Sunday, March 28, 2010

மட்டன் மக்ரோனி

இந்த ரெசிப்பியை Shama's Fast Food Event - Pasta, Snehithi's Party Snacks Event அனுப்புகிறேன்.

தேவையான பொருட்கள் ; மக்ரோனி -400 கிராம்,வெங்காயம் -3,தக்காளி -3,மிளகாய் -3,இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 டீஸ்பூன்,கரம்மசாலா -அரைஸ்பூன்,மட்டன் - கால் கிலோ (ஸ்மால் பீஸ்)எண்ணெய் -4 டேபிள்ஸ்பூன்,ஃப்லேவர் ஃபில்டெர்ஸ் - 10 கிராம்,(ப்ளைன் நூடுல்ஸ் பேக்கில் உள்ள மசாலா)அல்லது சில்லி பவுடர், கறிமசாலா - 1டீஸ்பூன்,சிக்கன் கியுப் - 1,உப்பு - சிறிது,மல்லி இலை- சிறிது,ரம்பை இலை -1

குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,நறுக்கிய வெங்காயம்,ரம்பை இலை,இஞ்சி பூண்டு,கரம் மசாலா,மிள்காய்,தக்காளி,கறிமசாலா ,உப்பு சேர்த்து வதக்கி,கறியும் சேர்த்து மூன்று விசில் வைத்து இறக்கவும்.


வெந்த கறியோடு தேங்காய்ப்பால் அல்லது தேங்காய்ப்பால் பவுடர் 4 டேபிள்ஸ்பூன் சேர்த்து 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.


கொதிவரவும் மக்ரோனியை சேர்க்கவும்.


மக்ரோனியை சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் இருப்பதை உறுதி செய்து குக்கரை மூடி 3 விசில் அல்லது அடுப்பை குறைத்து கால் மணி நேரம் வைக்கவும்.


சுவையான மட்டன் மக்ரோனி ரெடி.இதனை காலை,மாலை,இரவு டிஃபனாக சாப்பிடலாம்.தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
சுவை ரிச்சாக அபாரமாக இருக்கும்.குக்கரில் செய்வதால் சஃப்டாக இருக்கும்.
-ஆசியா உமர்.

25 comments:

Geetha Achal said...

சூப்பர்ப் மக்ரோனி...அசத்துங்க அக்கா...

ஸாதிகா said...

மட்டனில் மக்ரோனி.இதோ இப்பவே செய்யப்போகிறேன்.பார்க்கவே சாப்பிட வேண்டும் போல் உள்ளது

Mrs.Menagasathia said...

சிக்கனில்தான் செய்திருக்கேன்.மட்டனில் செய்ததில்லை.குறிப்பு அருமையா இருக்கு அக்கா!!

asiya omar said...

மூன்று சமையல் அரசிகள் ஸாதிகா,கீதா ஆச்சல்,மேனகா மூவரும் பாராட்டும் மகிழ்வை தந்தது.நன்றி.

Jaleela said...

மக்ரோனி சூப்பர்,

நானும் தனியாக வேக வைக்க நேரம் இல்லை என்றால் குக்கரில் தான் நிமிஷத்தில் ரெடிஆகிடும்.

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ஆசியா!

மக்ரோனி இப்படி குக்கரில் சமைப்பது வித்தியாசமாக இருந்தது. நன்றாகவும் தெளிவாகவும் விளக்கி எழுதியிருக்கிறீர்கள்!

ஜெய்லானி said...

காலை அல்லது இரவுக்கு இது பெஸ்ட் . துபாயில் இருந்தபோது செய்திருக்கிறேன். சிக்கனை விட மட்டன் அல்லது இறால் ஓகே!!..என்ன ஒன்னு மட்டன் வேக டைம் பிடிக்கும். பிரஷ்ர் குக்கர்தான் சரி. எலக்டிரிக் குக்கர் அவ்வளவு ஆகாது.( மேகி க்யூப் உம் போட்டால் வாசனை ஆஹா..ஓஹோ..)

athira said...

ஓ... ஆசியா சூப்பராக இருக்கே. ரைஸ் பிரியாணிபோல செய்திருக்கிறீங்க. பால் சேர்த்திருப்பது புதுமுறை. ஆனால் சரியான அளவில் தண்ணி,பால் இல்லாதுவிட்டால் களியாகிவிடும் என நினைக்கிறேன்.

asiya omar said...

ஆமாம் ஜலீலா, குக்கரில் ரொம்ப ஈசியாக செய்திடலாம்.

asiya omar said...

மனோ அக்கா ஒரு முறை வைத்து பாருங்கள்,உங்களுக்கும் பிடித்துவிடும்.

asiya omar said...

