Friday, April 2, 2010

ப்ரெட் சன்னா

தேவையான பொருட்கள்;
வெள்ளை கொண்டைக்கடலை -கால் கிலோ.
சன்னா மசாலா - 2-3 டீஸ்பூன்,
சில்லி பவுடர் - அரைஸ்பூன்,
சோம்புத்தூள் -கால்ஸ்பூன்,
கரம்மசாலா -கால்ஸ்பூன்,
இஞ்சி பூண்டு பேஸ்ட் -2 டீஸ்பூன்,
வெங்காயம் -3,
தக்காளி -3,
மல்லி இலை -சிறிது,
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு.
செய்முறை :
1.கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.நன்கு ஊறிய சன்னாவை நீர் வடிகட்டி வைக்கவும்.
2.குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,நறுக்கிய வெங்காயம் வதக்கி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம்மசாலா,சேர்த்து வதக்கவும்,சோம்புதூள் மல்லி இலை சேர்க்கவும்,நறுக்கிய தக்காளி சேர்த்து பிரட்டி,ஊறிய கொண்டைக்கடலையை சேர்த்து சன்னா மசாலா 2 டீஸ்பூன் சேர்க்கவும்.உப்பு சேர்த்து சன்னா மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 5 விசில் வைத்து இறக்கவும்.
3.ஆவி அடங்கியவுடன் திறந்து 4 டேபிள்ஸ்பூன் வெந்த மசாலா சனனாவை எடுத்து நன்கு மசித்து திரும்ப குக்கரில் உள்ளவற்றுடன் சேர்த்து மல்லி இலை தூவி பிரட்டி விடவும். கெட்டியானவுடன் இறக்கவும்.

4.சுவையான சத்தான சன்னா மசாலா ரெடி.
இதனை பறிமாறும் பொழுது ஆனியன் கட் செய்து தூவி பறிமாறவும்.இது டோஸ்ட் செய்த ப்ரெட்டுக்கு செம காம்பினேஷன். பூரிக்கும் அருமையாக இருக்கும்.
-ஆசியா உமர்.

17 comments:

ஜெய்லானி said...

வித்தியாசமாதான் தெரியுது. சாப்பிட முடியுமா..

ஜெய்லானி said...

நா கேக்க வந்தது. சும்மா டைம்பாஸுக்கா இல்லை டிஃபன் மாதிரியா. (ச்சே மங்குக்கு சான்ஸ் குடுத்தாச்சே )

asiya omar said...

டேஸ்டுக்கு நான் கேரண்டி.அப்படியே ஒரு பாக்கெட் உள்ளே போய்விடும்,ப்ரெட் விரும்பிகளாக இருந்தால்.

Mrs.Menagasathia said...

அருமை அக்கா!! நிச்சயம் செய்து பார்க்கனும்...

Chitra said...

பிரட் இல்லாமலே நல்லா இருக்கும் போல....

செந்தமிழ் செல்வி said...

ஆசியா,
கிடுகிடுன்னு எங்கியோ போய்ட்டீங்க! தினமும் போட்டோ எடுப்பது தான் வேலையாக இருக்கீங்கன்ன்னு தெரியுது.
சும்மா சொன்னேன்:-)
உங்க ஆட்டுக்கால் சூப் வித்தியாசமாக இருக்கு. கோதுமை பொங்கல், செய்துட்டு சொல்கிறேன்;)

Geetha Achal said...

சூப்பர்ப் சன்னா மசாலா...ஈஸியாக இருக்கின்றது...

asiya omar said...

மேனகா,கீதா,சித்ரா பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

செல்விக்கா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி,அக்கா பின்னூட்டம் போடாவிட்டாலும் பரவாயில்லை.முடிந்த நேரம் பார்வையிடவும்.சமைப்பதில் ஏதாவது ஒன்றை கிளிக் செய்வது,போட்டோ நல்ல வந்தா போடுகிறேன்கா.சமையல் குறிப்பு இன்னும் ஆரம்பிக்கலையா?தனி ப்ளாக் ஐடியா எதுவும் இருக்கா?

