Friday, March 19, 2010

மீன் முருங்கைகாய் சால்னா

தேவையான பொருட்கள் ;


ஊளி மீன் - 300கிராம்,வெங்காயம்-2,தக்காளி - 2,புளி -எலுமிச்சை அளவு,பச்சை மிளகாய் - 3,பூண்டு - 6பல்,மல்லி,கருவேப்பிலை - சிறிது, தேங்காய் -அரைத்தது - அரை கப்,உப்பு - தேவைக்கு,எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,

கடுகு,வெந்தயம்,உளுத்தம்பருப்பு - தலா அரைஸ்பூன்.மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,மீன் மசாலா - 2 டேபிள்ஸ்பூன்கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு,வெந்தயம் தாளித்து நறுக்கிய வெங்காயம்,தக்காளி,தட்டிய பூண்டு மிள்காய் சேர்த்து,உப்பு சேர்த்து வதக்கவும்.வதங்கியவுதும் மிளகாய்த்தூள்,மீன் மசாலா சேர்க்கவும்.


புளித்தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

முருங்கைக்காயை தனியே உப்பு மஞ்சள்,தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
புளித்தண்ணீர் சேர்த்து மசாலா நன்கு கொத்தித்ததும் மீன் போட்டு 5 நிமிடம் கழித்து முருங்கைக்காய் சேர்த்து அகப்பை போடாமல் கொதிக்க விடவும்.மீன் ,முருங்கைக்காய் வெந்தவுடன் அரைத்த தேங்காய் விட்டு கொதிவந்து குழம்பு மணம் வந்து எண்ணெய் மேலே வரவும் இறக்கவும்.செம ருசியான மீன் முருங்கைக்காய் சால்னா ரெடி.இதனை சாதம் ,சப்பாத்தி,நெல்மாவு ரொட்டியுடன் பறிமாறலாம்.

23 comments:

Mrs.Menagasathia said...

மீனில் முருங்கைக்காய் போட்டு செய்ததில்லை.உங்களுடையது வித்தியாசமா நல்லாயிருக்குக்கா. ஊளி மீன் என்ன மீன்? இப்போதான் அந்த பெயர் கேள்விபடுகிறேன்...

ஜெய்லானி said...

ஊளி மீனுன்னா என்ன? அது மட்டும்தானா இல்லை வேற மீன்லயும் செய்யலாமா??

shahana said...

drumsticks are my favorite.This method is new.Im bookmarking this recipe dear!

Chitra said...

புதிய மீன் டிஷ். கேள்விப்பட்டதே இல்லை. ம்ம்ம்ம்.....

மகி said...

ஆசியாக்கா..வெஜிடேரியன் ரெசிப்பி ப்ளீஸ்! :)

asiya omar said...
This comment has been removed by the author.
asiya omar said...

ஜெய்லானி,மேனகா,ஊளி மீனை ஆங்கிலத்தில் barracuda சொல்வாங்க,ஷாப்பில் இப்படிதான் போட்டு இருப்பாங்க.எந்த மீனோடும் முருங்கைக்காய் சேர்த்து செய்யலாம்.

asiya omar said...

shahana,chitra thankspa.

asiya omar said...

mahi surely i will give veg recipe also.

ஸாதிகா said...

ஆசியா மீனில் முருங்கைக்காய் போட்டு சமைப்பது நல்ல சுவையாகத்தான் இருக்கும்.அதே போல் சிக்கனிலும் முருங்கைக்காய்ப்போட்டு குருமா வைத்தால் மணம் ஊரைத்துக்கும்.படம் கொள்ளைஅழகு.

asiya omar said...

thanks shadiqah,i also use to add drumsticks in mutton ,chicken and the taste is really good.

prabhadamu said...

அக்கா இப்படி எல்லாம் செய்து காம்பிச்சு பசிய அதிகம் ஆக்குரது நல்லா இல்ல சொல்லிட்டேன் அமா! எனக்கு ஒரு கொஞ்சம் பார்சல் அனுப்பினாதான் அடுத்த பதில்.

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ஆசியா!

முருங்கைக்காய் சேர்த்து மீன் குழம்பு பார்ப்பதற்கு ரொம்பவும் அழகாக இருந்தது. சுவையிலும் ரொம்ப நன்றாக இருக்குமென நினைக்கிறேன். நான் மட்டன், ரால் இவற்றோடு முருங்கைக்காய் சேர்த்து சமைத்திருக்கிறேன். மீன் குழம்பில் இனிதான் சேர்த்து செய்ய வேண்டும்.

athira said...

Asia!! super recipe and photos yum...meeeeee. I will try soon.

asiya omar said...

மனோ அக்கா உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.உங்கள் ப்ளாக் சூப்பர்.

asiya omar said...

அதிரா நிச்சயம் செய்து பாருங்கோ.அருமையாக இருக்கும்.

மங்குனி அமைச்சர் said...

//நெல்மாவு ரொட்டியுடன் //

சாரி மேடம் டூ டேஸ் லேட் ,
ஆமா அது நெல்லு மாவு ரொட்டியா? இல்ல அரிசி மாவு ரொட்டியா ?

asiya omar said...

மங்குனி எங்க ஊரில் வழக்கத்தில் உள்ள பேச்சுமொழியில் அரிசிமாவு ரொட்டியை நெல் மாவுரொட்டின்னுதான் சொல்லுவோம்.அப்பாடா பதில் போட்டாச்சு.

asiya omar said...

நிச்சயம் ,இனி செய்வதை எல்லாம் பார்சல் அனுப்பிட்டு தான் பப்ளிஷ் போதுமா?ப்ரபா.

Mrs.Menagasathia said...

//ஜெய்லானி,மேனகா,ஊளி மீனை ஆங்கிலத்தில் barracuda சொல்வாங்க,// ஓஒ இந்த மீனா தெரியும்க்கா.இது நீளமா மூக்கு கூரா இருக்கும் தானேக்கா.அதை நாங்க கிழங்கா மீன்னு சொல்லுவோம்.ரொம்ப ருசியா இருக்கும்.

asiya omar said...

மேனகா கிழங்கான் மீன் ஐவரி கலர்ல பார்க்க அழகாக சின்னதாக,அதற்கு பெயர் lady fish -பார்த்ததாக நினைவு.அது வேறு.கூகிளில் burracuda -வை போய் பாருங்க.

kavisiva said...

ஆசியா நேத்துஇந்த மீன் முருங்கைக்காய் சால்னா செய்தேன். சாதத்துகு சாப்பிட்டு மீதி இருந்ததை தோசைக்கு வைத்தும் சாப்பிட்டோம். சூப்பரா இருந்துது.நன்றி ஆசியா.

அடுத்தது முருங்கைக்காய் பருப்பு செய்யலாம்னு இருக்கேன். இப்போ இல்ல. இப்ப சிங்கப்பூர் போறேன் போயிட்டு வந்ததுக்கு அப்புறம் :)

asiya omar said...

ஆகா,கவி செய்து அசத்தி பின்னூட்டமும் தந்ததில் எத்தனை மகிழ்ச்சி தெரியுமா?