Saturday, March 27, 2010

முருங்கையும் மொசுக்கொட்டையும் (கம்பளிப்பூச்சி)

அப்பாடா இப்படியும் ஒரு அவதியை அனுபவிக்கனும்னு இருக்கு போல.வீட்டின் பின்புறம் முருங்கை மரம் இருந்து செழிக்க பூவும்,பிஞ்சும்,காயும்,கீரையும் சாப்பிட்டு மகிழ்ந்தது ஒருகாலம்.
அந்த முருங்கைக்கு என்ன ஆனது.தீடீரென்று ஒரு நாள் மொசுக்கொட்டை-(எங்க ஊரில் இப்படி தாங்க சொல்வாங்க,) (hairy caterpillar)ஒண்ணு இரண்டு கண்ணில் தட்டுப்பட்டது,எடுத்து எடுத்து போட்டேன்,மற்நாள் முழுவதும் கூட்டமாய் கூட்டமாய் மாநாடே போட்டுவிட்டது,பூச்சி மருந்து வாங்கி அடித்தோம்,அடித்த வேளை தான் காணாமல் போகும்,திரும்பவும் கூட்டமாய் எங்கிருந்து வருமோ வந்துவிடும்.காலையில் எழுந்தால் இந்தக்கவலை தான்,மரத்தை என்ன செய்வது என்று யோசனையில் ஒரு மாதம் ஓடியது,


கூட்டமாக மொசுக்கொட்டைதீடீரென்று ஒரு நாள் கை,கால் எல்லாம் அரிப்பு கண்ணில் அரிப்பு,இடது கண்ணில் நீர் வடிந்து கொண்டே இருந்தது,அவில் மாத்திரை,மிளகு கஷாயம்,ஊசி போட்டாச்சு,விஷக்கடி இறக்கியாச்சு கண்ணில் நீர் வடிவதும் அரிப்பும் நிற்கவில்லை.
கண் ஆஸ்பத்திரிக்கு போனால் அங்கு எல்லாம் முடிந்து வர பாதி நாளாகிவிட்டது.இறுதில் பார்த்தால் மொசுக்கொட்டையின் மயிர்க்கால்கள் என் கண்ணில் இருந்ததாம்,டாக்டர் கஷ்டப்பட்டு எடுத்து அந்த அவதியில் இருந்து விடுதலை தந்தார்,அவருக்கு பெரிய சல்யூட் அடிக்காத குறைதான்.


இதற்கிடையில் அக்கம் பக்கம் எங்கவீட்டில் மொசுக்கொட்டை வந்துவிட்டது என்று ஒரே அமர்க்கள்ம்.கொத்துக்கொத்தாய் சாட்டைசட்டையாய் வாட்டசாட்டமாக காய்க்கும் முருங்கையை வெட்ட வேண்டிய வேளை வந்தது.பச்சை பசேல் என்று இருந்த மரம் ஏதோ முடி எல்லாம் உதிர்ந்து எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன் கதை தான்.


முருங்கைமரத்தை வெட்ட ஆள் வந்தாச்சு.அப்பதான் திடீரென்று ப்ளாக்கர் மூளை விழித்தது.சிலவற்றை கிளிக்கினேன்,வந்த தாத்தா ஒரு பவரான டிடர்ஜண்ட் சோப் வேணும்,அதுவும் அந்த பிராண்ட் தான் வேணும் என்று சொல்ல உடனே வாங்கி கொடுத்தோம்.அதனை பக்கெட்டில் தண்ணீரில் கரைத்து குவளை வைத்து மரத்தின் மீது அடித்து ஊற்ற அத்தனை மொசுக்கொட்டையும் சுருண்டு விழுந்தது.
பின்பு மரத்தை வெட்டி எரித்து விட்டு ஜாலியாக 2மணி நேர வேலைக்கு ரூ 400 வாங்கிவிட்டு நடை கட்டினார் தாத்தா.


