Wednesday, March 24, 2010

என்னைக் கவர்ந்த பத்து பெண்கள்

இந்த அருமையான தொடர் பதிவில் என்னையும் கோர்த்துவிட்ட மகிக்கு மிக்க நன்றி.எல்லாரும் இதைபற்றி எழுதி களைத்து அப்பாடான்னு இருக்கும் பொழுது நாம எழுதினால் கொஞ்சம் விறுவிறுப்பாக இருக்காது?நினைப்பு தான். எனக்கு பிடித்த பெண்களை பற்றி அனைவரும் எழுதி தள்ளிவிட்டர்கள்,இவர்களையும் அவர்களோடு சேர்ப்போம்.

1. மல்லிகா பத்ரிநாத் - சமையற்கலை நிபுணர்.
சமையலில் இவங்களோட எளிமையான அணுகுமுறை எனக்கு ரொம்ப பிடிக்கும்,தொலைக்காட்சியில் இவரின் செய்முறையை பார்த்து நாமும் இப்படி குறிப்பெல்லாம் கொடுக்கணும் என்று ஒரு காலத்தில் ஆசைப்பட்டேன்.அதன் பின்பு இப்ப சந்தர்ப்பம் கிடைத்து கொடுத்து வருகிறேன்.


2. எலிசபெத் மகாராணி
இவர் நடை உடை பாவனை எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும்.எங்க அம்மாவின் வீட்டில் இளம்வயது எலிசபெத் மகாராணியின் படம் ஒன்று மாட்டப்பட்டு இருக்கும்.அங்கு போகும் பொழுதெல்லாம் அதனை ரசிக்காமல் வந்ததில்லை.

3. சரோஜினி நாயுடு அம்மையார் இவஙக்ளை உலகே அறியும்,'nightingale of india ' என்று அழைக்கப்படுபவர்.தேர்ந்த கவி,சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்.

4.எழுத்தாளர் சிவசங்கரி: எனக்கு மிகவும் பிடித்த பெண் எழுத்தாளர்.இவருடைய இயல்பான எழுத்து நடையால் எல்லோர்ரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த புகழுக்குடையவர்.இவருடைய நாவல்கள் சினிமாவாகி சரித்திரம் படைத்து இருக்கிறது.ஆல்கஹால்,ட்ரக் இதனைபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் இவருடைய கதைக்கள் மிகப்பிரபலம்.
5.ஷோபனா ரவி , தமிழ் செய்தி வாசிப்பாளர்.தூர்தர்சனை இவருடைய செய்தி வாசிப்பை கேட்கவும்,அவரின் நேர்த்தியான உடை,அலங்கார அழகை பார்க்கவே வைப்பதுண்டு.நான் இவரின் மிகப்பெரிய ரசிகை. இவர் செய்தி வாசிக்கும் தோரணையே அனைவரையும் கவரும்.
6.சுதா மூர்த்தி -சமூக சேவகி ,எழுத்தாளர்.

இன்போசிஸ் பவுண்டேஷன் நடத்தி வருபவர்.இன்போஸ்சிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் துணைவியார்.ஒரு தேர்ந்த பொறியளால்ர்.இவருடைய அனுபவ எழுத்துக்கள் ,கதைகள்21 மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு எல்லோராலும் விரும்பி வாசிக்கப்படுகிறது. இவரைப்பற்றி ஒரு தனி இடுகையே இடலாம்,அத்தனை மதிப்பும் மரியாதையும் இவர் மீது எனக்கு உண்டு.

7. பழம்பெரும் ஹிந்தி நடிகை -நர்கிஸ் தத்

இவரின் அழகில் மயங்காதோர் இல்லை.இவருடைய் உருக்கமான நடிப்பை பார்க்கவே mughul-e-azam படத்தை திரும்ப திரும்ப பார்த்திருக்கிறேன்.

8.பத்மா சுப்ரமணியம்: பரதநாட்டியக்கலைஞர் -பரத நாட்டியம் என்றாலே இவரின் பெயர் தான் முதலில் நமக்கு நினைவிற்கு வரும்.இவர் ப்ரோகிராம் ஒளிபரப்பினால் அப்படியே நேரம் போவது தெரியாமல் லயித்து இருந்துவிடுவதுண்டு.

