Sunday, April 4, 2010

ஈசி சுருட்டு கறி

தேவையான பொருட்கள் ;
ஆட்டிறைச்சி - 300கிராம்
எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம்- 1 சிறியது
தக்காளி -1 சிறியது,இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன்
கரம்மசாலா - கால்ஸ்பூன்
சில்லி பவுடர் -1டீஸ்பூன்
தயிர் -1 2 டீஸ்பூன்,மல்லி இலை -சிறிது
பச்சை மிளகாய் -1 உப்பு -தேவைக்கு.
செய்முறை:-
குக்கரில் மட்டன்,நறுக்கிய வெங்காயம்,தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா,சில்லி பவுடர்,மிளகாய்,மல்லி இலை,தயிர்,உப்பு,எண்ணெய் அனைத்தும் சேர்க்கவும்.

குக்கரில் சேர்த்தவற்றை கலந்து கொள்ளவும்.அரை மணி நேரம் ஊற விடவும். இது ஈசி முறை.
(இன்னொரு முறை  எண்ணெய் சூடு செய்து வெங்காயம் தக்காளியை நன்கு வதக்கி ஊற வைத்த மட்டனை  சேர்த்தும் செய்யலாம்)

குக்கரை 3- 5 விசில் வைத்து இறக்கவும்.


மட்டன் வெந்து இப்படி இருக்கும்.அதனை தண்ணீர் இல்லாமல் சுருட்டவும்.

சுவையான சுருட்டு கறி ரெடி.
இதனை வெரைட்டி ரைஸ்,பிரியாணி,ஃப்ரைட் ரைஸ் உடன் பரிமாறலாம்.
-ஆசியா உமர்.

26 comments:

ஸாதிகா said...

இப்படி சுருட்டுக்கறி எனக்கு ரொம்ப பிடிக்குமே!

Chitra said...

mmm.....yummy! :-)

Mrs.Menagasathia said...

அடடா எச்சில் ஊறுதே....அருமை!!

Sashi said...

Thanks for ur wishes. Love the mutton dishes, am marking it will definitely try sometime soon !!

ஜெய்லானி said...

கஷ்டப்பட்டு செஞ்சிட்டு அதென்னங்க ஈசி சுருட்டு கறி. பேருதாங்க வாய்குள்ள போக மாட்டேங்கிது. ஆனா கறி சூப்பர். ( ஆமா எங்க மங்குவை கானோம் .ஒரு வேளை கடல்ல குதிச்சி தற்கொலை பண்ணிகிச்சா )

athira said...

மிகவும் நல்ல ரெசிப்பி. இப்படிப் பிரட்டல் கறிகள் எனக்கும் பிடிக்கும்.

ஜெய்லானி said...

//athira said// மிகவும் நல்ல ரெசிப்பி. இப்படிப் பிரட்டல் கறிகள் எனக்கும் பிடிக்கும்//

ஹலோ..ஆஸியாக்கா கஷ்டப்பட்டு சுருட்டு கறிங்கிறாங்க, நீங்க என்னடான்னா ஈஸியா பிரட்டல் கறிங்கிறீங்க. இதுக்கு பேருதான் காக்கா பார்வையா ?

மங்குனி அமைச்சர் said...

ஆமா கறி இங்க இருக்கு "சுருட்டு" எங்க ? ஏன் மேடம் "சுருட்டு" குடிக்கும் போது தான் இத சாபிடனுமா ?

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

கஷ்டப்பட்டு செஞ்சிட்டு அதென்னங்க ஈசி சுருட்டு கறி. பேருதாங்க வாய்குள்ள போக மாட்டேங்கிது. ஆனா கறி சூப்பர். ( ஆமா எங்க மங்குவை கானோம் .ஒரு வேளை கடல்ல குதிச்சி தற்கொலை பண்ணிகிச்சா )//

அது சரி உன் வலது கைய எங்க காணோம் , ஆஹா அப்ப ஆயிசா உமர் மேடம் ஜெய்லானி வலது கைல தான் இன் தா ரெசிபி பன்னிகளா?

Mano Saminathan said...

அன்புள்ல ஆசியா!

சுருட்டுக்கறி ரொம்ப நன்றாக இருக்கிறது. பெயர் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. நாங்கள் இதை பிரட்டல் என்று சொல்வோம்.

அஹமது இர்ஷாத் said...

சுருட்டுக்கறி இப்பதான் முதல் தடவையா கேள்விப்படுகிறேன். பகிர்வுக்கு நன்றி........

asiya omar said...

ஸாதிகா,சித்ரா,மேனகா செய்து பாருங்க,நல்ல இருக்கும்.

asiya omar said...

sashi,try sometime you may like it.

asiya omar said...