ரெடியான பவரான சோப் கரைசல்.முருங்கை மரம் மறைந்தது.ஆசை யாரை விட்டது,ஒரே ஒரு கொப்பு வைத்து கொள்ளலாம் என்று போட்டு வைத்ததில் திரும்பவும் மொசுக்கொட்டை நடமாட ஆரம்பித்து விட்டது.சுத்தமாக மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி எரித்து விடுவதே இதனை தடுக்கும் ஒரே வழி.திரும்ப ஒரு கொப்பை வைத்தால் மரத்தை உண்டாக்கி விடலாம்.கண்ணில் ஒன்று,இரண்டு தட்டுப்படும் பொழுது தீப்பந்தம் வைத்து காட்டினால் கருகி விடும்,இல்லை சோப் கரை சல் நல்ல் மருந்து.(இது அனுபவ தாத்தாவின் யோசனை) முருங்கை மரம் வீட்டில் வைத்து இருப்பவர்கள் உஷாராக இருக்கவும்.

ஒரு வேளாண் பட்டதாரியாக பூச்சி மருந்து சொல்லனும்னால்

மோனோகுரோட்டோபாஸ் 20 ml -ஐ 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து அடிக்க வேண்டியது தான்,20 வருடத்திற்கு முன்னாடி படிச்சது.

--ஆசியா உமர்.

27 comments:

kavisiva said...

ஆசியா மசுக்குட்டி(எங்க ஊர்ல அப்படித்தான் சொல்லுவோம்) ரொம்பவே படுத்திடுச்சா? இப்போ கண் பிரச்சினை சரியாயிட்டுதா?

முருங்கை மரம் உள்ள வீடுகளில் எல்லாம் இந்த பிரச்சினை அனுபவித்து இருப்பார்கள்.

ஜெய்லானி said...

அடுப்பு சாம்பல் எடுத்து மரத்தில் தூவினால் மொசுக்மொட்டை பூச்சி வராது, மன்னென்னை+பினாயில் தெளித்தாலும் வராது. இதெல்லாம் வீட்டில் உள்ள ஆண்கள் செய்யும் வேலை. (400ரூ வேஸ்ட் )

ஜெய்லானி said...

நான் என் வீட்டில இதுப்போல செஞ்சிட்டு, நாலுமாசம் போல இரால் தின்னாம கிடந்தேன் அதே நினைவுல . இப்ப நினைவு காட்டிட்டீங்க!!! சந்தோஷம்..........

asiya omar said...

கவிசிவா,மசுக்குட்டி தான் மருவி இப்படியாயிட்டுதோ!எப்பவும் அரிப்பது போல் உள்ள உணர்வு.மற்றவங்க சிக்கன் குனியா அலர்ஜி தான் திரும்ப வந்திடுச்சுன்னு வேற கமென்ட்.

asiya omar said...

ஜெய்லானி,மாமா உடல்நலத்தோடு இருந்திருந்தால் இந்தக்கவலை எல்லாம் நமக்கு கிடையாது. இப்படி வந்திருக்காது,மாமா,எம்மா இத்தனை வருஷமாக மரம் இருந்திருக்கு இப்ப்டி பாதிப்பு வந்ததே இல்லைன்னு சொல்றாங்க,நீங்க சொன்ன பக்குவம் தான் அவங்களும் செய்வாங்களாம்.

Chitra said...

ஒரு விவசாய பட்டதாரியாக பூச்சி மருந்து சொல்லனும்னால்

......oh!!! நீங்கள் விவசாய பட்டதாரியா? :-)

நெல்லையில், எங்கள் வீட்டிலும் முருங்கை மரம் இருந்த வரை, பூச்சியார் விஜயம் உண்டு. .......!

மங்குனி அமைச்சர் said...

ஹலோ அந்த குட்டி பேர கேட்டாலே எனக்கு உடம்பில் உள்ள முடி எல்லாம் நட்டமா நிக்கும் , இதுல போடோ வேற அதுவும் குரூப் போடோ வேற ..........

