Friday, March 26, 2010

முட்டை தக்காளி பொரியலும்,அவார்டும்

தேவையான பொருட்கள்;

முட்டை-2, காய்வெட்டான தக்காளி-4,மிளகாய் - 2,வெங்காயம் - 3,மல்லி,கருவேப்பிலை -சிறிது,எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,கடுகு உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன்,சில்லி பவுடர் -கால்ஸ்பூன்,தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்,உப்பு-தேவைக்கு.


க்டாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு உளுத்தம்பருப்பு,நறுக்கிய மிளகாய்,கருவேப்பிலை தாளித்து,நறுக்கிய வெங்காயம்,தக்காளி,உப்பு,சில்லிபவுடர் சேர்த்து வதக்கவும்.வதங்கியவுடன் முட்டையை அடித்து மேல் ஊற்றி விடவும்.
முட்டை வெந்து வரும்பொழுது தேங்காய் துருவல் போடவும்.


பிரட்டிவிடவும்.சுவையான முட்டை தக்காளி பொரியல் ரெடி.இதனை சாதம்,சப்பாத்தி,ப்ரெட் உடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


மேனகா சத்யா எனக்கு தந்த விருது,மகிழ்ச்சியுடன் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.


To the award winners,please pass this on to your favourite bloggers !

Here are the Rules :

1.Put the logo on your blog or within your post.

2.Pass the award on to 12 bloggers.

3,Link the nominees within your post.

4.Let the nominees know they have recieved this award by commenting on their blog.

5.Show the love and link to person from whom you recieved this Award.


இந்த விருதினை சுமஜ்லா,மகி,சித்ரா,ப்ரபா,கீதாஆச்சல்,ஜெய்லானி,மங்குனி அமைச்சர்,இலாஅதிரா,சகோ.ஹைஷ்,கவிசிவா,தமிழ்குடும்பம் ஆகியவர்களுக்கு பிரியமுடன் வழங்குகிறேன்.மேனகா என் மற்ற தோழிகள் அனைவருக்கும் கொடுத்து விட்டதால் மிக்க மகிழ்ச்சி,பாராட்டுக்கள்.

--ஆசியா உமர்.

31 comments:

prabhadamu said...

என்னுடைய பிளாக்குக்கு ஒரு பரிசு குத்த ஆசிய அக்காவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.அக்கா இதை எடுத்து எப்படி என் பிளாக்கில் போடுவது? எனக்கு தெரியலை?

ஜெய்லானி said...

அடடா எழுத வந்த கொஞ்ச நாளிலேயே அவார்டா! அதுவும் எனக்கே எனக்கா!! கூடவே, முட்டை தக்காளி பொரியலேட.

நன்றி...நன்றி..

ஜெய்லானி said...

அவார்டு தந்ததால் இன்று வித்தியாசமான கமெண்ட் கிடையாது.

asiya omar said...

ப்ரபா,அப்படியே காப்பி,பேஸ்ட் தான்.

asiya omar said...

ஜெய்லானி எப்படியும் 2 கமெண்ட் எழுதிட்டீங்க.நன்றி.

Chitra said...

ஆசியா, விருதுக்கு நன்றி. விருது வாங்குற அளவுக்கு நான்.....????? சரி, முட்டை பொரியலோடு வருவதால் ......... நன்றி.

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

அடடா எழுத வந்த கொஞ்ச நாளிலேயே அவார்டா! அதுவும் எனக்கே எனக்கா!! கூடவே, முட்டை தக்காளி பொரியலேட.

நன்றி...நன்றி..//

டேய் ஜெய்லானி பஸ்டு ஆட குளுப்பாட்டி, மஞ்ச குங்குமம் வச்சு, மாலை போட்டு அப்புறம் தான் .......... பலியிடுவாங்க
ஆனாலும் நீ ரொம்ப நல்லவன் , உடனே கழுத்த நீடிட்ட

மங்குனி அமைச்சர் said...

// asiya omar said...

ஜெய்லானி எப்படியும் 2 கமெண்ட் எழுதிட்டீங்க.நன்றி.//

அனையுற விளக்கு பிரகாசமாதான் எறியும் மேடம், அப்புறம் கடைசி ஆச என்னான்னு கேட்டு அதையும் நெரவேதிடுங்க

மங்குனி அமைச்சர் said...

அப்புறம் அவார்டுக்கு ரொம்ப நன்றி,

டேய் மங்கு இதுக்கு ஜெய்லானி என்னா கமன்ட் போடபோரான்னு தெயரியலையே ?

athira said...

ஆ....ஆசியா... குறிப்பும் சூப்பர்.. அவார்ட்டும் சூப்பர்.. இதை எப்படித் துக்கிப்போய் அங்கே வைப்பதென்றுதான் தெரியவில்லை. மிக்க நன்றி.. என் முதல் அவார்ட்டுக்கு.

asiya omar said...

சித்ரா பிரபல ப்ளாக்கர் நீங்க இப்படி எல்லாம் பிகு பண்ணலாமா?நீங்களே யோசித்தால்,நான்?

asiya omar said...

