Saturday, April 3, 2010

தேங்காய்ப்பூ சம்பா அவல்


இந்த ஈசி அவல் ரெசிப்பியை குறிஞ்சியின் ஹெல்தி ரெசிப்பி ஹண்ட்டிற்கு அனுப்புகிறேன்.
தேவையான பொருட்கள்;
சம்பா அவல் - 4 கையளவு
தேங்காய்ப்பூ - 4 டேபிள்ஸ்பூன்
பால் - 250 மில்லி
சீனி - 4 டேபிள்ஸ்பூன்

ஒரு பவுலில் பால்,சீனி சேர்த்து கரைத்து அத்துடன் அவல்
சேர்த்து ஊற வைக்கவும்.ஊறியவுடன் தேங்காய்ப்பூ சேர்த்து கலந்துவிடவும்.

சுவையான தேங்காய்ப்பூ அவல் ரெடி.காரத்திற்கு ஏதாவது ரவா கிச்சடி மாதிரி செய்து உடன் பரிமாறவும்.
குறிப்பு ;
ரொம்ப சத்தான இந்த கைகுத்து அவல் மிகவும் ருசியாக இருக்கும்,ஒரு பக்கா ரூ 20.தான்.கார்ன் ப்லேக்ஸ்- க்கு முக்கியத்துவம் கொடுக்கிற நாம நம்ம தாய் உணவான இதை மறந்து விட்டோம்.இந்த அவலை பயன்படுத்தி நிறைய ரெசிப்பி செய்யலாம்.
--ஆசியா உமர்.23 comments:

ஜெய்லானி said...

சீனிக்கு பதிலா எங்க வீட்டில் வெல்லம் போடுவாங்க. டேஸ்ட் ரொம்ப டாப்பா இருக்கும். பால் ( மில்க் மெய்ட்) ஓக்கே!! .

அதிகம் வீட்டில் பேசிக்கொண்டிருந்தா உடனே இது கிடைக்கும். ஐயாம் சைலண்ஸ்...........

மின்மினி said...

நல்ல டேஸ்டா இருக்கும்போல.. செய்துபாக்கணும்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

பார்த்தாலே தெரியுது;சுவையானதாக இருக்கும்.

Sashi said...

Thanks for stopping by at my blog. I have read ur recipes in Arusuvai.com. They were really helpful. Aval looks delicious and healthy. It's hard to type in tamil for first time. Will improve over time.

Mrs.Menagasathia said...

//ரொம்ப சத்தான இந்த கைகுத்து அவல் மிகவும் ருசியாக இருக்கும்,ஒரு பக்கா ரூ 20.தான்.கார்ன் ப்லேக்ஸ்- க்கு முக்கியத்துவம் கொடுக்கிற நாம நம்ம தாய் உணவான இதை மறந்து விட்டோம்.இந்த அவலை பயன்படுத்தி நிறைய ரெசிப்பி செய்யலாம்.//உண்மைதான் அக்கா.மறந்து போன சமையலை ஞாபகபடுத்தியதற்க்கு நன்றியக்கா!!

Ammu Madhu said...

ஆசியா ரெசிப்பீ சூப்பரா இருக்கு.படங்களும் அருமை ஆனால் ஒரு சின்ன சஜஷன்
படம் ரொம்ப குட்டியா இருக்கே லார்ஜ் சைஸ்சா போட்ட கலக்கலா இருக்கும்.

//கார்ன் ப்லேக்ஸ்- க்கு முக்கியத்துவம் கொடுக்கிற நாம நம்ம தாய் உணவான இதை மறந்து விட்டோம்//

உண்மை உண்மை உண்மை

asiya omar said...

ஜெய்லானி வெல்லம் போடும் பொழுது பால் சேர்க்கமாட்டோம்.வென்னீர்,வெல்லம்,தேங்காய்பூ போதும்.மில்க் மெய்ட் ??
கலக்குறீங்க ஜெய்லானி.

asiya omar said...

மின்மினி அருமையாக இருக்கும்.சளிக்கு கூட நல்லதுன்னு சொல்வாங்க.

asiya omar said...

sashi,thanks for your visit and comments.

asiya omar said...

ஸ்டார்ஜன் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

மேனகா,அம்மு ஆமாம் ஒவ்வொரு தடவை வெளிநாடு பயணம் செய்யும் பொழுது இங்கு கிடைக்கும் அற்புதமான உணவுகளை எதை எடுத்து செல்வது என்று குழம்பும் பொழுது இந்த அவலும் நினைவு வரும்.

அன்புடன் மலிக்கா said...

/அதிகம் வீட்டில் பேசிக்கொண்டிருந்தா உடனே இது கிடைக்கும். ஐயாம் சைலண்ஸ்//

அவல் கொடுத்து வாயடைப்பது சரிதான்.திறந்த வாயமூடனும்.

ஆசியாக்கா நல்ல ரெசிபி. அவல் ருசியே தனிதான்..

