Thursday, April 1, 2010

சுரைக்காய் பால் கறி

சுரைக்காய் அரைகிலோவை தோல்நீக்கி கழுவி சிறியதாக நறுக்கி கொள்ளவும்.கடாயில் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,கடுகு உளுத்தபருப்பு - 1டீஸ்பூன்,பாசிபருப்பு -2 டேபிள்ஸ்பூன் ,நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் -1,மிள்காய் வற்றல் - 2 கருவேப்பிலை சேர்த்து தாளித்து வதக்கவும்.




வதங்கியதும் நறுக்கிய சுரைக்காயை சேர்க்கவும்.




பிரட்டி விடவும், கால் ஸ்பூன் சீரகத்தூள் சேர்க்கவும்.உப்பு சேர்க்கவும்.



சுரைக்காயை மூடி போட்டு வேகவிடவும்.





வெந்ததும் ஒரு கப் தேங்காய் பாலில் அல்லது பசும்பாலில் அரிசி மாவு ஒரு டீஸ்பூன் கலந்து கொதிக்க விடவும்.கெட்டியாகி வரும்,விரும்பினால் தேங்காய்பூ சிறிது சேர்க்கலாம்.



வெள்ளை வெள்ளேரென்று சத்தான சுரைக்காய் பால் கறி ரெடி.
பின்குறிப்பு:

சுரைக்காய் கூட்டு,சாம்பார் என்று செய்வோம்,ஒரு மாறுதலுக்கு இலையில் நிறைய காய் பறிமாறும் பொழுது இதையும் செய்து பறிமாறலாம்.பாசிப்பயறுக்கு பதில் தட்டைப்பயறு வேகவைத்து சேர்க்கலாம்,தட்டைப்பயறு இல்லாததால் பாசிப்பயறு சேர்த்து இருக்கிறேன்.ஒரு திருமண வீட்டில் தட்டைபயறு சேர்த்து பரிமாறிருந்தாங்க.வித்தியாசமாக இருந்தது.கோடையில் சுரைக்காய் சாப்பிடுவது உடல் சூட்டை குறைக்கும்.குழந்தைகளுக்கு சாதத்தில் பிசைந்து ஊட்டினால் ஸ்வீட்டாக இருக்கும்.


--ஆசியா உமர்.




11 comments:

Chitra said...

தேங்காய் துருவலுக்கு பதில் தேங்காய் பால்..... ம்ம்ம்ம்..... ட்ரை பண்ணனும். :-)

Geetha Achal said...

சூப்பர்ப்...அருமையாக இருக்கின்றது...

ஜெய்லானி said...

எல்லாத்துக்கும் அளவு குடுத்துட்டு உப்புக்கு மட்டும் அளவு தரலியே!! தோராயமா ஒரு ஐஞ்சி ஸ்பூன் போட்டுகலாமா ?

asiya omar said...

சித்ரா,கீதா ஆச்சல்,கருத்திற்கு மிக்க நன்றி.
ஜெய்லானி இனி உப்பு அளவுதானே கொடுத்திட்டாப்போச்சு,இதற்கு அரைஸ்பூன்.

Mrs.Menagasathia said...

பால் சேர்த்த கறி அருமையாக இருக்குக்கா...

மகி said...

நீங்க சொல்லிருந்த மாதிரி இஞ்சி-பூண்டு சேர்த்து கடலைப்பருப்பு கூட்டு செய்தாச்சு..அடுத்த முறை சுரைக்காய் வாங்கினா இதையும் ட்ரை பண்ணிடுவோம்!:))))

asiya omar said...

ஜெய்லானி மிக்க நன்றி என்ற சொல் மட்டும் போதாது,வார்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்.இதனை பாப்புலர் செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

மகி,மேனு கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

ஸாதிகா said...

வித்தியாசம இருக்கே.செய்து பார்த்துவிடுவோம்.

punitha said...

இந்த ஐட்டம் புதுசா இருக்கே..! ட்ரை பண்ணி பாக்குறேன்..!

உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அட புதுசா இருக்குங்க டிரை பண்ணி பார்க்கிறேன். நன்றிங்க.