Monday, March 15, 2010

பின்னூட்ட குலசாமிக்கு ஒரு படையல் (தொடர் பதிவு)

கன்டிசன்ஸ்:

1 ) உங்களுக்கு வந்த , நீங்க அனுப்பிய பின்னூட்டங்கள்ள உங்களுக்கு பிடித்த பத்து
2 ) மொக்கைக்கு முன்னுரிமை
3 )காப்பி அடிக்க கூடாது (டீ வேனா அடிச்சுக்கல்லாம்)
4 ) :-) , :-)) இப்படி போடக்கூடாதுஅப்புறம் இது தான் முக்கியமான கன்டிசன்
5) மேலே உள்ள எந்த கன்டிசனையும் பாலோ பண்ணக்கூடாது.

எனக்கு பிடித்த 10 பின்னூட்டம்
இன்கமிங்ஸ்
1.மங்குனி அமைச்சர்.
ஹலோ ஹலோ..... ???ஹலோ ஆசியா உமர் இருக்காங்களா ????ஹலோ சாரி மேடம் ராங் நம்பர் *நம்பர் கரெக்டா தானே இருக்கு அப்புறம் எப்படி ராங் நம்பராகுது ?லாரி டிரைவர் :டேய் லூசு நீ சாவுறதுக்கு என் வண்டி தான் கிடசுச்சா ரோட்ட பாத்து பைக்க ஓட்ரா

2.ஸாதிகா
யம்மாடி ஆசியாதோழி..இந்த இடுகையை இன்னும் நாலு தடவை படிச்சால் நான் லூஸாகித்தான் விடுவேன்ப்பா..ஹாஹாஹா...
3.ஜெய்லானி
///மங்குனி அமைச்சர் said...மேடம் சுடு தண்ணி எப்படி வக்கிறதுன்னு ஒரு 4 பக்கதுகுள்ள எழுதுங்களேன் //மங்குனி சுடுதண்ணில இதுவர குளிச்சதே இல்லையா ? 4 பக்கத்துக்கு கேக்கிர !! பாத்துயா!!கப்சி ஸ்மெல் அடிக்குது..டீக்கடையில ஒரு கிளாஸ் வாங்கு அது போதும் உனக்கு.

4.கவிசிவா
ஆசியா கவிதை அருமை. ஏதோ தோட்டத்தினுள் நுழைந்த உணர்வு. ஹ்ம்ம்... நானும்தான் தினம் தினம் என் தோட்டத்திற்கு தண்ணீர் விடுகிறேன். ஒரு செடி கூட என்கிட்ட பேச மாட்டேங்குது :-(

5.ஜலீலா
ஆசியா உங்கள் மகள் இந்த பொட்டெட்டோ பிரை சாப்பிட்ட ஆனந்தம் தெரிகிறது.நானும் அடிக்கடி, மோர் குழம்பு, ரசம் சாதத்திற்கு செய்வேன், சூப்பரா இருக்கும்.முன்பு ஒரு நாள் ஒரு தெரிந்தவரை பார்க்க போகும் போது அவங்க ஷேரிங் பாக்கிஸ்தானி இந்த உருளையை சின்னதா கட் செய்து , எம்மாடி பிரெஞ்ச் பிரை போல் நிறைய எண்ணையில் ஒரு கிலோ அளவிற்கு பொரித்து கொண்டு இருந்தார்கள்.

6.சகோ.ஹைஷ்
அது எப்படி எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி அமீபா, உலக வரைபடம் அல்லது 5 கண்டங்களில் ஏதாவது ஒரு கண்டம் போலவே தோசை சுடுகிறீகள்.நானும் திருமணம் ஆன புதிதில் அமீபாவைப் பார்த்து லதாவுக்கு ட்ராப்டிங் மெஷின் வைத்து எப்படி வட்டமாக தோச்சை சுடலாம் என சொல்லிக் கொடுத்து இருக்கேன்...:)

7.இலா
Sometimes i fear to die ! Oh! God!! I have not done any good to anyone so far.Especially when you are in hospital or when sick! Then I pray god ! If I have to cross this hurdle and live to see day light I will change the way i see world or do something worthwhile.. Days go by untill i see me in the same boat again! For I fear to die that I have not accomplished my actions to gratify my existence... Asiya Akka! I liked your version of it... Everyone has an opinion!

8.மங்குனி அமைச்சருக்கு
அய்யா மங்குனி ,திடீர்னு வந்து கமெண்ட்ல கலக்குறீங்க,கமெண்ட் கருப்புன்னு பேரு வைக்கலாம் போல இருக்கு.

