Wednesday, April 28, 2010

வெஜ் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்

நூடுல்ஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்குமே பிடிக்கும்.இந்த முறையில் செய்து பாருங்களேன்.

தேவையான பொருட்கள் ; இன்ஸ்ட்டண்ட் ஃப்ரைட் நூடுல்ஸ் பாக்கட் - 2,வெங்காயம் - 1,கேரட்- 1,கொடைமிள்காய் -1, முட்டைகோஸ் - 2 கைபிடியளவு, நூடுல்ஸ்மசாலாவில் உப்பு இருக்கும்,சோய் சாஸ் - 1-2 டீஸ்பூன்.முட்டை விரும்பினால் - 1.நூடுல்ஸை நல்ல தண்ணீர் விட்டு கொதி வந்ததும் போட்டு பக்குவமாக வெந்ததும் வடித்து வைக்கவும்.


கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம்,கோஸ்,கேரட்,கொடைமிளகாய் சேர்த்து வ்தக்கவும்,விரும்பினால் ஒரு முட்டை சேர்க்கலாம்.மசாலாவில் ஒரு பேக்கை சேர்க்கவும்,காயுடன் சேர்த்து பிரட்டவும்.

வதக்கியவற்றுடன் வடித்த நூடுல்ஸ் சேர்த்து ,மற்றொரு பேக் மசாலா ,சோயாசாஸ் சேர்க்கவும்.நன்கு ஒரு போல் கிளறி விடவும்.


சுவையான வெஜ் நூடுல்ஸ் ரெடி.பேக்கில் இருக்கும் மசாலாவே போதுமானது.உப்பு அதில் இருப்பதால் தனியாக சேர்க்க தேவையில்லை.விரும்பினால் மல்லி இலை,மிளகுத்தூள் தூவி ஸ்பூன்,ஃபோர்க் உடன் பரிமாறவும்.சூப்பராக இருக்கும்.குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை செய்து கொடுக்கலாம்.


--ஆசியா உமர்.

முருங்கைக்காய் பொரியல் / Drumstick Poriyalசகோ.ஹைஷ் இந்த குறிப்பை பார்த்து செய்து அனுப்பிய முருங்கைக்காய் பொரியல் படத்தை இணைத்து இருக்கிறேன்.அருமை.நன்றி சகோ.

தேவையான பொருட்கள் ;
வாட்டசாட்டமான முருங்கைக்காய் - இரண்டு
தக்காளி -1 பெரியது
வெங்காயம் - 1 பெரியது
கடுகு,உளுத்தம் பருப்பு தலா அரைடீஸ்பூன்
சீரகம்- அரை- 1டீஸ்பூன்
மிளகாய் வற்றல் -4
மல்லி,கருவேப்பிலை -சிறிது
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு.

மிள்காய் வற்றல்,சீரகம் மிக்ஸியில் பொடித்து கொள்ளவும் ,நம்ம செல்வி அக்கா சொன்ன மாதிரி வற்றல் குலுங்கினால் ஈசியாக பொடியாகிவிடும்.
குக்கர் பேனில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு,உளுத்தம்பருப்பு,கருவேப்பிலை தாளித்து,வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி,முருங்கைக்காய் சேர்க்கவும்,பிரட்டவும்,பொடித்த சீரகம்,வற்றலை சேர்க்கவும்.நன்றாக ஒரு சேர முருங்கைக்காயை பிரட்டி விடவும்.
பின்பு வதக்கிய முருங்கையுடன் தேங்காய் துருவல்,தக்காளி,உப்பு சேர்க்கவும்,அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.


நன்கு பிரட்டி விட்டு குக்கரை மூடி ஒரே விசில் வைத்து இறக்கவும்.சுவையான முருங்கைக்காய் பொரியல் ரெடி. இதனை ப்லைன் சாதத்திற்கு சைட் டிஷ்சாக பயன்படுத்தலாம்.


