Sunday, March 14, 2010

ஈசி ஈரல் கூட்டு -1


தேவையான பொருட்கள்;
ஆட்டு ஈரல் -300 கிராம் ,சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.
எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்,வெங்காயம் -சிறியது 1,தக்காளி-சிறியது -1,மல்லி இலை - சிறிது,மிளகுத்தூள் -1 டீஸ்பூன்,சீரகத்தூள் - அரைஸ்பூன்,கறிமசாலாத்தூள் - 1டீஸ்பூன்,இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன்


செய்முறை:

மிளகு,சீரகம்,மசாலாத்தூள் ,வெங்காயம்,தக்காளி,மல்லி இலை,இஞ்சிபூண்டு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

Serves - 3

அரைத்த மசால்,எண்ணெய்,உப்பு சிறிது சேர்த்து குக்கரில் கலந்து வைக்கவும்.

மூடி 2 விசில் வைத்து அடுப்பை குறைத்து திரும்ப ஒரு விசில் வந்தவுடன் இறக்கவும்.கிரேவி சுண்ட வைக்கவும்.


ருசியான,சத்தான ஈசி ஈரல் கூட்டு ரெடி.இது சாதத்துடன் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

-ஆசியா உமர்.

21 comments:

ஜெய்லானி said...

ரியாத்தில் (சவுதி) இருக்கும் போது கோழி ஈரலில் இதே போல் செய்வது வழக்கம். அதே டேஸ்ட் .(ஊரில் இது போல நிறைய கிடைக்காது,ஷார்ஜாவில் பாக்கெட்டில் கிடைக்கிறது. ஆனால் ஃப்ரஷ் கிடைக்கல)

Mrs.Menagasathia said...

ஈரல் கூட்டு வித்தியாசமா நல்லாயிருக்குக்கா...

Chitra said...

yummy!

ஸாதிகா said...

ஈரல் அவ்வளவு விருப்பமான உணவாக இல்லாவிட்டாலும் படத்தைப்பார்க்கும்பொழுது சமைத்துவிடவேண்டும் போலுள்ளது.இங்கு கிடைக்கும் வெள்ளாட்டின்(goat) கறியை விட செம்மறியாட்டின்(sheep) ஈரலும்,கறியும்தான் சுவையாக இருக்கும்

asiya omar said...

ஜெய்லானி ஷார்ஜாவில் மனாமா சூப்பர் மார்கெட்டில் ஃப்ரெஷாக கிடைக்கிறது.எங்க அண்ணன் வீட்டிற்கு போகும் பொழுது வாங்கியிருக்கிறோம்.

asiya omar said...

செய்து பாரு மேனு,நிஜமாக நல்லாயிருக்கும்.

asiya omar said...

yes chitra,yummy and nutritious.

asiya omar said...

yes chitra,yummy and nutritious.

asiya omar said...

ஸாதிகா,ஈரல் என்றால் கல்லீரல்,கிட்னி,தாமரை,நுரைஈரல்,மண்ணீரல் இத்தனையும் கலந்து வாங்கி சமைத்து பாருங்கள் சூப்பராக இருக்கும்.

ஜெய்லானி said...

//மனாமா சூப்பர் மார்கெட்டில் ஃப்ரெஷாக கிடைக்கிறது//

நா சொன்னது கோழி ஈரலை பிக் ஸிஸ்டர்(அக்காவ் )., ஆடுதான் மட்டன் மார்கெட்டில் பார்ட் பார்டாக தனியாக கிடைக்கிறதே!!!.

Jaleela said...

ரொம்ப நல்ல இருக்கு. ஜெய்லானி இப்ப தான் எல்லா சூப்பர் மார்க்கெட்டிலும் ஃபிரெஷாக கிடைக்கிறது,

ரத்தம் கம்மியாக இருப்பவ்ர்களுக்கு அடிக்கடி கொடுத்தால் நல்லது

asiya omar said...

ஜலீலா,ஆமாம் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது.இப்ப உடல்நலம் பரவாயில்லையா?நீங்கள் கொஞ்சம் ஆப்ஸண்ட் ஆனாலும் ப்ளாக்கே வெறுமையாக இருக்கு.

Jaleela said...

முடியவில்லை தான் பதிவு ஏதும் போடலையே ரொம்ப நாள் ஆச்சு அதான் ஒரு பதிவு போட்டேன். எனக்கே பிளாக் பக்கம் வராமா ஒரு மாதிரி தான் இருக்கு.

Malar Gandhi said...

Eearal kootu sounds mouthwatering to me, pictures are too tempting, thanks for this lovely recipe:):)

asiya omar said...

மலர் உங்கள் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்வை தருகிறது.நன்றி.

அன்னு said...

ஆஸியாக்கா,

சூப்பரான் ரெசிபி. எங்கம்மா செய்யறது போலவே இருந்தது. ரெம்ப ரெம்ப நன்றி. ஆனால் ஒரு விஷயம். சைடு பாரில் உள்ள 'வகைகளை' அகராதிப்படி வரிசைப்படுத்தினால் நன்றாக இருக்கும். மட்டன் எங்கேயோ மேலே இருக்கு, ஆனா கஞ்சி கீழே...வரிசைப்படுத்தினால் தேடுவது எளிதாகும் ப்ளீஸ். நன்றிங்க்கா.

asiya omar said...

அன்னு,இது தமிழ்மணம் பட்டையை இணைக்கும் பொழுது இப்படியானது.இதனை சரியாக பார்க்க திரும்ப இடுகையை கிளிக் செய்தால் பழைய படி நேராகிவிடும்.நன்றி.அன்னு.

அன்னு said...

இல்லை ஆஸியாக்கா,

நான் சைடு பாரில் உள்ள 'அசத்தல்ஸ்' பற்றிக் கூறினேன். அதனை 'எடிட்' செய்தீர்களானால் வரிசைப்படுத்த வழி உள்ளதை காணலாம். அகர வரிசையில் என்று செலெக்ட் செய்து விட்டீர்களென்றால் எல்லா பக்கங்களிலும் அது வரிசையாகவே தெரியும். முயன்று பார்க்கவும். :) நன்றி!!

asiya omar said...

அன்னு நீங்க சொன்னபடி அசத்தல்ஸ் அகர வரிசைப்படி எடிட் செய்தாச்சு.இப்ப ஓ.கே.தானே.

அன்னு said...

ஆஸியாக்கா, கிரேட். இப்பதான் ஈசியா இருக்கு. ரொம்ப தேன்க்ஸ் :)

asiya omar said...

அன்னு நீ வந்து பார்த்தியோன்னு நினைச்சேன்.வருகைக்கு நன்றி.