Monday, March 29, 2010

பருப்பு முருங்கைக்காய்

தேவையான பொருட்கள் ; துவரம் பருப்பு - 150 கிராம்,முருங்கைக்காய் - 2, சின்ன அல்லது பெரிய வெங்காயம் - 100 கிராம்,தக்காளி -100 கிராம்,மிளகாய் - 2, மல்லி இலை - சிறிது , இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்,மிளகாய்த்தூள் -அரைஸ்பூன்,மஞ்சள் தூள் -கால்ஸ்பூன்,சீரகத்தூள் -கால்ஸ்பூன்,உப்பு -தேவைக்கு ,தாளிக்க -எண்ணெய் - 1டேபிள்ஸ்பூன் ,நெய் - 1 டீஸ்பூன்,கடுகு -அரைஸ்பூன் ,மிளகாய் வற்றல் -2, கருவேப்பிலை -2 இணுக்கு.
குக்கரில் பருப்பு,நறுக்கிய வெங்காயம்,தக்காளி,மிளகாய்,இஞ்சிபூண்டு பேஸ்ட்,மசாலாத்தூள்,மல்லி இலை,மிள்காய் சேர்க்கவும்.


பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு ஒரு கப் அதிகம் விடவும்.குக்கரை மூடி 4 விசில் விடவும்.


ஆவி அடங்கியபின்பு குக்கரை திறந்து பார்த்தால் பருப்பு வெந்திருக்கும்.வீடே மணக்கும்.அத்துடன் கட் செய்த முருங்கைக்காயையும்,உப்பையும் சேர்க்கவும்.

மீண்டும் குக்கரை மூடி ஒரு விசில் வைத்தால் முருங்கைக்காய் பக்குவமாக வெந்துவிடும்.பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் நெய் விட்டு காய்ந்ததும் கடுகு,மிளகாய் வற்றல்,வெங்காயம்,கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.
கமகமக்கும் சுவையான பருப்பு முருங்கைக்காய் ரெடி.முருங்கைக்காய் சாப்பிட வெண்ணெய் மாதிரி இருக்கும்.
இதனை சாதம் சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

-ஆசியா உமர்.


27 comments:

ஜெய்லானி said...

மரத்தை வெட்டியாச்சு ,அப்ப ஒரு வாரத்துக்கு முருங்கை தான் .ஹா...ஹா....

ஜெய்லானி said...

முருங்கை யில எது செஞ்சாலும் அது எனக்கு ரொம்ப பிடிக்கும். தண்ணீர் கம்மியா சேர்த்து சாம்பாரை ....ஓகே...ஓகே....படம் அருமையா வந்திருக்கு.!!!!!!!!!

Daisy Blue said...

This is a new dish to me...nalla irukku..

Chitra said...

முருங்கைக்காய் வாசம் - பருப்பை கூட சாப்பிட வைக்கும். ஹி,ஹி,ஹி,ஹி.... நான் சுத்த அசைவம்.

Geetha Achal said...

சூப்பராக இருக்கின்றது பருப்பு முருங்கைக்காய்...ஊரில் இருக்கும்பொழுது நிறைய முருங்கைக்காய் சாப்பிட்டேன்...இங்கு எனக்கு frozenயில் தான் கிடைக்கும்...கிடைத்தாலும் சதை பகுதியாக இருக்காது...கிடைக்கும்பொழுது கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்...நன்றி அக்கா.

மகி said...

காலைல அம்மாகிட்ட பேசும்போது ஊர்ல முருங்கைக்காய் சீசனா இருக்குன்னு சொன்னாங்க.(இங்கே எல்லா நாளும் ப்ரோசன் முருங்கை ஒன்லி! :( )

பருப்பு முருங்கைக்காய் சூப்பரா இருக்கு! இப்படி ஜொள்ளு வுட வைச்சுட்டீங்களே ஆசியாக்கா? :))))

மகி said...

சொல்ல மறந்து போச்..உங்க ரெசிப்பிஸ்க்காகவே நான் சீரகத்தூள் அரைக்க ஆரம்பிச்சேன்!! :)

asiya omar said...

ஜெய்லானி,மரத்தை வெட்டியாச்சு,இனி காய்க்கு எங்கே போவது?முருங்கையில் இருந்து கொஞ்சநாளைக்கு விடுதலை.அப்பாடான்னு இருக்குமே.

asiya omar said...
This comment has been removed by the author.
asiya omar said...

thanks daisy,we can add brinjal instead of moringa with little tamarind,that is simple thalcha.

asiya omar said...

சித்ரா நீங்க அசைவ சைவமா ?o.k.

asiya omar said...

கீதாஆச்சல் ரொம்ப நாளாய் உங்களை பார்க்கலை,ஊர் சென்று வந்தீர்களோ?

asiya omar said...

மகி,மிளகுத்தூள் மாதிரி,சீரகத்தூள் ,பெருங்சீரகத்தூள் தனியாக வைத்துக்கொண்டால் வசதியாக இருக்கும்,என்னோட மசாலாவிலேயே எல்லாம் இருக்கும்.இப்படி ரெசிப்பி கொடுக்கும் பொழுது என்னுடைய மசாலா மற்றவர்களிடம் இருக்காதில்லையா?அதனால் பிரித்து சொல்வேன்.

