Sunday, April 18, 2010

சிம்பிள் சிக்கன் 65

தேவையான பொருட்கள் ; சிக்கன் - முக்கால் கிலோ,சிக்கன் 65 மசாலா - 1 டேபிள்ஸ்பூன்,இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்,தயிர் - 1 டீஸ்பூன் ,கார்ன் ப்ளோர் - 1 டேபிள்ஸ்பூன்,எலுமிச்சை ஜூஸ் - 1 பழம், ரெட் கலர்- பின்ச் ,உப்பு - அரைஸ்பூன் (மசாலாவில் உப்பு இருக்கும்) எண்ணெய் - 150 மில்லி.

சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக்கி 5 தண்ணீர் வைத்து கழுவி நீர் வடிகட்டிக்கொள்ளவும்,பின்பு சிக்கனுடன் சிக்கன் 65 மசாலா,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கார்ன்ஃப்ளோர்,தயிர்,எலுமிச்சை,உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

மசாலா கலந்த சிக்கனை சுமார் ஒரு மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும்.
ஊறிய சிக்கனை கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் போட்டு பொரிக்கவும்.

சிக்கன் சிவந்து முறுக ஆரம்பித்ததும் கருவேப்பிலை போட்டு வெடித்ததும் கருவேப்பிலையுடன் சேர்த்து சிக்கனை கண் அகப்பை கொண்டு எண்ணெய்யை வடித்து விட்டு எடுக்கவும்.எடுத்து பேப்பர் டவலில் வைத்தால் எண்ணெய் வடிந்த சுவையான சிம்பிள் சிக்கன் 65 ரெடி.

இதனை ஃப்ரைட் ரைஸ்,பிரியாணி,சாதம் வகைகளுடனும்,ஸ்டார்டராகவும் சாப்பிட அருமையாக இருக்கும்.


-ஆசியா உமர்

14 comments:

Chitra said...

அப்படியே ரெண்டு plates , இந்த பக்கம் அனுப்பி வைங்க.

Mrs.Menagasathia said...

வாரே வாவ்வ்வ்வ் அசத்தலா இருக்கு, யம்மி யம்மி.....

ஜெய்லானி said...

@@@Chitra--//அப்படியே ரெண்டு plates , இந்த பக்கம் அனுப்பி வைங்க//

இல்லாட்டி வயிறு வலிக்கும். ஹி..ஹி.. எனக்கு.

Geetha Achal said...

சூப்பரோ சூப்பர்ப்...ஈஸியாக இருக்கும்...எனக்கும் பர்சல் ப்ளிஸ்...

LK said...

இந்த பதிவு நமக்கு சம்பந்தம் இல்லாதது (சிக்கன்) . ஒட்டு போட்டுட்டேன். ஒரு ஆஜர் அவ்ளோதான் )

பித்தனின் வாக்கு said...

ஆஸியா, நீங்கதான் கரேட்டா பன்றீங்க. எல்லாரும் சிக்கன் 65ந்னு சொல்லி அஞ்சு பீசு வைப்பாங்க. நீங்கதான் தட்டு நிறைய வச்சு இருக்கீங்க. ஏனுங்க இதுல 65 இருக்குமா?. சாரிங்க. நமக்கும் அசைவத்துக்கும் சம்பந்தம் இல்லை அதான் செய்யற கணக்குப் புள்ளை வேலையாவது ஒழுங்க செய்யலாமேன்னு.

LK said...

//இதுல 65 இருக்குமா//

platea paartha irukumnu ninaikiren

ஸாதிகா said...

ஸ்ஸ்ஸ்..பார்க்கவே சாப்பிடணும் போல் இருக்கே...

மங்குனி அமைச்சர் said...

//பித்தனின் வாக்கு said...

ஆஸியா, நீங்கதான் கரேட்டா பன்றீங்க. எல்லாரும் சிக்கன் 65ந்னு சொல்லி அஞ்சு பீசு வைப்பாங்க. நீங்கதான் தட்டு நிறைய வச்சு இருக்கீங்க. ஏனுங்க இதுல 65 இருக்குமா?. சாரிங்க. நமக்கும் அசைவத்துக்கும் சம்பந்தம் இல்லை அதான் செய்யற கணக்குப் புள்ளை வேலையாவது ஒழுங்க செய்யலாமேன்னு.///


பித்தன் சார் , எண்ணி பாத்தேன் 31 தான் இருக்கு , நீங்க இன்கம் டாக்ஸ் ல கம்ப்ளைன்ட் பண்ணிடுங்க , ஆசியா மேடம் நம்ம வூட்டு பக்கம் வந்து போங்க (மங்கு இந்த பொழப்புக்கு மருந்த குடிச்சு சாவலாம்டா)

Cool Lassi(e) said...

Inge muthal muraiiya vanthu irukken. Neenga vena saathana kumdumba penn-aage irukkallam..Aaanal recipes extraordinary. Follow paanren..illati naan ketta manasu pennmani aagi viduven. :)

asiya omar said...

கூல்லஸ்ஸி உங்கள முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.தொடர்ந்து வாங்க.

asiya omar said...

65 நாள் மட்டுமே ஆன இளங்கோழியாக்கும்.கஷ்டப்பட்டு துண்டுகளை எண்ணிய -- மங்கு ?

Sashi said...

Fry pannarapo curry leaves add paninathey illa, unga method next time follow pannaeren.

Jaleela said...

பிள்ளைகளுக்கு சிக்கன் பிரை என்றால் ரொம்ப பிடிக்கும், ஆகையால் என்ன என்ன முறையிலெல்லாம் பொரித்து கொடுக்க முடியுமோ அப்படி எல்லாம் பொரித்து கொடுத்தாச்சு,
இதுவும் நான் செய்வது போல் தான் இருக்கு.