயரில் குறிப்பு தருவது எனக்குத் தெரியுமே.....

Chitra said...

mouth-watering.

ஜெய்லானி said...

இது போல அடிக்கடி லிங்க் தருவது நல்லதுதான். அசத்துங்க!!!

athira said...

ஆசியா இப்பத்தானே தெரியுது உங்களைப்பற்றி... இன்னும் என்னவெல்லாம் ஒளிச்சுவச்சிருக்கிறீங்க?:). முறைக்கப்படாது.

நான் அங்குபோய் இன்னும் பார்க்கவில்லை, பிஸ் பிறை என்றதும் ஓடிவந்திட்டேன்... படம்பார்க்கவே சூப்பராக இருக்கு.

asiya omar said...

மேனகா,கொஞ்சநாளாக பார்க்கமுடியலை,வீடு ஷிஃப்டிங் முடிந்ததா?உனக்கு தெரியும் என்று எனக்கும் தெரியுமே.

asiya omar said...

Thanks Chitra.

asiya omar said...

ஜெய்லானி,நம்மால் முடிந்தது.மகிழ்ச்சி.

asiya omar said...

அதிரா,முதலில் டிப்ஸ் என்று கொடுக்க ஆரம்பித்தது தமிழ்குடும்பத்தில் தான்,அதன்பின்பு அறுசுவை தெரியவந்து நல்ல தோழியர் கூட்டம் அமைந்ததால் அங்கு குறிப்பு கொடுக்க ஆரம்பித்தேன்.எனக்கு ஊக்கம் கொடுத்தது அதன் பங்கு ஜலீலா,தனிஷா இவர்களையே சாரும்.

மங்குனி அமைச்சர் said...

//மரணம் பற்றி சுஜாதா//

சாரி நான் ரொம்ப லேட் , அருமையான பதிவு, காலம் ஒரு மிகசிறந்த மருந்து, அது எல்லாவற்றையும் மெதுவாக மறக்கசெயும்
1 ) குஜராத் பூகம்பத்தில் இறந்துபோன தாயின் மார்பில் பால்குடித்த அந்த குழந்தையின் போடோ ...................
2 ) கும்பகோணம் பள்ளி தீ விபத்து , அனைவரும் குழந்தைகள் .................

3 ) சுனாமி - அழக்கூட ஆள் இல்லாமல் அழிந்த குடும்பங்கள்.....................................
இவை அனைத்தையும் நாம் கொஞ்சம், கொஞ்சமாக மறந்துகொண்டுள்ளோம்.

எல்லாம் கடந்து போகும்,நம் மரணம் உட்பட .................................

asiya omar said...

அமைச்சரே,சீரியஸும் நல்ல வருதே உங்களுக்கு,அருமையான கருத்து.

Mrs.Menagasathia said...

வேறு வீட்டில் நல்லபடியாக வந்துவிட்டோம்.ஓரளவுக்கு செட்டிலாகியாச்சு.நெட் கனெக்‌ஷன் நேற்றுதான் வந்தது.வந்ததும் ப்ளாக் பக்கம்தான் பார்வை....

asiya omar said...

மேனகா புதுகிச்சன்,புதியதை நிறைய எதிர்பார்க்கலாம் தானே.