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

அடுப்பு சாம்பல் எடுத்து மரத்தில் தூவினால் மொசுக்மொட்டை பூச்சி வராது, மன்னென்னை+பினாயில் தெளித்தாலும் வராது. இதெல்லாம் வீட்டில் உள்ள ஆண்கள் செய்யும் வேலை. (400ரூ வேஸ்ட் )//

தம்பி உனக்கு ஏத்த தொழில் தான் பண்ற , அப்படியே எங்க தோட்டத்துக்கு போய் அங்க நாலு முருங்க மரம் இருக்கு அதுக்கு மருந்து அடிச்சிட்டு , அப்படியே தோட்டத்து வீட்ட சுத்தி கொசு மருந்து அடிச்சுட்டு ஒரு ...... (4 *2 =8 ) ஓகே ஒரு எட்டு ரூபா காவக்காரன் தருவான் வாங்கிக்க .

மங்குனி அமைச்சர் said...

//asiya omar said...
(400ரூ வேஸ்ட் )//

மேடம் உண்மைலே 400 ரூபா வேஸ்டு , பேசாம 50 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கி அது நம்ம ஜெயலனிய தலைல ஊத்தி கொளுத்தி அந்த சாம்பல எடுத்து வீட்ட சுத்தி தொளிசிகன்ன ,மசுக்குட்டி என்ன நாய் குட்டி , பூனை குட்டி , பேய் குட்டி , கழுத குட்டி ,குரங்கு குட்டி ஏன் ப.. குட்டி கூட உங்க தெரு பக்கமே தல வச்சு படுக்காது

அன்புடன் மலிக்கா said...

நல்ல நல்ல தகவல்கள் ஆசியாக்கா.

மசுக்குட்டி அப்படித்தான் நாங்களும் சொல்லுவோம்

Mrs.Menagasathia said...

கம்பளிப்பூச்சி கஷ்டத்தை நானும் அனுபவித்திருக்கேன். முருங்கை ஆசை யரை விட்டது.

asiya omar said...

மலிககா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

மேனகா,இந்த கம்பளிப்பூச்சு விஷ்யம் லேசுப்பட்டது இல்லை,பயங்கரம்.

asiya omar said...

சித்ரா,நான் கோவையில் படித்து கிழித்தது இதைத்தான்.

asiya omar said...

மங்குனி,கவுண்டமணி செந்தில் கதை தான்,இதில் கவுண்டமணி யாரு செந்தில் யாருன்னு தெரியலை.

ஜெய்லானி said...

//மங்குனி அமைச்சர் said...ஹலோ அந்த குட்டி பேர கேட்டாலே எனக்கு உடம்பில் உள்ள முடி எல்லாம் நட்டமா நிக்கும் , இதுல போடோ வேற அதுவும் குரூப் போடோ வேற//

மங்கு போன ஜென்மத்தில நீ அப்டிதானே இருந்தே!! உனக்கே உன்ன பாத்தா பயமா ? கண்ணாடிய பாக்காதே , அப்புறம் பூர்வ ஜென்ம ஞாபகம் வந்திடும்.

ஜெய்லானி said...

//தம்பி உனக்கு ஏத்த தொழில் தான் பண்ற , அப்படியே எங்க தோட்டத்துக்கு போய் அங்க நாலு முருங்க மரம் இருக்கு அதுக்கு மருந்து அடிச்சிட்டு , அப்படியே தோட்டத்து வீட்ட சுத்தி கொசு மருந்து அடிச்சுட்டு ஒரு ...... (4 *2 =8 ) ஓகே ஒரு எட்டு ரூபா காவக்காரன் தருவான் வாங்கிக்க//

நா வந்தா அப்புரம் தோட்டமே உன்பேர்ல இருக்காதேய்யா!! வரவா? இப்பவே லங்கா ஏர்லைன்ல சீட்டபோடவேண்டியதுதான்.

ஜெய்லானி said...