மங்குனி கச்சேரி ஆரம்பிச்சாச்சா?

தமிழ் குடும்பம் said...

நன்றி ஜாரு உங்க அவார்டுக்கு
தமிழ்குடும்பம்.காம்

Mrs.Menagasathia said...

அருமையான முட்டைப் பொரியல். விருது பெற்ற உங்களுக்கும்,மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!

ஜெய்லானி said...

@@@மங்கு//டேய் ஜெய்லானி பஸ்டு ஆட குளுப்பாட்டி, மஞ்ச குங்குமம் வச்சு, மாலை போட்டு அப்புறம் தான் .......... பலியிடுவாங்க
ஆனாலும் நீ ரொம்ப நல்லவன் , உடனே கழுத்த நீடிட்ட//

அப்டியா மச்சான், அப்ப நேத்து கவிசிவா உனக்கு தந்தாங்களே!! அப்ப உன் தலை இப்பவும் ஈரம்ன்னு சொல்லு!!!

ஜெய்லானி said...

@@@//மங்குனி அமைச்சர் said...அனையுற விளக்கு பிரகாசமாதான் எறியும் மேடம், அப்புறம் கடைசி ஆச என்னான்னு கேட்டு அதையும் நெரவேதிடுங்க//

ஓரே ஒரு ஆசைதாங்க எனக்கு உங்களுக்கு நெல்லைதானே. அங்க அருவா ஃபேமசாமே அதனால இப்ப மங்கு தலை ஈரமா இருப்பதால ஒரே போடா போட்டுடுங்க . இதாங்க என் கடைசி ஆசை!! என்னங்க , நெறவேத்துவிங்களா???????????

ஜெய்லானி said...

@@@ மங்குனி அமைச்சர் said...டேய் மங்கு இதுக்கு ஜெய்லானி என்னா கமன்ட் போடபோரான்னு தெயரியலையே //

அடியேய் ஓந் தலைக்கு ஆர்டர் குடுத்தாச்சுடி..... வீட்டில இன்னைக்கு தல கறிதான்.

//அப்புறம் அவார்டுக்கு ரொம்ப நன்றி,//

நன்றிய நாந்தான்யா சொல்லனும். ஏன்னா ஆசியாக்கா( அவங்க தங்கச்சி பேரும் என் பேரும் ஒன்னுதானே) புண்ணியத்துல கறிகுழம்புதான்...ம்...ம்...எதுக்கும் உப்பு போட்டு குளி.

ஜெய்லானி said...

@@@asiya omar said...ஜெய்லானி எப்படியும் 2 கமெண்ட் எழுதிட்டீங்க.நன்றி//

பாத்திங்களா!! மங்கு விடமாட்டேங்குதே!!

asiya omar said...

அதிரா,நான் மேனுவிடம் இருந்து அப்படியே காப்பி பேஸ்ட் தான்.போஸ்டரா கூட அடிக்கலாம்.

asiya omar said...

தமிழ்குடும்பம் உங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

ஜெய்லானி என் தங்கை இல்லை அவங்க என் அக்கா.அமைச்சரே!ஸ்டாப் த மியூசிக்.உங்க இரண்டு பேரோட கமெண்ட்டை படிக்க வந்த கூட்டத்தை ஹிட் கவுண்ட்ரை பார்த்தாலே தெரியும்.தீடீர்னு இரண்டு டிஜிட் கூடிப்போச்சு.

asiya omar said...

மேனு,அவார்டு வாங்கிட்டு ஒவ்வொரு வீடா கதவை தட்டி மகிழ்ச்சியாக கொடுத்திட்டு வந்தேன்.

shahana said...

so so so tempting!

ஸாதிகா said...

விருதுக்கு வாழ்த்துக்கள் தோழி.முட்டைப்பொரியல்..இதில் சற்று மாசிப்பொடி தூவி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

மகி said...

விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்! விருதுக்கு நன்றி ஆசியாக்கா!

asiya omar said...

thanks shahana.

asiya omar said...

ஆமாம் ஸாதிகா,மாசி தூவினால் இன்னும் நல்ல ருசி தான்.

asiya omar said...

நன்றி மகி.உங்க ப்ளாக்கில் கலக்கிறீங்க.

SUMAZLA/சுமஜ்லா said...

தங்கள் அவார்டுக்கு மிக்க நன்றி! கொஞ்சம் பிஸி இப்போ! மீண்டும் நெரம் கிடைக்கும் போது விரிவாகப் பேசலாம்.

Jaleela said...

முட்டை தக்காளி பொரியலை நாங்க முட்டை குதும்பு என்போம் அவசரத்து உடனே செய்து விடலாம்.

நானும் முட்டை சமையல் இரண்டு மூன்று செய்து போஸ்ட் பண்ண முடியாம இருக்கு.

அவார்டு வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

asiya omar said...

வருகைக்கும் தகவலிற்கும்,வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி ஜலீலா.