Thursday, April 1, 2010

கோதுமைப் பொங்கல்

முதலில் 200 கிராம் சம்பா கோதுமை குருணையை மணக்க வறுத்து எடுக்கவும்.
50 கிராம் பாசிப்பருப்பையும் மணக்க வறுத்து எடுக்கவும்.


இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய்,நறுக்கிய இரண்டு வெங்காயம்,2 பச்சை மிள்காய்,கருவேப்பிலை,பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு ஸ்பூன் சேர்த்து குக்கரில் வதக்கவும்.


கோதுமை குருணைக்கு 3 அளவு த்ண்ணீர் வைத்து,உப்பு அளவாக சேர்க்கவும். கொதிவந்ததும் கோதுமைக்குருணை,பாசிப்பருப்புபருப்பையும் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வைக்கவும்,தீயை மீடியமாக வைக்கவும்.இரண்டு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு முந்திரி10,மிளகு-அரைஸ்பூன்,சீரகம் -அரைஸ்பூன் தாளித்து வேகவைத்த கோதுமை குருணை மீது கொட்டவும்.

குக்கரில் உள்ள கோதுமைப்பொங்கலை ஒரு சேர கிளரி விடவும்.மிளகாயை வெளியே எடுத்து விடவும்.ருசியான சத்தான கோதுமைப் பொங்கல் ரெடி.சாப்பிட சாப்பிட திரும்ப வைத்து சாப்பிட சொல்லும்.

குறிப்பு:
பாசிப்பருப்பு அளவை விரும்பினால் கூட்டிக்கொள்ளலாம்.குழைவாக வேண்டுமானால் கூட ஒரு கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
--ஆசியா உமர்

16 comments:

ஸாதிகா said...

சம்பா கோதுமை ரவாவை வாங்கி என்ன செய்வதென்று தெரியாமல்(உப்புமாவைக்கண்டாலே ஓடுகிறர்களே)வைத்திருந்தேன்.இனி சம்பா கோதுமைக்கும் வேலை வந்து விட்டது.ஆசியா,நான் நாகர்கோவிலுக்கு ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு சென்று இருந்த பொழுது காலை உணவாக இந்த சம்பா கோதுமையில் ஆட்டிறைச்சி சேர்த்து ஒன்று பண்னி இருந்தார்கள்.அதன் பெயர்,செய்முறைவிளக்கம் தெரியுமா?(நீங்களும் அந்த ஊரை நெருங்கி விட்டீர்களே)

Mrs.Menagasathia said...

ம்ம்ம் பொங்கல் மிக அருமை!!

Geetha Achal said...

சூப்பர்ப் சத்தான காலை சிற்றுண்டி...அருமை...

Chitra said...

looks very delicious. :-)

sarusriraj said...

பொங்கலுக்கு வெங்காயம் சேர்ப்பது புதுசு , வித்யாசமா இருக்கு டிரை பண்ணுகிறேன்

மனோ சாமிநாதன் said...

கோதுமைப் பொங்கல் குக்கரில் யாரும் சுலபமாகச்செய்யும்
வகையில் அருமையான பதிவு கொடுத்திருக்கிறீர்கள், ஆசியா!

asiya omar said...

ஸாதிகா கோதுமை ரவையில் நிறைய ரெசிப்பி இருக்கு,கோதுமை ரவையை ஊறவைத்து கறியுடன் இஞ்சி பூண்டு சேர்த்து செய்வதற்கு பெயர் அரீஸ்,எல்லாதானிய வகைகளும் கறியும் கரம் மசாலா ஹெவியாக சேர்த்து செய்வது ஹலீம்,நீங்க எதை சாப்பீட்டீங்க.இந்த ஹலீம்,அரீஸ் u.a.e யில் தெரிந்துகொண்டது.

asiya omar said...

மேனகா,கீதாச்சல் ,சாரு, சித்ரா மனோ அக்கா உங்கள் அனைவரின் பாராட்டும் மகிழ்வைத்தருகிறது.
சாரு சும்மா டேஸ்ட்க்கு வெங்காயம் சேர்த்தேன்,வெங்காயம்,இஞ்சி பூண்டு என் சமையலில் அதிகம் இருக்கும்.

ஜெய்லானி said...

//கோதுமை ரவையை ஊறவைத்து கறியுடன் இஞ்சி பூண்டு சேர்த்து செய்வதற்கு பெயர் அரீஸ்.அரீஸ் u.a.e யில் தெரிந்துகொண்டது.//

பல்லு இல்லாத வயசானவங்களுக்கு கறிதின்ன மாதிரியும் இருக்கும் , தெம்பும் இருக்கும் அதனாலயே இங்குள்ள தாத்தா+பாட்டிக்களுக்கு வயது (உயிர் வாழும் வயது)கூட.

நோன்பு திறக்கும் போது சாப்பிட்டால் உடல் பலம் குறையாது.

ஜெய்லானி said...

//சம்பா கோதுமை ரவாவை வாங்கி என்ன செய்வதென்று தெரியாமல்(உப்புமாவைக்கண்டாலே ஓடுகிறர்களே)வைத்திருந்தேன்//

அது சரி அப்ப நமக்கு சப்போட்டுக்கு ஆள் இருக்கு.

ஜெய்லானி said...

படத்தை போட்டு நடுராத்திரி 1.40க்கு பசியை கிளப்புறீங்களே!! பொங்கல் நல்லா இருக்கு.

asiya omar said...

நம்ம ஆஸ்தான அமைச்சர்களைக் காணோமேன்னு பார்த்தேன்.ஒருவர் வந்தாச்சு.அடுத்த இடுகை போடனுமே !

மங்குனி அமைச்சர் said...

மங்குனி அமைசர் ?
பிரெசென்ட் மேடம்

மங்குனி அமைச்சர் said...

// குறிப்பு:பாசிப்பருப்பு அளவை விரும்பினால் கூட்டிக்கொள்ளலாம்.குழைவாக வேண்டுமானால் கூட ஒரு கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். --ஆசியா உமர்//

அப்புறம் இந்த ..............................................
உம்ம்ம்ம்ம்ம்ம்ம் வேணாம் வேணாம் நாம ஏதாவது சொல்ல , அப்புறம் பதிலுக்கு நீங்க மொக்க போடுறேன்னு போட்டு அத பாத்திட்டு நான் போய் தற்கொலைக்கு ட்ரை பண்ணி இதல்லாம் நமக்கு தேவையா மங்கு , அதுனால

பதிவு ரொம்ப சூப்பர் மேடம்

asiya omar said...

வருகைக்கு நன்றி அமைச்சரே.

Jaleela said...

குக்கரில் ஈசியான கோதுமை பொங்கல் அருமை.

ஜெய்லாணி பல்லில்லாதவர்களுக்கா சரி தான்..