//மேடம் உண்மைலே 400 ரூபா வேஸ்டு , பேசாம 50 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கி அது நம்ம ஜெயலனிய தலைல ஊத்தி கொளுத்தி அந்த சாம்பல எடுத்து வீட்ட சுத்தி தொளிசிகன்ன ,மசுக்குட்டி என்ன நாய் குட்டி , பூனை குட்டி , பேய் குட்டி , கழுத குட்டி ,குரங்கு குட்டி ஏன் ப.. குட்டி கூட உங்க தெரு பக்கமே தல வச்சு படுக்காது//

மங்கு உனக்கு தலைக்கு ஆர்டர் குடுத்தாச்சு நீயே அவங்ககிட்ட வாலண்டியரா போய் மாட்டிகாதே! அவங்க சீவலபேரி பாண்டி மாதிரி.

Geetha Achal said...

எங்கள் வீட்டில் முருங்கை மரம் இருக்கின்றது...ஆனால் இது நாள் வரை இப்படி மொசுக்கொட்டை பிரச்சைனை கிடையாது...யார் எங்க வீட்டிக்கு வந்தாலும் முருங்கையினை பார்த்தபின் கேட்க்கும் கேள்வி இது தான்...மொசுக்கொட்டை பிரச்சனை இல்லையா என்று தான்...ஆனால் இது நாள் வரை இல்லை...இந்த முறை விடுமுறைக்கு சென்ற பொழுது அக்ஷதா குட்டியும் ஆசையாக அந்த மரத்தில் இருந்து கீரையினை கிள்ளினாள்...

ஜெய்லானி said...

#####
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/03/blog-post_27.html.

########

ஸாதிகா said...

உபயோகமான தகவல் ஆசியா.நாங்களும் முன்பு முருங்கைமரம் வைத்து இருந்து ரொம்ப அவஸ்தைப்பட்டு அப்புறம் மரத்தையே காவு கொடுத்து விட்டோம்.இப்போவெல்லாம் மார்க்கெட்டில் கிடைக்கும் கீரைதான்.

பின்னூட்டங்களைப்பார்த்துவிட்டு இந்த காலை நேரத்திலேயே கணினி முன் உட்கார்ந்துகொண்டு சிரித்துக்கொண்டுஇருக்கிறேன்.வாழ்க ஜெய்லானி&மங்குனி அமைச்சர்.

asiya omar said...

ஸாதிகா,அந்த இரண்டு பேரும் ஆசியாஅக்கா தானேன்னு இஷ்டத்துக்கு லூட்டிதான்.ரசிப்போம்.

Jaleela said...

நல்ல பகிர்வு ஆசியா

ஆஹா ஆரம்பிச்சுட்டங்கையா இங்கே மங்குவும், ஜெய்லானியும் ..

மனோ சாமிநாதன் said...

அன்பு ஆசியா!

மொசுக்கட்டையை பற்றிய கதை நன்றாக இருந்தது. அந்த வாஷிங் பவுடர் பெயரை எழுதினால் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்குமே! தஞ்சையில் எங்கள் திருமண மண்டபத்தின் பின்னால் ஒரு முருங்கை மரம் இப்படித்தான் மொசுக்கட்டைகளால் சூழ்ந்திருந்தது. சென்ற மாதம்தான் வேறு வழியில்லாமல் வெட்டினோம்.

Vijis Kitchen said...

ஆசியா ஆஹா அப்ப விவசாயிகாவும் மாறிட்டிங்க. ம்.. கலக்குங்க. அப்படியே இந்த உரங்களை பற்றி கொஞ்சம் விலா வரியா எடுத்து விடுங்கோ. நல்லா கன்னுக்கு குளிர்ச்சியா முருங்கை காயை பார்த்தா வெட்ட தோனாது ஆனல் இந்த பூச்சி தொல்லையை பார்த்தால் எப்பட இந்த தலைவலி ஒழியும் என்று.
விவ்சாய டிப்ஸுக்கு அனுகுக. ஆசியா.காம். என்ன சரியா...

asiya omar said...

மனோ அக்கா நான் வெளிப்படையாகவே குறிப்பிட்டு இருக்கேன்,பவர் சோப் தான்.

asiya omar said...

விஜி படிச்சு நாளாச்சு,எல்லாம் மறந்துபோச்சு,அப்புறம் கம்பெடு தடி எடுன்னு எல்லாரும் கிளம்பவா?