ஸாதிகா said...

ஆசியா,பருப்பு என்று மட்டும் குறிப்பிட்டுள்ளீர்கள்?எந்த வகைப்பருப்பு?நாங்கள்கடலைபருப்பில் செய்வோம்.நெய்சோறு,கமட்டன் குருமா,ஆனியன் ரைத்தாவுடன் இந்த முறையில் பருப்பு செய்து சாப்பிட்டால் ஆஹா...

asiya omar said...

ஸாதிகா குறிப்பிட்டு சொன்னமைக்கு நன்றி.நெய்சோறு,மட்டன் குருமாவுடன் ,பருப்பு கத்திரிக்காய் சூப்பராக இருக்கும்.

மின்மினி said...

அருமையான முருங்கைக்காய் சாம்பார்.., பார்த்ததுமே நாக்குல எச்சி ஊறுதே அக்கா.

மங்குனி அமைச்சர் said...

மேடம் எனக்கு இந்த பருப்பு போட்டு எது செய்தாலும் பிடிக்கும்

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

மரத்தை வெட்டியாச்சு ,அப்ப ஒரு வாரத்துக்கு முருங்கை தான் .ஹா...ஹா....//

போ ,போய் அடுத்து வேப்ப மரம் இல்ல புளிய மரம்னு புது விடா தேடு

Mrs.Menagasathia said...

இஞ்சி பூண்டு விழுது பருப்பு முருங்கை மணமணக்குது.அருமை அக்கா!!

asiya omar said...

மின்மினி இது சாம்பார் மாதிரி இருக்காது,இஞ்சி பூண்டு சேர்ப்பதால் டேஸ்ட் வேறுபடும்.
மேனகா கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

மங்குனி,நீங்கள் ஆச்சு,ஜெய்லானி ஆச்சு மீ எஸ்கேப்....

ஜெய்லானி said...

//மங்குனி அமைச்சர் --போ ,போய் அடுத்து வேப்ப மரம் இல்ல புளிய மரம்னு புது விடா தேடு //

என்ன மாம்ஸ், வேப்ப மரம் , புளிய மரமெல்லாம் எதுக்கு விக்கிரமாதித்த மன்னர் இல்லாவிட்டால் என்ன மங்குனி அமைச்சர் தான் நீங்க இருக்கீங்களே.

அதனால நான் உங்க தோல்லயே தொத்திகிட்டு வரேனே!!!!!!!.

மவனே வசமா மாட்டினே!!!!!

அடியேய் இனி கச்சேரிதாண்டி!!!!விடாது ஜெய்ய்ய்ய்ய்லானி..

ஜெய்லானி said...

//மங்குனி அமைச்சர் --மேடம் எனக்கு இந்த பருப்பு போட்டு எது செய்தாலும் பிடிக்கும்//


கொசு-25 கிராம்
மரவட்டை--80 கிராம்
புள்ள பூச்சி--400 கிராம்
காலியாங்குட்டி( பாம்பு குட்டி)-2 pc
அரளிப்பூ--5
மசுக்குட்டி--400கிராம்

இதையெல்லாம் மங்குவை பிடித்து(வாங்கி வர) வரசொல்லி பசுநெய்யில இந்த பருப்பை சேர்த்து வதக்கி குடுங்க

அப்படியே சாப்பிடும்.வாழ்க மங்கு!!
வளர்க அறிவு..

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

//மங்குனி அமைச்சர் --மேடம் எனக்கு இந்த பருப்பு போட்டு எது செய்தாலும் பிடிக்கும்//


கொசு-25 கிராம்
மரவட்டை--80 கிராம்
புள்ள பூச்சி--400 கிராம்
காலியாங்குட்டி( பாம்பு குட்டி)-2 pc
அரளிப்பூ--5
மசுக்குட்டி--400கிராம்//

ஜெய்லானி செல்லாம் இதெல்லாம் நீ சாபிடுறது, மேடம் ஜெய்லானி செல்லத்துக்கு அது கேட்ட மாதிரியே சமைச்சு குடுத்துருங்க , எல்லாரும் நாய் குட்டி , பூனை குட்டி வளப்பாங்க அதுமாத்ரி நாங்கெல்லாம் சேர்ந்து உன்னை வளக்குரம்,

மனோ சாமிநாதன் said...

அன்பு ஆசியா!

பருப்பு முருங்கைக்காய் புகைப்படம் அழகாக இருக்கிறது! சுவையும் இஞ்சி பூண்டு சேர்த்து இருப்பதால் அபாரமாக இருக்குமென நினைக்கிறேன்.

Jaleela said...

முருங்ககாய் பருப்பு வாசமா நல்ல இருக்கும்.

ஆகா மங்குனிக்கு ஜெய்லானி வேப்ப மரத்த வெட்டி பருபா>
நிங்க இரண்டு பேரும் போன ஜென்மத்துல இரட்ட்டையர்களா?

asiya omar said...

மனோ அக்கா உங்கள் வருகை மிக்க மகிழ்வை தருகிறது.
ஜலீலா பருப்பு முருங்கைக்காய் வீடெல்லாம் கமகமக்கும்.