ஜெய்லானி said...

//asiya omar said...

ஜெய்லானி வெல்லம் போடும் பொழுது பால் சேர்க்கமாட்டோம்.வென்னீர்,வெல்லம்,தேங்காய்பூ போதும்.மில்க் மெய்ட் ??//

நாகூர் கொடியேற்றதுக்கு குடுக்கிற மாதிரியா ? மில்க் மெய்ட் கொஞ்சமா போட்டு பாருங்க .

Ammu Madhu said...

ஆசியா எனக்கு 20 age லில் கல்யாணம் ஆய்ருச்சு சமைச்சு தான ஆகணும்:).கல்யாணம் ஆனதும்ம் வெளிநாட்டிற்கு வந்தாச்சு.இரண்டு வருடங்கள் ஆச்சு.உங்க குறிப்பெல்லாம் பாக்கும் பொழுது எப்ட இந்தியா போய் அம்மா கைல சாப்டுவோம்னு தோணுது:)
நான் சமீபமாக இந்தியா சென்ற பொழுது இந்த அவல் எங்க அம்மா செஞ்சு குடுத்தாங்க.எனக்கு ரொம்ப பிடிக்கும்.என் ப்ளாகிற்கு நீங்கள் வந்து கருத்து கூறியது குறித்து மிக்க மகிழ்ச்சி.அறுசுவையில் உங்க சைவ சமையல் குறிப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.நல்லா சமைக்க தெரிஞ்சவங்க வாய்லேந்து பாராட்டு வாங்கும் பொழுது மனதிற்கு மிகவும் ஊக்கமாக இருக்கும்.நன்றிங்க.அப்பப்போ வாங்க என் ப்ளாகிற்கு.

Chitra said...

எங்கள் பாட்டியம்மா வீட்டில், அடிக்கடி மாலை டிபன் அவல் தான். நினைவு படுத்தியதற்கு நன்றி. :-)

asiya omar said...

ஆமாம் மலிக்கா,அதன் ருசியே தனி தான் அப்ப அப்ப வாங்கி பயன்படுத்தனும்.

asiya omar said...

ஜெய்லானி எங்க ஊரில் மீரா பள்ளிவாசல்(நாகூர் ஆண்டவர் தர்கா) இருக்கு,அங்கே கொடியேத்தம் அப்ப நீங்க சொன்னபடி தருவாங்க,சரியா பாயிண்டை எடுத்து கொடுக்கிறீங்க,புட்டு ரெசிப்பு போட்டா யானைக்கு கொடுக்குகிற மாவுசாவான்னு கேட்பீங்க போல.

asiya omar said...

சித்ரா ஆமாம் பாட்டிகையால அவல் அது தனி டேஸ்டாக இருக்கும்.

asiya omar said...

அம்மு நீங்க எனக்கு ஒரு ஜெனரேஷன் கேப்.ஆனாலும் உங்க சமையல் எனக்கு பிடிக்கிறது.பிள்ளைகளுக்கு பிடித்ததாக நிறைய ரெசிபி இருக்கு உங்க ப்ளாக்லே.

ஸாதிகா said...

ஆசியா,நாங்கள் இதே முறையில்தான் செய்வோம்.காரத்திற்கு வடை,போண்டா,பஜ்ஜி,சாண்ட்விச் சமோசா போன்ற ஏதாவது ஒன்று சேர்த்துக்கொள்வோம்.இன்று காலை இதுதான் ஆனால் சர்க்கரைக்குப்பதில் பாதியளவு சர்க்கரையும்,பாதிஅளவு கருப்பட்டியும் சேர்த்து செய்தால் ஆஹா செம டேஸ்ட்.

athira said...

வித்தியசமான குறிப்பாக இருக்கு ஆசியா. நாங்கள் இதுவரை பால் சேர்த்துச் செய்ததில்லை. இனி செய்துபார்க்கவேண்டும்.

மகி said...

நல்லாருக்கு ஆசியாக்கா..எனக்கும் அவல் உப்புமாவ விட இப்படி இனிப்பா சாப்பிடத்தான் பிடிக்கும்..நாங்க பால் சேர்த்ததில்லை..வெல்லம்/சர்க்கரை,தேங்காய் போட்டுதான் செய்வோம்..பிரதோஷ விரதம் இருந்த காலத்துல:) இதுதான் அம்மா செய்து தருவாங்க!

ஜெய்லானி said...

//athira said...

வித்தியசமான குறிப்பாக இருக்கு ஆசியா. நாங்கள் இதுவரை பால் சேர்த்துச் செய்ததில்லை. இனி செய்துபார்க்கவேண்டும்//

ஆமா ஆமா, பால் குடிக்காத பூஸ இப்ப தான் பாக்குறோம்,,( அடப்பாவமே மிய்ய்ய்ய்ய்ய்ய்ய்யாவ் )