பின்குறிப்பு : இது எங்க வீட்டு தோட்டத்தில் காய்த்தது, ஊரில் இருந்து கொண்டு வந்து உங்களுக்காக பொரியல் வைத்தேன்.

-ஆசியா உமர்.

அருணாவின் சிம்பிள் உருளைக்கிழங்கு ஃப்ரை
இந்த சிம்பிள் உருளைக்கிழங்கு ஃப்ரை அருமையாக இருந்தது.நன்றி அருணா.தேவையான பொருட்கள் ;உருளைக்கிழங்கு - மீடியம் சைஸ் -4, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்,பூண்டு - 4 பல்,எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்,உப்பு தேவைக்கு.
உருளைக்கிழங்கை பாதிநிலா மாதிரி அழகாக கட் செய்து கொள்ளவும், ஒரு சாலோ ஃப்ரை பேனில் எண்ணெய் காய வைக்கவும்.தட்டிய பூண்டை சேர்க்கவும்,உருளைகிழங்கை சேர்த்து,சாம்பார் பொடி,தேவைக்கு உப்பு சேர்த்து அப்படியே பிரட்டி பிரட்டி மூடி போட்டு வேக வைக்கவும்.அருணா தண்ணீர் தெளிக்க சொல்லி இருந்தாங்க,நான் தண்ணீர் சேர்க்கவில்லை.சும்மாவே (சித்ரா எஃபெக்ட்)

எண்ணெயிலேயே பொரிந்து அசத்தலாக வந்தது.
சூப்பர் டேஸ்டான சிம்பிள் உருளைகிழங்கு ஃப்ரை ரெடி.எல்லாவகையான சாதத்திற்கும் பொருந்தும். குறிப்பாக தயிர் சாதத்திற்கு அருமையாக இருந்தது.

--ஆசியா உமர்.


Tuesday, April 27, 2010

விருதும் வெஜ் தம் பிரியாணியும்

அன்பு அக்கா, கைதேர்ந்த சமையல் கலை நிபுணர்,பாட்டு,ஓவியம்,எழுத்து,கவிதை என்று பற்கலைகளிலும் சிறந்த திருமதி மனோ சாமிநாதன் அவர்கள் ஆசையாக தந்த அவார்டு,ஆனந்தக்கண்ணீருடன் பெற்றுக்கொள்கிறேன்.

இந்த முறையில் ஒரு தடவை செய்து பாருங்க உங்களுக்கு பிடித்து விடும்.தேவையான பொருட்கள் - பாசுமதி அரிசி அல்லது சீரக சம்பா பச்சை - 400 கிராம்,(தண்ணீரில் ஊறவைக்கவும்)காய்கறிகள் - பிடித்தமானது - 400 கிராம்(கட் செய்து வைக்கவும்)

எண்ணெய் - 100 மில்லி,நெய் - 25 மில்லி,வெங்காயம் - 100 கிராம், தக்காளி - 200 கிராம்,மல்லி புதினா - கை பிடியளவு,பச்சை மிளகாய் - 4 ,இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்,சில்லி பவுடர் -முக்கால் ஸ்பூன்,மஞ்ச்ள் பொடி - கால்ஸ்பூன் ,கரம்மசாலா - அரைஸ்பூன்,சோம்பு பொடி- கால்ஸ்பூன்,பிரியாணி இலை அல்லது ரம்பை இலை - சிறிது,உப்பு -தேவைக்கு.பிரியாணி செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் ,நெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை ,வெங்காயம் சிவற வதக்கி,இஞ்சி பூண்டு ,கரம் மசாலா (ஏலம் பட்டை,கிராம்பு தூள்)சேர்த்து சிம்மில் வைத்து வதக்கி,மிளகாய்,மல்லி இலை,புதினா சேக்கவும்.


நல்ல மணம் வந்ததும் தக்காளி,உப்பு,மிளகாய்த்துள்,மஞ்சள் தூள் வதக்கி எண்ணெய் மேல் வந்ததும் காய்கறிகளை சேர்க்கவும.

