Wednesday, April 7, 2010

முட்டை இடியாப்பம்

தேவையான பொருட்கள ; முட்டை -3 ,இடியாப்பம் - 6 ,எண்ணெய் -3 டேபிள்ஸ்பூன்,நெய் - 1 டீஸ்பூன்,வெங்காயம் -200 கிராம்,தக்காளி - 100 கிராம்,மிளகாய் - 1,இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்,கரம்மசாலா -கால்ஸ்பூன்,மிள்காய்த்தூள் -கால்ஸ்பூன்,மஞ்சள் தூள் -கால்ஸ்பூன்,மிளகுத்தூள் -கால்ஸ்பூன்,மல்லி கருவேப்பிலை -சிறிது ,உப்பு - தேவைக்கு.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,நறுக்கிய வெங்காயம் முழுவதும் போட்டு வதங்கியதும்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம்மசாலா போட்டு வதக்கவும்.நறுக்கிய மிள்காய், மல்லி இலை ,கருவேப்பிலை,ரம்பை இலை சேர்க்கவும்.

பின்பு நறுக்கிய தக்காளி,மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்



இடியாப்பம்த்தை உதிர்த்து வைக்கவும்,முட்டையை சிறிது உப்பு,மிளகுத்தூள் கலந்து வைக்கவும்.

வதக்கிய வெங்காயம்,தக்காளி மசாலாவுடன் அடித்து வைத்த முட்டையை சேர்க்கவும்,வெந்து வரும் பொழுது பிரட்டி விடவும்,நெருப்பை குறைத்து வைக்கவும்,இல்லைவிடில் அடிபிடித்து விடும்.



தயார் செய்த முட்டை மசாலாவில் உதிர்த்த இடியாப்பம் போட்டு பிரட்டவும். ஒரு டீஸ்பூன் நெய் சேர்க்கவும்.நல்ல மணமாக இருக்கும்.



சுவையான முட்டை இடியாப்பம் ரெடி.மணமும் ருசியும் அபாரமாக இருக்கும்.முட்டை,வெங்காயம் தக்காளி இந்த அளவு சேர்த்தால் விக்காமல் இடியாப்பம் உள்ளே போவதே தெரியாது.


--ஆசியா உமர்

9 comments:

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி

http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html
################

Chitra said...

கொத்து பரோட்டா ஸ்டைல் ரெசிபி. நல்லா இருக்குங்க.

asiya omar said...

ஜெய்லானி ,விருதை தூக்கமுடியாமல் தூக்கி வந்து வரவேற்பறையில் மாட்டியாச்சு,எத்தனை அழகு ! மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

ஆமாம் சித்ரா,கொத்து பரோட்டா ஸ் டைலே தான்.ஈசி செய்து பாருங்க.

Mrs.Menagasathia said...

முட்டை சேர்த்து செய்வது அருமையாக இருக்குக்கா...

asiya omar said...

மேனகா உங்க அன்பான கருத்திற்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

ஃப்ரிட்ஜில் இருக்கும் இடியாப்பத்தை எடுத்து உதிர்த்து இந்த முறையில் செய்வது வாடிக்கை.சுலபமானதும் சுவையானதும் கூட.

asiya omar said...

ஃப்ரெஷாகவே காலை டிபனுக்கு இடியாப்பம் அவித்து இனிப்பிற்கு தேங்காய்ப்பால் மாதிரி வைத்து கொண்டு காரத்திற்கு சால்னா எதுவும் வைக்க முடியலைன்னால் இப்படி செய்வது வழக்கம்.கெஸ்ட் வரும் மற்றும் முக்கிய நாட்களில் வட்லாப்பம்,மட்டன் சால்னா தான் இடியாப்பதிற்கு நல்ல காம்பினேஷன்.நன்றி ஸாதிகா.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

ஆஹா.. முட்டை எனக்கு ரொம்ப பிடித்தது..

ட்ரை பண்ணீட வேண்டியதுதான்..

நன்றி இந்த சமையலை எனக்கு அறிமுகப் படுத்தியதற்கு..