மங்குனி அமைச்சர் said...

பிரட், சென்னா எனக்கு ரொம்ப புடிச்ச டிஷ் , ஆமா எனா மேடம் ரொம்ப பாஸ்டா இருக்கிக

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

வித்தியாசமாதான் தெரியுது. சாப்பிட முடியுமா..//

ஜெய்லா செல்லாம் இது எல்லாம் எங்கள மாதிரி மனுசங்க சாபுடுறது , உனக்கு தான் நாய் பிஸ்கட் வாங்கி குடுதனே

(மேடம் நீங்க என்னா கஷ்டப்பட்டு பதிவு போடுறிங்க , இவனுக்கு நக்கலா பாதிகளா ?)

asiya omar said...

அமைச்சரே,அபி வழக்கம் போல வீட்டை விட்டு போய் 3 வாரம் ஆகுது,திரும்ப எப்ப வருவான்னு தெரியலை,அதுவரை முடிஞ்சதை பிடிச்சு போடுவோம்.அவன் வந்தா சமையல் கட்டில் நுழைய முடியாது.

Jaleela said...

நல்ல இருக்கு சென்னா, சென்னா நிறைய விதத்தில் செய்வேன்,

இதையும் செய்து பார்த்து விட வேண்டியது தான் , ஸ்கூலுக்கு அனுப்ப ஹெல்தியாக இருக்கும், இல்லையா.?

ஜெய்லானி said...

//மங்குனி அமைச்சர் said...
ஜெய்லானி said...

வித்தியாசமாதான் தெரியுது. சாப்பிட முடியுமா..//

ஜெய்லா செல்லாம் இது எல்லாம் எங்கள மாதிரி மனுசங்க சாபுடுறது , உனக்கு தான் நாய் பிஸ்கட் வாங்கி குடுதனே//

அடப்பாவி , அதை பிரிச்சி வைச்சி அதோட காபியும் தந்தேனே!! நீதானே எல்லாத்தயும் தின்னுட்டு போனே!!. எனக்குகூட மீதி வைக்காம .. பாத்தியா நன்றி மறக்காம உண்மையை ஒத்துகிட்டியே !!. வாங்கிட்டு வந்தது நாய் பிஸ்கட்டுன்னு.
( எங்க தெருவுக்கு வண்டி வரட்டும் .முதல் போணி தக்காளி நீதான்யா )

ஜெய்லானி said...

// asiya omar
அமைச்சரே,அபி வழக்கம் போல வீட்டை விட்டு போய் 3 வாரம் ஆகுது,திரும்ப எப்ப வருவான்னு தெரியலை//


கவலை படாதீங்க ஆஸியாக்கா , பாத்திரம் கழுவ , தண்னி அடிக்க , வீட்டை பெருக்க , தோட்டத்தை கூட்ட நம்ம மங்குவை அனுப்புறேன்.
ஒரு நாளைக்கு ஒரு ருபா ஐம்பது காசு போதும். இதுக்கெல்லாமா கஷ்டப்படுவாங்க!! ஃபீல் ஃபிரீ..டோண்ட் ஒர்ரீ..( யே ..மங்கு ஒனக்கு ஒரு ஆஃபர் வந்திருக்கு வாய்யா!!)

ஜெய்லானி said...

// மங்குனி அமைச்சர் said...
பிரட், சென்னா எனக்கு ரொம்ப புடிச்ச டிஷ் ,//

நேத்து வரை கேப்ப களி தான் சொர்கம்னு சொன்னே, வெளியே உட்டுடானுங்களா உன்னை!!

மு.அ. ஹாலித் சிட்னி said...

nice its's very quick snack and easy one too, so now on we will add urgent meal list. thank you so much