காய்கறிகள் வெந்தபிறகு ஒரு கப் தேங்காய் பால் சேர்க்கவும்.சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்.உப்பை சரி பார்க்கவும்,முடிந்தவரை மூடி வைத்தே சமைக்கவும்.


காய்கறி திக் கிரேவி பதத்தில் இருப்பது போல் வைக்கவும்.பக்குவமாக முக்கால் பதத்தில் அளவாக உப்பு போட்டு வேக வைத்த ரைஸை வடித்து வைக்கவும்.

சூடாக இருக்கும் பொழுதே வடித்த ரைஸை பிரியாணிக்கு ரெடி செய்த காய்கறி மசாலாவில் கொட்டவும்.விரும்பினால் சிவற பொரித்த வெங்காயம் 2 டேபிள்ஸ்பூன் தூவவும்,மல்லி இலை சேர்க்கவும்,லெமன் எல்லோ அல்லது சஃப்ரான் கரைத்து ஊற்றவும்,ஆரஞ்ச் ரெட் கலரும் சிறிது கரைத்து மேலே ஊற்றவும்.தம்மிற்கு ரெடி செய்ததை இப்ப காணலாம்,அதனை மேலோட்டமாக பிரட்டி விடவும்.அகப்பையின் கம்பை கொண்டு ரைஸின் மேல் இருந்து கிரேவி (கீழ்) வரை 3 இடங்களில் துளை(குத்தி) இடவும்.கிரேவியில் உள்ள ஜூஸ் மேல் எழுப்பி வர வசதியாக இருக்கும்.அலுமினியம் ஃபாயில் போட்டு அல்லது வெறுமனே மூடி கொண்டு மூடவும்,மேல் வெயிட்டுக்கு வடித்த கஞ்சியை சூடாக வைக்கவும்.தீயை சிம்மில் வைத்து பழைய தோசைக்கல்லை பிரியாணி பாத்திரத்தின் அடியில் வைக்கவும்,கனமான பாத்திரமாக இருந்தால் தேவையில்லை.அடி பிடிக்காமல் இருக்கவே இந்த ஏற்பாடு.


20 நிமிடம் சிம்மில் வைக்கவும்.பின்பு கவனமாக திறக்கவும்.ஆவி கையில் பட்டுவிடும்.காய்கறி கிரேவி கீழ் ட்ரையாக இருக்கும்,மேலே ஜூஸி பிரியாணி ரைஸ் இருக்கும்.ரைஸை ஒரு போல் காய்கறி மிக்ஸ் ஆவது போல் பிரட்டி விடவும்.உதிரி உதிரியாக சாஃப்டாக அருமையாக கமகமன்னு இருக்கும்.சுவையான வெஜ் தம் பிரியாணி ரெடி.ஆனியன் ரைத்தா,விரும்பினால் அவித்த முட்டை சேர்த்து பரிமாறவும்.

--ஆசியா உமர்.பின் குறிப்பு : நான் இங்கு சீரக சம்பா பச்சை உபயோகித்து இருக்கேன்.ஏலம்,பட்டை,கிராம்பு முழுதாக சேர்க்கலை,காய்களுடன் வாயில் அகப்படும்,எனவே பொடி செய்து போட்டு இருக்கிறேன்.நிச்சயம் ஒரு தடையாவது செய்து சாப்பிட்டு பாருங்க.


--ஆசியா உமர்.

”யு ஆர் மை டாட்டர் லைக் சிஸ்டர்”

நான் ப்ளாக் எழுத ஆரம்பித்ததில் இருந்து என் உடன்பிறந்த சகோதரர் ஜனாப்.கலந்தர் அவர்களைப்பற்றி எழுதனும் என்று அடிக்கடி நினைப்பதுண்டு.இன்று அதற்கு சரியான நாள்.நான் இன்று மெயில் செக் செய்யும் பொழுது நெட்லாகில் இருந்து அண்ணனோட பிறந்தநாளை நினைவு படுத்தி மெயில் வந்திருந்தது.இதுவரை பழக்கம் இல்லாவிட்டாலும் இன்று போனில் அழைத்து வாழ்த்து சொன்னேன்.அவர்களுக்கு மிக்க ம்கிழ்ச்சி.