ஜெய்லானி பாராட்டுக்கு மகிழ்ச்சி.இறாலில் செய்து பார்க்கணும்.

asiya omar said...

அதிரா கவலையில்லாமல் குக்கரில் வைக்கலாம்,மக்ரோனி மூழ்கும் அளவு தண்ணீர் இருக்கும் படி பார்த்து கொள்ளவும்,தீயையும் ரொம்பவும் கூட்டி வைக்க கூடாது,அடியில் உறைந்து காணப்படும்,சூடாக சாப்பிட்டால் தேங்காய்ப்பால் மணத்துடன் அருமையாக இருக்கும்.

Chitra said...

like noodles - super idea! Thank you for the new recipe.

asiya omar said...

thanks chitra,i used to do variety of dishes in pasta.

மின்மினி said...

ஆசியா உமர் அக்கா, உங்களுக்கு அன்போடு ஒரு விருது வழங்கியுள்ளேன். பெற்றுக் கொள்ளுங்கள்.

மங்குனி அமைச்சர் said...

//asiya omar said...
thanks chitra,i used to do variety of dishes in pasta.//


ஹய்யோ...... தொரையம்மா இங்கிலீசு எல்லாம் பேசுறாக

அப்புறம் மட்டன் மக்ரோனி நல்லாருக்கு

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...
காலை அல்லது இரவுக்கு இது பெஸ்ட் . துபாயில் இருந்தபோது செய்திருக்கிறேன். சிக்கனை விட மட்டன் அல்லது இறால் ஓகே!!..என்ன ஒன்னு மட்டன் வேக டைம் பிடிக்கும். பிரஷ்ர் குக்கர்தான் சரி. எலக்டிரிக் குக்கர் அவ்வளவு ஆகாது.( மேகி க்யூப் உம் போட்டால் வாசனை ஆஹா..ஓஹோ..)
///


..........................................
நல்லா பாத்துகோங்க மக்களே நான் ஒண்ணுமே சொல்லல

சாராம்மா said...

dear asiya akka,

nice recipe. u can join in

http://www.tamilmanam.net/index.html

u can get more viewers

thanks
anita

kavisiva said...

ஆசியா ஊருக்கு வரும்போது அப்படியே திருநெல்வேலி பக்கம் விசிட் அடிச்சுட வேண்டியதுதான் :). அயிரை மீன் குழம்பும் மட்டன் மக்ரோனியும் கிடைக்குமே :)

asiya omar said...

சாராம்மா உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

கவி வாங்க,சமைச்சு தந்திட்டா போச்சு,அடுத்த மாதம் அங்கே.

ravi said...

Akka,
me bachelor work in uk.my native too is nellai,highground.

your blog is amazing.We like to do more of your recipes.

in this mutton macroni,can u give gram measurements for onion,tomato?

u have mentioned halfspoon garammasala,is it teaspoon or tablespoon?

karimasala means what, is it kulambu milagai thool and u have receipe for that.can i use aaci kulambu milagai thool for this?

sorry for asking basics since we are beginners in cooking.

expecting your reply very eagerly.Thanks.

Asiya Omar said...

ரவி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
வெங்காயம்,தக்காளி - தலா 150 கிராம், கரம் மசாலா - அரை டீஸ்பூன்,கறிமசாலா என்றால் சிக்கன் அல்லது மட்டன் மசாலா எடுத்து கொள்ள்லாம்.ஆச்சி குழம்பு மிளகாய்த்தூள் உபயோகிச்சது இல்லை.நான் உபயோகிக்கும் மசாலா எங்க ஊர் மசாலா.மேலப்பாளையம் கடைகளில் மசாலாத்தூள் ரெடிமேடாக கிடைக்கும்.
http://asiyaomar.blogspot.com/2010/02/blog-post_15.html

நான் உபயோகித்த மசாலா இது தான்.லின்க் கிளிக் செய்து பாருங்க.நீங்க வெளிநாடு செல்லும் பொழுது இந்த மசாலா திரித்து எடுத்து போனால் எல்லாவற்றிருக்கும் பொதுவாக உபயோகிக்கலாம்.நன்றிங்க.

ravi said...

Akka,we made this today and it turned out awesome.Easy to prepare and tasted delicious and we will make it often.I used mutton masala.

can u post 'kootanchoru recipe ' plz,when u have time.

Thanks for sharing nice receipe.

Asiya Omar said...

கருத்திற்கு மிக்க நன்றி சகோ ரவி.விரைவில் கொடுக்க முயற்சிக்கிறேன்.என்னுடைய ஆங்கில தளத்தில் பிசிபேலாபாத் குறிப்பு கொடுத்திருக்கிறேன்,கிட்ட தட்ட கூட்டாஞ்சோறு மாதிரி தான்.