Monday, April 5, 2010

விறால் மீன் ஃப்ரைஇது ஆறு,குளம் உள்ள பகுதிகளில் கிடைக்கும்.துடிக்க துடிக்க ஃப்ரெஷாக வாங்கி தான் சமைத்து சாப்பிடனும்.அப்பதான் ருசியாக இருக்கும்.


மீனை நன்கு உரைத்து கழுவி கட் செய்து கொள்ளவும்.உப்பு,மஞ்சள் தூள் போட்டு கழுவி எடுக்கவும்.அரைகிலோ மீனுடன் 2  டீஸ்பூன்  மிளகாய்த்தூள்,கால்- டீஸ்பூன் மிளகுத்தூள்,கால் டீஸ்பூன்- மஞ்சள், சீரகத்தூள்,பூண்டு தட்டியது 6 பல் ,தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
எல்லாதூண்டுகளிலும் படுவது போல் கலந்து பிசறி ஒரு மணி நேரம் வைக்கவும்.ஒரு சாலோ ஃப்ரை பேனில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீனைப்போடவும்.


திருப்பி போட்டு சிவற பொரித்து எடுக்கவும்.சுவையான பொரிச்ச மீன் ரெடி.


குறிப்பு :

ஆற்று மீனை சிம்பிளாக பொரித்தாலே ருசி அபாரமாக இருக்கும்.விரும்பினால் இன்னும் லைம்,மற்ற மசாலா சேர்த்தும் பொரிக்கலாம்.

--ஆசியா உமர்.

24 comments:

Sashi said...

My fav fish fry, mouth watering indeed. Love ur recipes, simple and tasty !!

மங்குனி அமைச்சர் said...

டுடே குட் "பிறை" டே ,
ஜெய்லானி வந்தாச்சா , இல்லன்னா அப்புறம் வரேன்

Chitra said...

I love fish fry. விறால் மீனுக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்? ஆறு குளம்னு தேடணுமே, இங்கே......
Mouth-watering recipe. :-)

ஸாதிகா said...

படங்கள் பார்க்க அழகாக இருக்கு ஆசியா

அன்புத்தோழன் said...

ரொம்ப நல்லாருக்கு.... உங்களுக்கு சமையலோட போடோக்ராபியும் பிரமாதமாவே வருது.... படங்கள் தெளிவா, பார்கிரவங்களுக்கு பசி எடுக்க வைக்குற மாதுரி இருக்கு....

மங்குனி அமைச்சர் said...

//Chitra said...

I love fish fry. விறால் மீனுக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்? ஆறு குளம்னு தேடணுமே, இங்கே......
Mouth-watering recipe. :-)//

மேடம் உங்க அட்ரஸ் சொல்லுங்க , ரெண்டு ஆறும் , ஒரு குளமும் கொரியர்ல அனுப்பி வக்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

// Sashi said...

My fav fish fry, mouth watering indeed. Love ur recipes, simple and tasty !!//

இப்பதான் பதிவே போட்டாக , அதுக்குள்ள எப்படி டேஸ்ட் பண்ணிக்க ?
கலர்ல பிரிண்ட் எடுத்து சாப்பிட்டு பாதிகளோ ?

asiya omar said...

thanks sashi for your nice compliments.

ஜெய்லானி said...

//மங்குனி அமைச்சர் said...

மேடம் உங்க அட்ரஸ் சொல்லுங்க , ரெண்டு ஆறும் , ஒரு குளமும் கொரியர்ல அனுப்பி வக்கிறேன்//மங்கு, அனுப்பியதும் சொல்லு நான் வலை இல்லைன்னா தூண்டில் அனுப்பி வைக்கிறேன்.

ஜெய்லானி said...

// மங்குனி அமைச்சர் said...

டுடே குட் "பிறை" டே ,
ஜெய்லானி வந்தாச்சா , இல்லன்னா அப்புறம் வரேன்//

ஏன்யா , என்னை பாத்தா வயத்த கலக்குதா !! ஜலீலாக்கா தான் உனக்காகவே மருந்து சோறு பண்ணியிருக்காங்க!!

asiya omar said...