வாழ்த்துகிறேன் போற்றுகிறேன்.

செந்தமிழை தாய்மொழியாக கொண்டிருந்தாலும்
ஆங்கிலேயரை விட ஆங்கிலப்புலமை பெற்ற
ஆங்கிலப் பேராசிரியராய் அவருடைய பணியைத்
தொடர்ந்த திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி
அறியும் அவர் புகழை
அங்கு பயின்ற மாணவர் போற்றுவர்
என்றும் இவர் புகழை
ஐம்பத்து ஏழு வயதிலும்
ஐந்து வயது குழந்தையின் துறுதுறுப்பு
சமுதாய பணியில் சடையாமல் ஈடுபடும்
சர்வகலா வல்லவர்
உதவி என்றால் இரவு பகல் பாராமல்
ஓடிவரும் நல்லவர்
வள்ளல்களை விட வறியவர்களிடம்
வலிய பழகும் பண்பாளர்

கிட்டதட்ட 25 வருட அரபு நாட்டு வாழ்க்கையில்
கிட்ட அழைத்த எம் ஊர் மக்கள் ஏராளம்
எத்தனை குடும்பம் உயர்ந்தது உங்களால் !
எண்ணி பார்க்க தகுதியில்லை.

ஐக்கிய அரபு நாட்டுப் பள்ளிகளில்
இருபது வருட முதல்வர்
அனுபவத்தால் பயனடைந்த
பிள்ளைகளும் பெற்றோர்களும்
இன்றும் போற்றுகின்றனர்.

என் சிற்றறிவுக்கு
எழுத வரலையே
என்றாலும் முடிவாய் முற்றாய்
ஒன்று சொல்ல கடமைப்பட்டுள்ளேன்
நான் வளர்ந்ததும்,கற்றதும்,வாழ்வதும்
தங்களால்.
நீங்கள் நீடுழி நெடுங்காலம் குடும்பத்துடன்
நீங்கா மகிழ்ச்சியுடனும்,ஆரோக்கியத்துடனும்
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்
நெகிழ்ந்து போற்றுகிறேன்.

--ஆசியா உமர்.
பின்குறிப்பு : என் சகோதரர் என்னிடம் “யு ஆர் மை டாட்டர் லைக் சிஸ்டர்” என்று அடிக்கடி சொல்வதுண்டு.

மினி இட்லி டிப்

மினி இட்லியும் பாசிப்பருப்பு சாம்பாரும் ரொம்ப அருமையாக இருக்கும்.அதையும் இப்படி டிப் செய்து சாப்பிட்டால் ஆகா என்ன ருசிதான்.
தேவையான பொருட்கள் ;

