Tuesday, March 30, 2010

ஆட்டுக்கால் கிளியர் சூப்

தேவையான பொருட்கள் ; 
ஆட்டுக்கால் - 1 -2 செட்,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி - 1,மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,
சீரகத்தூள் - ஒன்னரை டீஸ்பூன்,
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - அரைஸ்பூன்,
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்,
உப்பு- தேவைக்கு,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
கருவேப்பிலை,மல்லி இலை -சிறிது,
தேங்காய் முந்திரி பேஸ்ட் - அரை கப் (விரும்பினால்)
செய்முறை :
வெங்காயம்,தக்காளி,மிளகு,சீரகம்,மல்லித்தூள் ,மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து சுத்தம் செய்த ஆட்டுக்காலுடன் சேர்த்து குக்கரில் வைத்து மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை முக்கால் மணி நேரம் சிம்மில் வைத்து இறக்கவும்.உப்பு சேர்க்கவும்.அப்படியே மல்லி இலை தூவி பரிமாறினால் சூப்பர் சுவையுள்ள சத்தான கிளியர் சூப் ரெடி.


அதனுடன் அரைத்த தேங்காய் முந்திரி பேஸ்ட் சேர்த்து கொதிக்க வைத்து கட் செய்த மல்லி இலை சேர்க்கவும்,எண்ணெயுடன் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து சிவந்ததும் கால் ஸ்பூன் சில்லி பவுடர் சேர்த்து தாளித்து கொட்டினால் கெட்டி சூப் ரெடி.

குழந்தைகளுக்கு கொடுக்க காரம் குறைத்து சேர்க்கவும். .இது பரோட்டா சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்.
குறிப்பு:அறுசுவையில் நானில் ஆட்டுக்கால் சால்னா குறிப்பு உள்ளது,அது ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கப்படத்துடன் உள்ளது.

24 comments:

மின்மினி said...

அருமையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. சூப் சூப்பருங்கோ.., எச்சி ஊறுது.

மின்மினி said...

டெம்ப்ளேட் மாத்திட்டீங்க..

ஜெய்லானி said...

ஊரில் இருக்கும் ஒவ்வொரு நாளும் மாலையில் இது கண்டிப்பாக இருக்கும். இப்போ இதை பார்த்ததும் தானாகவே ஜொள் வடியுது. இங்கு கடைகளில் குழம்பா அல்லது சூப்பான்னு கண்டே பிடிக்க முடியல அப்படி ஒரு தினுசு...

Geetha Achal said...

Super soup......

Mrs.Menagasathia said...

ஐயோஓஓஓஒ இப்படி எச்சில் ஊறவைக்கிறீங்களே....அப்படியே அந்த பவுலோட எடுத்துக்குறேன் அக்கா...

Chitra said...

souper! ha,ha,ha....

asiya omar said...

மின்மினி சூப் சூப்பரான்னு தெரியலை,ஆனால் உங்கள் பெயர் சூப்பருங்கோ.டெம்ப்லேட் மாற்றலை,இதுதான் ஆரம்பத்தில் இருந்து இருக்கு.

asiya omar said...

ஜெய்லானி அபுதாபியில் செட்டிநாடு,அஞ்சப்பரில் பரவாயில்லாமல் இருக்கும்.ஷார்ஜாவில் எப்படின்னு தெரியலை.

asiya omar said...

கீதா,மேனு,சித்ரா தவறாமல் கருத்து சொல்வது ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
சித்ரா,சூப் suoper இதுவும் நல்ல தான் இருக்கு.
மேனு எடுத்துக்கோங்க,எங்க ஊரில் சுத்தம் செய்து கட் பண்ணி ரூ20 க்கு ஒரு ஆட்டுக்கால் செட் கிடைக்குது,கொழுப்பு கூட இருக்காது.நான் எப்பவும் u.a.e போகும் பொழுது வாங்கிப்போக தவறுவதில்லை.

மங்குனி அமைச்சர் said...

மேடம் ஆட்டோட முன்னாடி காலா? இல்ல பின்னாடி காலா? , முன்னாடின்னா லெப்டு காலா ? இல்ல ரைட்டு காலா ? இல்ல பின்னாடி கால்னா லெப்டு காலா ? இல்ல ரைட்டு காலா ?

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

/// ஜெய்லானி said...

ஊரில் இருக்கும் ஒவ்வொரு நாளும் மாலையில் இது கண்டிப்பாக இருக்கும். இப்போ இதை பார்த்ததும் தானாகவே ஜொள் வடியுது. இங்கு கடைகளில் குழம்பா அல்லது சூப்பான்னு கண்டே பிடிக்க முடியல அப்படி ஒரு தினுசு...///

கரெக்டா சொன்னீங்க ஜெய்லானி.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான ஆட்டுக்கால் சூப்.. எளிமையான விளக்கம்,செய்முறை... அசத்துறீங்க ஆசியா உமர்.