சித்ரா இப்படி தெரிந்திருந்தால் மீனை முழுதாக கட் செய்யும் முன் படம் எடுத்திருப்பேன்.கூகிளில் தேடி சொல்லலாம்னு தேடினால் (fresh water,river water fishes )கிடைக்கலை.ஆங்கிலத்தில் பெயர் தெரிந்தால் மற்றவர்களும் சொல்லலாம்.நீங்க நெல்லை தானே வரும்பொழுது வாங்கி சாப்பிட்டால் போச்சு,இநத மீன் எவ்வளவு விலையாக இருந்தாலும் ஏக கிராக்கி எப்பவும்.

asiya omar said...

ஸாதிகா மறக்காமல் வந்து கருத்து சொன்னமைக்கு மிக்க மகிழ்ச்சி.

ஜெய்லானி said...

// மங்குனி அமைச்சர் said...

இப்பதான் பதிவே போட்டாக , அதுக்குள்ள எப்படி டேஸ்ட் பண்ணிக்க ?
கலர்ல பிரிண்ட் எடுத்து சாப்பிட்டு பாதிகளோ ?//

மக்களே!!!, நல்லா பாத்துக்கோங்க எப்படி மங்கு உண்மைய ஒத்துகிட்டத அட கழுதையே!!

Mrs.Menagasathia said...

ஹையா எனக்கு ரொம்ப பிடித்த மீன் இது....இதன் குழம்பும்,வறுவலும் அருமையோ அருமை....ஞாபகபடுத்திட்டீங்கக்கா...

அண்ணாமலையான் said...

i like it very much may favorite

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...


ஏன்யா , என்னை பாத்தா வயத்த கலக்குதா !! ஜலீலாக்கா தான் உனக்காகவே மருந்து சோறு பண்ணியிருக்காங்க!!///


அதுக்கில்ல ஜெய்லானி நீ இருந்தா தான் உன்ன கொன்னு கொன்னு விளையாட சுவாரசியமா இருக்கும்

மனோ சாமிநாதன் said...

ஆசியா!

மீன் வறுவல் பார்க்க ரொம்பவும் அழகாக இருக்கிறது. ஒரு மாதத்துக்கு முன் விரால் மீன் கிலோ 400 ரூபாய் விற்றது. ஆனாலும் இதன் சுவை தனிதான்!!

asiya omar said...

அண்ணாமலையான் உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

ஆமாம் மனோ அக்கா,இது பத்தியமீன் .இது சின்ன மீன் ஆதலால் கிலோ ரூ280 தான்.ஆனா; ரூ 250-400 வரை விலையேற்றம் இறக்கம் இருக்கும்.உங்களிடம் இருந்து ஒரு சின்ன பாராட்டு கிடைத்தாலும் எனக்கு பெரிய மகிழ்ச்சி.

கால்கரி சிவா said...

விரால் மீனை ஆங்கிலத்தில் Snake Head Murrel என்பார்கள்.

இது வட அமெரிக்காவில் கிடைப்பது அரிது.

தாய்லாந்து ரெஸ்டாராண்டுகளில் கிடைக்கலாம். தாய் மொழியில் இதை Pla Chon என்பார்கள். எனக்கு இதுவரை கிட்டவில்லை.

மத்திய கிழக்கு நாடுகளில் கிடைக்கவில்லை.

அமெரிக்க நண்பர் ஒருவர் ஹூஸ்டனுக்கு அருகே ஒரு ஏரியில் பிடித்தாக சொன்னார்.

அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாற முயற்சிப்பதால் இந்த மீனை பிடிக்க முயலவில்லை :)

asiya omar said...

கால்கரி சிவா உங்கள் வருகைக்கும் பதிலிற்கும் மிக்க நன்றி.நானும் நேற்று தேடியதில் ஒரு கூடை நிறைய இந்த மீனை பார்த்தேன்,ஒரு சமயம் பாம்பு விலாங்கு மீனோ என்று நினைத்து விட்டேன்,நீங்கள் சொல்வது சரிதான்.பாராட்டுக்கள்.

Sashi said...

Hello Manguni Sir, similar sort of ingredients use panni fish fry panni irruken, more over ivangaloda recipes nana already try panniirrken. BTW, ungaloda color printout idea super !! will keep that in mind.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

"துடிக்க துடிக்க.."

இந்த வார்த்தை கொஞ்சம் நிரடியது..

சாரி நான் அப்படித்தான்.. மன்னிக்கவும்..

ஆனால் இதைக் கொடுத்தமைக்கு நன்றிகள்...

asiya omar said...

பிரகாஷ் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.நான் சொன்னது செத்த மீன் ஆற்று மீனில் ருசிக்காது என்பதைத்தான்.