இட்லி மாவு அரைக்க:மூன்று பங்கு அரிசி ,ஒரு பங்கு உளுந்து ஊறவைக்கவும்.5 மணி நேரம் ஊறிய பின்பு முதல் நாள் தனி தனியாக அரைத்து 2 டேபிள்ஸ்பூன் நல்ல எண்ணெய்,உப்பு கலந்து கரைத்து வைக்கவும்.ம்றுநாள் மாவு பொங்கி இருக்கும்.இட்லி அரிசிக்கு தான் 3:1 ,சாதாரண அரிசிக்கு 4;1.இனி சிம்பிளாக சிறுபருப்பு சாம்பார் வைக்கலாம்.
தேவையான பொருட்கள் :-
பாசிப்பருப்பு - 50-75  கிராம்,
தக்காளி- 1 (பெரியது),
வெங்காயம்- 1( பெரியது),
மிளகாய் -2,
மஞ்சள் பொடி - கால்ஸ்பூன்,
சாம்பார் பொடி-அரைஸ்பூன்,
பெருங்காயப்பொடி-கால்ஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்,நெய் - 1டீஸ்பூன்,
கடுகு -அரைஸ்பூன்,வற்றல்-2,கருவேப்பிலை
மல்லி இலை - சிறிது,
உப்பு- தேவைக்கு.
குக்கரில் பாசிப்பருப்பு,மஞ்சள் பொடி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.கொதித்ததும் 1 டீஸ்ப்பூன் நெய்,சாம்பார் பொடி,மிளகாய்,நறுக்கிய வெங்காயம்,தக்காளி,உப்பு சேர்த்து மூடி 3 விசில் வைத்து இறக்கவும்.நன்கு வெந்து இருக்கும்,மசித்து விடவும்.பின்பு கடாயில் எண்ணெய் வீட்டு காய்நததும்,கடுகு,வற்றல்,கருவேப்பிலை,சிறிது வெங்காயம்,பெருங்காயப்பொடி தாளித்து கொட்டவும்.மல்லி இலை தூவி இறக்கவும்.சுவையான சிம்பிள் சாம்பார் ரெடி.

இட்லி மாவை கரைத்து மினி இட்லி தட்டில் எண்ணெய் தடவி ஒரு டேபிள்ஸ்பூன் மாவை இரண்டு குழிக்கு வருமாறு எடுத்து எல்லா குழிக்கும் ஊற்றவும். இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி பத்து நிமிடம் வைக்கவும்.


இட்லி வெந்தவுடன் தண்ணீர் தெளித்து ஸ்பூன் வைத்து எடுக்கவும். வெள்ளைவெளேர்னு மல்லிப்பூ மினி இட்லி ரெடி.

நிறைய மினி இட்லி அவிக்க நேரம் இல்லாவிட்டால் சாதா இட்லி அவித்து கட் செய்து சாம்பார் விட்டு ஸ்பூன் போட்டும் பரிமாறலாம்.பெரியவங்களுக்கு இப்படி கொடுக்கலாம்.


குழந்தைகளுக்கு இப்படி மினி இட்லியில் சாம்பார் டிப் செய்து கொடுத்தால் சாப்பிட ஆர்வமாக இருக்கும்,ஸ்பூன் போட்டு அழகாக சாப்பிட்டுவிடுவார்கள்.

பெரியவர்கள் மட்டும் என்ன ஒரே இட்லியான்னு சொல்றவங்க கூட ஆசையாக சாப்பிடுவாங்க.கூடவே ஒரு டிகிரி காஃபி கொடுத்திடுங்க,அமோகமாக இருக்கும்.


பின் குறிப்பு :சின்ன வெங்காயம் உபயோகித்தால் டேஸ்ட் சூப்பராக இருக்கும்,எனக்கு இங்கு பக்கத்தில் கிடைக்காததால் பெரிசு போட்டு இருக்கேன்.சாம்பார் பொடி சேர்க்காமல் கூட வெறும் மஞ்சப்பொடி,பெருங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்தும் செய்யலாம்,காலை சாம்பார் என்றால் இப்படி ஈசியாக செய்து அசத்தி விடலாம்.

--ஆசியா உமர்.

Monday, April 26, 2010

சரவணபவன் பீன்ஸ் பொரியல்

பீன்ஸ் நல்லதாக பார்த்து வாங்கி இரண்டு விளிம்பையும் கிள்ளி விட்டு நார் எடுத்து கழுவி நீள் வாக்கில் இப்படி நறுக்கி கொள்ளவும்.
தேவையான பொருட்கள் எடுத்துக் கொள்ளவும்.பீன்ஸ் - 200 கிராம்,எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்,வெங்காயம் -1,காய்ந்த மிளகாய் - 2,பூண்டு பல்-1(விரும்பினால்),சீரகம் -அரைஸ்பூன்,மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்,தேங்காய் துருவல்- 2 டேபிள்ஸ்பூன்,கருவேப்பிலை -2இணுக்கு,உப்பு -தேவைக்கு