ஸாதிகா said...

சூப்பர் சூப் ஆசியா.பரோட்டாவுடன் இந்த சூப அருமையான காம்பினேஷன்.

அன்புடன் மலிக்கா said...

ஆசியாக்கா. சூப்பர் சூப்.
பார்த்ததும் ருசிக்கிது..

நானும் அடிக்கடி //சனியாச்சி// செய்வேன்கா
எல்லாருக்கும் ரொம்பபிடிக்கும்.

asiya omar said...

ஸ்டார்ஜான் உங்கள் முதல் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி.நானும் உங்கள் ப்ளாக் இரண்டையும் பார்வையிட்டுள்ளேன்.

asiya omar said...

மங்குனி ஒரு ஆட்டுக்கு எத்தனை கால்? முன்னாடி எத்தனையோ,அத்தனைதானே பின்னாடியும்,பின்னாடி எத்தனையோ அத்தனை தான் முன்னாடி,முன்னாடியும் பினனாடியும் சேர்த்தா முன்னாடி பின்னாடி கால்,முன்னாடி இடது பக்கமா?வலது பக்கமா?முன்னாடிக்கு பின்னாடி இடதுக்கு நேரா இடது வலதுக்கு நேரா வலது,இனிமேல் இந்தப்பக்கம் வருவீங்க,நாங்களும் போடுவோமில்ல மொக்கை.

asiya omar said...

மலிக்கா அதென்ன சனியாச்சி செய்வேன்கா,சனிக்கிழமையா?வருகைக்கு மகிழ்ச்சி.

மங்குனி அமைச்சர் said...

//asiya omar said...

மங்குனி ஒரு ஆட்டுக்கு எத்தனை கால்? முன்னாடி எத்தனையோ,அத்தனைதானே பின்னாடியும்,பின்னாடி எத்தனையோ அத்தனை தான் முன்னாடி,முன்னாடியும் பினனாடியும் சேர்த்தா முன்னாடி பின்னாடி கால்,முன்னாடி இடது பக்கமா?வலது பக்கமா?முன்னாடிக்கு பின்னாடி இடதுக்கு நேரா இடது வலதுக்கு நேரா வலது,இனிமேல் இந்தப்பக்கம் வருவீங்க,நாங்களும் போடுவோமில்ல மொக்கை.///


ஹாஹா.....ஹாஹா..... ஹாஹா..... ஹாஹா..... ஹாஹா.....
ஹாஹா..... ஹாஹா..... ஹாஹா..... ஹாஹா..... ஹாஹா.....

என்னா மொக்க , என்னா மொக்க தாங்கமுடியல போங்க , ஒரே சிரிப்பு சிரிப்பா இருக்கு (ஹலோ "வஞ்ச புகழ்ச்சி அணி" அப்படின்னா என்னான்னு தெரியுமா மேடம் ?)

asiya omar said...

ஹி ஹி ஹி....தற்புகழ்ச்சி அணி தெரியுமில்ல ! ஆளை விடுங்க சாமி.

ஜெய்லானி said...

என்னது ரெண்டு பேரும் மாத்தி மாத்தி மொக்கைன்னு சொல்லிட்டு, ஆட்டுக்கு எங்க காலு. பாருங்க “””ஆடு “”” இதுல எங்க கால் இருக்கு. என்னாஆஆஆஆஆஆஆஆது சின்னப்புள்ள தனமா

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

//asiya omar said...

ஸ்டார்ஜான் உங்கள் முதல் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி.நானும் உங்கள் ப்ளாக் இரண்டையும் பார்வையிட்டுள்ளேன்.///

மிக்க மகிழ்ச்சி ஆசியா உமர்.., உங்களுடைய சமையல்குறிப்புகளை நான் விரும்பிபடிப்பேன்.

asiya omar said...

ஸ்டார்ஜன் மிக்க நன்றி,மகிழ்ச்சி.

Jaleela said...

கிளியர் சூப் சூப்பர்,

மங்குனிக்கு சந்தேகம் தீர்ந்ததா? ஆட்டுகால் வலது காலா இடது காலான்னு.

நானும் நேற்று கால் ரெசிபி தான் எடுத்து வைத்துள்ளேன். போட தான் நேரமில்லை.

Jaleela said...

ரெசிபி போடுமுன் முதலில் படத்தில் பேரை போடுஙக்ள் இல்லை என்றால் சுவையோச சுவை காப்பி போல எல்லோரும் காப்பி பண்ணுவார்கள்.