9.அஞ்சு பாபி ஜார்ஜ் : விளையாட்டு வீராங்கனை.இந்தப்படம் எனனோட பேவரைட்,என் ரூமில் நீண்ட காலம் வைத்து இருந்தேன்.அழகும் அறிவும் ஆற்றலும் படைத்தவர்.விளையாட்டுதுறையில் இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்தவர்.
10.சுஆதா அஸ்லம் ,என் இனிய தோழி:
என்னுடன் கல்லூரியில் பயின்றவர்.மிக நெருக்கமான தோழியரில் முதன்மையானவர்.என் பால்யம் முதல் இன்று வரை பழகியவர்களுல் என் மனதைக்கவர்ந்த தோழி.என் மீது பாசமும்,கரிசனையும்,நீங்கா அன்பும் கொண்டவர்.எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தூய நட்பு.எப்பவாவது சந்தித்தாலும்,போனில் பேசினாலும் அதற்கு காரணம் அவளாகத்தான் இருப்பாள்,நான் போன் பண்ணனும்னு நினைப்பேன் அவள் உடன் பேசிவிடுவாள்.நீ எங்கே போனாலும் விடமாட்டேன்னு சொல்வாள்.எல்லாவற்றிலும் சிற்ந்த என் உயிர்த்தோழி.1985 முதல் பழக்கம்.
இந்த பெரிய சங்கிலித்தொடரில் நானும் ஒருத்தி என்று நினைக்கும் பொழுது மிக சந்தோஷமாக உள்ளது.வாய்ப்பிற்கு மகிழ்ச்சி மகி.
-ஆசியா உமர்.

தங்கை சிங்கை ப்ரபாதாமுவை தொடர்ந்து பதிவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.


25 comments:

Mrs.Menagasathia said...

எழுத்தாளர் சிவசங்கரி எனக்கும் பிடித்தமானவர்..உங்கள் நட்பு என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது..

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் ஏற்கவும்.
http://sashiga.blogspot.com/2010/03/blog-post_24.html

Chitra said...

ஒவ்வொருவரையும், நீங்கள் எந்த அளவு ரசித்து இருக்கிறீர்கள் என்பதை, நீங்கள் சொல்லி இருக்கும் விதத்திலேயே தெரிந்து கொள்ளலாம். :-)

மங்குனி அமைச்சர் said...

நல்ல செலக்சன் மேடம்

asiya omar said...

மேனகா கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி. ப்ளாக்கர் உலகில் நான் பெற்றுக்கொள்ளூம் முதல் விருது.ரொம்ப சந்தோஷமாக இருக்கு.மிக்க நன்றி.

asiya omar said...

ஆமாம் சித்ரா,இன்னும் என் வட்டம் பெரிது,சுருக்கி கொண்டேன்.

asiya omar said...

இந்த மேடம் போடுவது ஒரு மாதிரி இருக்கு,அமைச்சரே.

ஜெய்லானி said...

//என் மீது பாசமும்,கரிசனையும்,நீங்கா அன்பும் கொண்டவர்.எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தூய நட்பு.எப்பவாவது சந்தித்தாலும்,போனில் பேசினாலும் அதற்கு காரணம் அவளாகத்தான் இருப்பாள்,நான் போன் பண்ணனும்னு நினைப்பேன் அவள் உடன் பேசிவிடுவாள்.நீ எங்கே போனாலும் விடமாட்டேன்னு சொல்வாள்//

மாஷா அல்லாஹ்....உண்மையான நட்பு என்பது இதுதான். இருவரும் இவ்வுலகில் வாழும் வரை தொடர என் வாழ்த்தும் , பிராத்தனையும். இதற்கு மேல் வார்த்தை வரவில்லை. pass to my wish , to your dear and near friend.

athira said...