மிள்காய் வற்றல்,சீரகத்தை மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்,அதனுடன் தேங்காய் துருவல் , அரிந்த பூண்டு சேர்த்து பல்ஸில் 3 சுற்று சுற்றவும்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,கருவேப்பிலை,வற்றல் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி,பீன்ஸ் சேர்த்து கிளறி,உப்பு,மஞ்சப்பொடி சேர்த்து பிரட்டவும்.சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேக விடவும்.


நல்ல மசுமையாக வெந்ததும் திறந்து தேங்காய் விழுதை சேர்த்து பிரட்டவும்.ஒன்று சேர்ந்து மணம் வரவும் அடுப்பை அணைக்கவும்.விரும்பினால் மல்லி இலை கட் செய்து சேர்க்கவும்.

சுவையான சத்தான சரவணபவன் பீன்ஸ் பொரியல் ரெடி.பின்குறிப்பு : பீன்ஸை நீளவாக்கில் கட் செய்து பொரியல் வைத்தால் ருசி மாறுதலாக இருக்கும்.

--ஆசியா உமர்.

Saturday, April 24, 2010

மீன் ஆனம்

இது எல்லோரும் வைக்கிற மீன் குழம்பு தாங்க.

தேவையான பொருட்கள் ; பிடித்த மீன் - அரைகிலோ,வெங்காயம் - 100கிராம்,தக்காளி - 200 கிராம்,பூண்டு - 5 பல்.பச்சை மிளகாய் - 3 ,மல்லி கருவேப்பிலை -சிறிது.எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்,உளுத்தம்பருப்பு,வெந்தயம்- தலா அரைஸ்பூன் ,புளி - எலுமிச்சை அளவு,காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,மல்லித்தூள் -2 டீஸ்பூன்,சீரகத்தூள் -அரைஸ்பூன்,மிளகுத்தூள் -அரைஸ்பூன்,மஞ்சள் தூள் -அரைஸ்பூன்,தேங்காய் துருவல்- 4 டேபிள்ஸ்பூன்,உப்பு - தேவைக்கு.முதலில் ஒரு கடாயில்,எண்ணெய் விட்டு காய்ந்ததும்,உளுத்தம்பருப்பு,வெந்தயம் போட்டு வெடித்ததும்,நறுக்கிய வெங்காயம் பூண்டு,மிள்காய்,கருவேப்பிலை,மல்லி இலை ,உப்பு சேர்த்து குழைய வதக்கவும்.


மசாலா வகைகளை சேர்க்கவும்.புளித்தண்ணீர் விடவும்,உப்பு சரி பார்க்கவும்.கொதிக்க விடவும்.

கொதித்து மசாலா ,புளி வாடை அடங்கியதும் , உப்பு,மஞ்சள் தூள் போட்டு கழுவி சுத்தம் செய்த மீனை போடவும்.சினை இருந்தால் அதையும் கழுவி உடன் போடவும்.நான் இதில் போட்டு இருக்கேன்.எடுத்து சாப்பிட அருமையாக இருக்கும்.


கொதிவந்ததும் அரைத்த தேங்காய் விழுதை போட்டு திறந்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.அகப்பை போடக்கூடாது.சட்டியை பிடித்து உலசி விடவும்.எண்ணெய் மேலெழும்பி குழம்பு சூப்பராக வரும்.அடுப்பை அணைக்கவும்.

சுவையான கமகமக்கும் மீன் ஆனம் ரெடி.பிரியப்பட்டால் மாங்காய் ஒன்றும் சேர்க்கலாம்.புளி அளவை பார்த்து போடவேண்டும்.சாதம்,இட்லி,தோசை,சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்..இட்லிக்கு அருமையாக இருக்கும்.

--ஆசியா உமர்.