9.கிருஷ்ணவேல் சார்
Asiya, today only I could spare time to fully go through your blog. Really, we, especially I am so astonished about your neat, cool and natural presentation of each and every article. We are so proud that we had also been your favourite guests and tasted some delicious foods since 1992. Please continue the simplicity in writing - With best wishes Krish & Radhika

10.சுமஜ்லா
அக்கா, என்ன சுவையா சொல்லி இருக்கீங்க?!! அது என் போன்ல இருந்து தான் வந்ததுன்னு சொல்லாம விட்டுட்டீங்க! ஆனா, நீங்க பயந்திங்களோ இல்லையோ, போலீஸ்னதும் நான் பயந்தே போயிட்டேன். ஏதோ, விளையாட்டு எஸ்.எம்.எஸ்.னு நினைத்து நானும் ஸ்க்ரோல் பண்ணி பண்ணி பார்த்தேன். மிரட்டிட்டீங்க!

அருமையான வாய்ப்பு தந்த மங்குனி அமைச்சருக்கு என் முதற்கண் நன்றி,(இதற்கும் கமெண்ட் வரும்?)என்னால் முடிந்தது இவ்வள்வு தான்பா.மொக்கையா எழுதனும்னால் அத்தனையும் உங்க கமெண்டாகத்தான் இருக்கும்.மற்ற தோழிகளோடதும் இருக்கு எல்லாமே சூப்பர் தான்.எதை விடுவது,எதை எழுதுவதுன்னே தெரியலை.பின்னூட்டம் தந்து ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இந்த தொடர்பதிவை ஸாதிகா,செந்தமிழ்செல்வி,அதிரா,ஜீனோவை தொடர்ந்து அசத்த வேண்டுகிறேன்.மங்குனியே நமக்கு தெரிஞ்சவங்க எல்லாத்தையும் தொடர சொல்லிட்டாரே.நான்கு தாங்க நமக்கு பிடித்த எண்.அதனால் நான்கு பேரை அழைத்து இருக்கேன்.

26 comments:

ஸாதிகா said...

தோழி பதிவுலகிற்கு வந்த கொஞ்சூண்டு நாளிலேயே இவ்வளவு தேறிட்டீங்க..சபாஷ்.(காதுலே புகை வருது தோழி)

Chitra said...

nice comments

ஜெய்லானி said...

மொக்கைக்கு ரெடி ஆயிட்டிங்கனு சொல்லுங்க!!!

ஜீனோ said...

அப்பூ...அப்பூ...ஜீனோக்கு வச்சிட்டாங்க ஆப்பூ!! ஆசியா சிஸ்டர்,பெரியவங்களை எல்லாம் கூப்ட்டுட்டு சைக்கிள் கேப்புல இப்பூடி இந்த அப்பாவிய மாட்டி உட்டீங்களே?

ஜீனோ போடறது எப்பவுமே மொக்க.ஸோ,திஸ் இஸ் ஓகை..வில் டூ இட் இன் த வீக் எண்ட்.
ஜீனோவயும் மதிச்சி எயுது-ன்னு சொன்னதுக்கு டாங்ஸூ!(நற..நற...நற...கர்ர்ர்....ர்ர்ர்...ர்ர்!!)

மங்குனி அமைச்சர் said...

ரொம்ப தேங்க்ஸ் மேடம்

asiya omar said...

ஸாதிகா நன்றி.காதுல புகை வருதா?நான் நம்பமாட்டேன்.

asiya omar said...

Thanks chitra.

asiya omar said...

ஜெய்லானி நீங்க சொன்னா சரிதான்.

asiya omar said...

ஜீனோ போடற மொக்கை நிறைய பேருக்கு தெரியவேண்டாமா?எவ்வளவு நாளைக்கு குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது?வருகைக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

asiya omar said...

மங்குனி சிம்பிளாக முடிச்சிட்டீங்க.வந்து எப்பவும் போல அசத்துங்க.

ஜெய்லானி said...

//மங்குனி சிம்பிளாக முடிச்சிட்டீங்க.வந்து எப்பவும் போல அசத்துங்க//

பாத்துங்க, அப்புறம் உச்சி வெயிலில் ஆந்தை எழுப்பிவிட்ட கதைபோல ஆயிடும்.

athira said...

ஒவ்வொரு பதிவுமே நன்கு சிரிக்கவைத்துவிட்டது.

ஆசியா, இப்பத்தானே பார்த்தேன்... இப்படி மாட்டிவிடுறீங்களே... சும்மா இருக்கிற என் கிட்னிக்கு வேலை வச்சிட்டீங்களே... அதுசரி எமக்கு வந்த பதிவுகளில் மட்டுமேயா தெரிவுசெய்யோணும்? முயற்சிக்கிறேன்.. முடிந்தால் தொடர்வேன்...

asiya omar said...