அதிரா இந்த கறிபிரட்டல் உங்களுக்கு பிடிச்சிருக்கு என்பதில் மகிழ்ச்சி.

asiya omar said...

மனோ அக்கா எங்க ஊரில் சுருட்டு கறின்னு தான் சொல்வோம்,அதனால அப்படியே கொடுத்திட்டேன்.

asiya omar said...

மங்கு,ஜெய்லானி அடிக்கிற லூட்டிக்கு,உங்க விசிறிங்க எனக்கு மெயில் அனுப்பி தங்களின் மகிழ்ச்சியை தெரிவிக்கிறாங்க.கூடிய சீக்கிரம் மங்கு ஜெய்லானி கூட்டணியை ரஜினியின் படத்தில் பார்க்கலாம் போல அந்த ரேஞ்சுக்கு ரசிக பட்டாளம் பெருகிடுச்சாம்.நம்பகமான வட்டார செய்தி.

asiya omar said...

இர்ஷாத் உங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

அன்புத்தோழன் said...

"ஈசி சுருட்டு கறி"

பேரே புதுசா இருக்கு.... உக்காந்து யோசிப்பீங்களோ...?!?!?!?

asiya omar said...

அன்புத்தோழன் உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

ஜெய்லானி said...

//மங்குனி அமைச்சர் said..அது சரி உன் வலது கைய எங்க காணோம் , ஆஹா அப்ப ஆயிசா உமர் மேடம் ஜெய்லானி வலது கைல தான் இன் தா ரெசிபி பன்னிகளா?//

ச்சோ..ச்சோ..மங்கு..உன்னை நெனச்சா கண்ணுல தண்ணியா கொட்டுது...என்ன செய்ய ..ஆண்டவன் புத்தியதான் குடுக்கல...பாவம் கண்பார்வையும் கம்மியா ஆயிட்டு இல்ல வருதே!!நா என்ன செய்ய...யாரை ..கேக்க...ஹீம்...ஒரே அழுவாச்சியா வருதே!!!!!(( மட மங்குஊஊஊ , உனக்கு என் கை மேல ஆசையா ? எனக்கு உன் கண் மேல ஆசை.. எப்பூடி????????)))

ஜெய்லானி said...

//asiya omar said...

மங்கு,ஜெய்லானி அடிக்கிற லூட்டிக்கு,உங்க விசிறிங்க எனக்கு மெயில் அனுப்பி தங்களின் மகிழ்ச்சியை தெரிவிக்கிறாங்க.//

இங்க வெயில் அதிகமாயிட்டே வருது. ஏஸி சரியா வேலை செய்யமாட்டேங்குது. பிளிஸ் ஒரு விசிறி தாங்களேன் . வீசிக்கிறதுக்கு. பிளிஸ் , பிளிஸ்..((ஆமாங்க நீங்கதான் மெயில் அட்ரஸே ஃப்ரோபைலில் தரலியே அப்புறம் எப்படி??? ஏப்ரல் 1தான் போயிடுச்சே!!))

athira said...

//ஹலோ..ஆஸியாக்கா கஷ்டப்பட்டு சுருட்டு கறிங்கிறாங்க, நீங்க என்னடான்னா ஈஸியா பிரட்டல் கறிங்கிறீங்க. இதுக்கு பேருதான் காக்கா பார்வையா ?/// ஜெய்..லானி இது சுருட்டிப் பிரட்டுறது.. ..கிக்..கிக்..கிக்.. சே..சே..கரெக்ட்டா நானில்லாத நேரம் பார்த்து வந்திட்டுப் போய்விடுறாரே....

asiya omar said...

அதிரா வந்து விளக்கம் கொடுத்தமைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

ஜெய்லானி,எங்க உறவினர்கள்,ஃப்ரண்ட்ஸ் ம்ம அப்புறம் முக்கியமா ... எல்லாரும் உங்க விசிறிங்க.சில பேர் சமையல் குறிப்பை பார்ப்பதில்லையாம்,கமெண்ட்ஸ் மட்டும் பார்க்கிறாங்களாம்.

Jaleela said...

ஆசியா சுருட்டு கறி ரொம்ப நல்ல இருக்கு

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

சுருட்டுதல் என்றதும் நான் ஏதோ சப்பாத்தியில் பொட்டு சுருட்டுகிறீர்களோ என்று நினைத்தேன்..

எங்கள் பகுதியில் இதைப் பெரட்டுதல் என்பார்கள்..

ஆனாலும் அந்த வாசனையை என்னால் உணர முடிகிறது.. ஆஹா..

நன்றி..