ஆசியா, கலக்கிட்டீங்க.... வர வர நிறைய ரைப்பண்ணி எல்லோரையும் அசத்துறீங்கள்.. பலகலையும் இருக்கு உங்களிடம்... தொடர வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

ஆஹா தோழி அருமையான் தேர்வு.

kavisiva said...

நல்ல தேர்வுகள் ஆசியா. ஷோபனா ரவியை எனக்கும் ரொம்ப பிடிக்கும். அந்த எளிமையான ஆட அலங்காரத்தில் அவர் செய்தி வாசிக்கும் அழகே அழகு.

உங்கள் நட்பு இன்று போல் என்றும் இனிதாக தொடர வாழ்த்துக்கள்

Jaleela said...

ரொம்ப சூப்பர் ஆசியா வித்தியாசமான தேர்வு.. உங்களுக்கும் உங்கள் தோழிக்கும் வாழ்த்துக்கள்.

asiya omar said...

அதிரா,ஸாதிகா,கவிசிவா,ஜலீலா உங்கள் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி,நன்றி.

மகி said...

ஆசியாக்கா,அழகாத் தேர்ந்தெடுத்து எழுதிருக்கீங்க..வெகு விரைவில் நீங்கள் வீடியோ ரெசிப்பியும் கொடுக்க வேண்டும். அதற்கு என் மனப்பூர்வமானவாழ்த்துக்கள்!

asiya omar said...

நன்றி மகி.நீ பக்கத்தில் இருந்திருந்தால் உன்னிடமே கேட்டு தெரிந்திருப்பேன்,தட்டித்தடுமாறி இப்ப தான் பதிவுலகில் நடக்க ஆரம்பித்துள்ளேன்.

Ammu Madhu said...

good selection.

prabhadamu said...

ஆசியா அக்கா நீங்க ஜீனியர்க்கா. என்னை போயி குப்பிட்டா நான் என்ன பன்னுரது. எனக்கு புரியலை. என்னை விட அதிகம் பேர் இருக்கும் போது என்னை அழச்சது ரொம்ப சந்தோஷம் அக்கா.


ஆனா நான் என்ன பன்ன முடியும்? எனக்கு தெரியலை. புரியும் படி சொன்னா நல்லா இருக்கும். நன்றிக்கா.


என்னை அழைத்ததுக்கு மிக்க மிக்க நன்றிக்கா.

prabhadamu said...

http://www.tamilish.com/


அக்கா இந்த தளத்தில் போயி நீங்க லாகின் ஆகுங்க. அப்பரம் அதில் இருக்கும் தமிழ் இடுக்கைகளை இணைக்க என்று இருபப்தில் உங்கலுடைய பதிவை இனைக்கனும். நீங்க போடும் பதிவு எத்தனை பேரு படிக்கிராங்க என்று தொரியும். புரியலைனா என்னை கேக்கவும்.

prabhadamu said...

ஆசியா அக்கா என்னை இதுக்கு அழச்சதுக்கு மிக்க நன்றிக்கா. ஆனா படங்கள் உங்க கிட்ட இருந்து எடுத்துக்குட்டா? அதுக்கு அனுமதிப்பிங்கலா? உறவினர்களா இருக்க கூடாது என்று சொல்லி இருகிங்க கொஞ்சம் எழுத்து பிழை இருந்தால் பரவாயில்லையா?

asiya omar said...

ப்ரபா,கூகிளில் தேடினால் கிடைககாத படங்கள் இல்லை.உங்களைக்கவர்ந்தவர்களை போடுங்கள்,தாராளமாக எடுத்து கொள்ளலாம்.

Vijis Kitchen said...

நல்ல செலக்‌ஷன். நல்ல ரசித்து எழுதியிருக்கிங.

asiya omar said...

விஜி,வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

sarusriraj said...

நல்ல தேர்வு

asiya omar said...

சாரு,கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

Roohi said...

பத்துப் பெண்கள் நு சொல்லிட்டு 9 தான் போட்டிருக்கீங்க

asiya omar said...

ரூஹி நல்லா எண்ணிப்பாரு.வருகைக்கு மகிழ்ச்சி.கடைசியாக என் தோழி பேரு போட்டு இருக்கேனே !