அதிரா,உங்கள் ப்ளாக்கிலும்,நீங்க மற்ற ப்ளாக்கில் கொடுத்த கமெண்ட்ஸ் எதுவானாலும் 10 செலெக்ட் பண்ணி போடுங்க,ரசிக்கும் படியாய் பின்னூட்டம் கொடுப்பதில் உங்களை மிஞ்சமுடியாது.சில சமயம் பின்னூட்டம் வாசிப்பதற்கே உங்கள் ப்ளாக்கிற்கு வருவதுண்டு.

Jaleela said...

ஐ நானும் இந்த பத்தில் ஒரு ஆளா?

அதிரா கிட்னிய யுஸ் பண்ணமலே உங்களுக்கு வரும் போடுஙக்ள்.

asiya omar said...

ஜலீலா எனக்கு அதிக பின்னூட்டம் கொடுதவர்களில் நீங்களும் ஒருவர் ஆச்சே.மங்குனி உங்களையும் அழைத்து இருக்கிறார்.தயார் செய்யுங்கள் உங்கள் பின்னூட்டக்குவியலில் இருந்து.

செந்தமிழ் செல்வி said...

ஆசியா,
இப்ப தான் பார்த்தேன். என்னைப் போய் தொடர கூப்பிட்டிருக்கீங்க!!! ஓகே, முயற்ச்சிக்கிறேன்:-) இன்று விட்டுடுங்க. நாளைக்கு, சரியா?

athira said...

ஆசியா கொஞ்சம் குறை நினைக்காமல்.. கிளியர் மை டவுட் பிளீஸ்ஸ்..

நான் கொடுத்த பின்னூட்டங்களா? அல்லது எனக்கு அடுத்தவர்கள் கொடுத்த பின்னூட்டங்களா போடவேண்டும்...?

ஜலீலாக்கா.. இப்படியெல்லாம் சொல்லி என்னைப் பப்பா மரத்தில் ஏத்துறீங்களேஎஏஏஏஎ:)

asiya omar said...

செல்விககா உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பின்னூட்டங்களை தேர்வு செய்து போடுங்க.சுவாரசியமான பின்னூட்டப்படையலே உண்டே.

asiya omar said...

அதிரா,உங்கள் ப்ளாகில் உங்களுக்கு மற்றவர்கள் பகிர்ந்த பின்னூட்டமோ,அல்லது நீங்கள் ம்ற்ற ப்ளாக்கில் கொடுத்ததாக இருக்கலாம்.எந்த கண்டிஷனும் கிடையாது,உங்கள் இஷ்டப்படி பின்னூட்டம் தேர்வு செய்து 10 -ஐ போடுங்க.

athira said...

ரொம்ப நன்றி ஆசியா.... பிளேன் புறப்பட்டுவிட்டது... 2/3 நாட்களில் லாண்ட் பண்ணிவிடும்.... பின்னூட்டங்களோடு என் பக்கத்தில் கிக்.கிக்...கீஈஈஈஈஈஈஈஈஈஈ

Mrs.Menagasathia said...

நல்லாயிருக்கு அக்கா.இந்த மொக்கைக்கூட தொடர்பதிவா....

ஸாதிகா said...

ஆசியா,இந்த தொடர் பதிவுக்கு என்னையும் அழைத்து இருக்கிறீர்கள்.நானும் அவசராவசரமாக பின்னூட்டங்களைப்பார்த்து நோட் பேடில் காப்பி பேஸ்ட் செய்து வைத்து போஸ்ட் பண்ணும் சமயத்தில் டெலிட் ஆகிவிட்டது.இப்பொழுது ஊர் சுற்ற கிளம்பியாச்சு.கொஞ்ச நாட்களுக்கு பிசி.மறுமுறைப்பார்க்கலாம்.நீங்கள் யூ ஏ ஈ இருந்தால் போன் நம்பர் மெயில் பண்ணுங்கள்.

kavisiva said...

ஆசியா நாம்பளும் பதிவர் ஆயிட்டோம்னு அஃபீஷியலா அறிவிச்சாச்சு. பின்னே தொடர்பதிவு எழுதாம் ஒரு பதிவரா இருக்க முடியுமா?!

என்னுடைய பின்னூட்டமும் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி.

Jaleela said...

ஆயிரம் பின்னூட்டம் இருக்கு இதில் எதை தேர்வு செய்வது என்று புரியவில்லை

prabhadamu said...

போங்க என்கிட்ட சொல்லவே இல்லை. உங்க பேச்சு டூஊஊஊஊஊஊஉ.

asiya omar said...

டூவெலலாம் போடக்கூடாது,சமர்த்துப்பொண்ணு தானே ப்ரபா?