Thursday, April 8, 2010

மீன் மிளகு முட்டானம்

எங்க ஊரில் இதனை பிள்ளைபெத்த ஆனம் என்றும் சொல்வோம்.

தேவையான பொருட்கள் ;

பத்தியமீன் -விறால் குட்டி(குறத்தகுட்டி) அல்லது பால் சுறா -கால் கிலோ,சின்ன வெங்காயம் -100 கிராம்,தக்காளி - 1 பெரியது,பூண்டு - 10 பல்,நல்ல எண்ணெய் -50-75 மில்லி,மிளகுத்தூள் -ஒன்றரை டீஸ்பூன்,மல்லித்தூள் - 2 டீஸ்பூன்,சீரகத்தூள் -முக்கால் டீஸ்பூன்,மஞ்சள் தூள் -முக்கால் டீஸ்பூன்,தாளிக்க கடுகு,உளுத்தம் பருப்பு -அரைஸ்பூன்,கருவேப்பிலை -2 இணுக்கு.நாட்டு கோழி முட்டை - 4 ,புளி - சிறிது. தேங்காய் துருவல் -2 டேபிள்ஸ்பூன்,உப்பு -தேவைக்கு.
கொடுத்துள்ள மசாலா பொருட்கள்,வெங்காயம்,தக்காளி,பூண்டு,தேங்காய் சேர்த்து அரைத்து எடுத்து ஆனம் வைக்கும் பாத்திரத்தில் வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.


மசாலா வெடு வெடுப்பு அடங்கி, மணம் வந்ததும்,மீனை போடவும்.மீனை சிம்மில் வைத்து வேகவிடவும்.


பின்பு தீயை கூட்டி முட்டையை உடைத்து ஊற்றி தீயை மிதமாக வைக்கவும்.முட்டை வெந்து பொங்கி வரும்.ஒரு வாணலியில் நல்ல எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு,நறுக்கிய சின்ன வெங்காயம் சிறிது,கருவேப்பிலை போட்டு தாளித்து சிவற் விடவும்.சிவந்த தாளிசத்தை மீன் மிளகு முட்டையானத்தில் கொட்டவும்.சிறிது அடுப்பை சிம்மில் வைத்து அணைக்கவும்.தள தளன்னு பார்க்கவே அழகான சத்தான மீன் மிளகு முட்டானம் ரெடி.

குறிப்பு:இது குழந்தை பெற்றவர்களுக்கு செய்து கொடுக்கும் ஸ்பெஷல் ஆனம் ஆகும். இதைப்போல் கருவாட்டிலும் செய்யலாம்.

20 comments:

Chitra said...

A new recipe......!!!
Thank you for sharing it with us.

அண்ணாமலையான் said...

ரைட்டு

தமிழினி said...

உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

நன்றி
தமிழ்10.காம் குழுவினர்

Mrs.Menagasathia said...

lovely recipe & i like it very much...

Geetha Achal said...

மிகவும் அருமையாக இருக்கின்றது...குழந்தை பெற்றவர்கள் தான் சாப்பிடனுமா...இல்ல எல்லோரும் சாப்பிடலாமா...

ஜெய்லானி said...

மியாவ்...மியா......வ்..சூ..போ...போ... வாசனைக்கே வருதே!!!!

asiya omar said...

சித்ரா,மேனகா மகிழ்ச்சி.
அண்ணாமலையான் மீண்டும் வருகை புரிந்ததில் மகிழ்ச்சி.
கீதா ஆச்சல் என்ன இப்படி கேட்டுட்டீங்க ?இதன் வாசனைக்கு மற்றவர்கள் முதலில் தட்டு போட்டு உட்கார்ந்து விடுவார்கள்.எல்லாரும் செய்து பொதுவாக சாப்பிடலாம்,எல்லாம் நாம் சமையலில் அன்றாடம் உபயோகிக்கிற மசாலா தான்,நல்ல எண்ணெய் ,நாட்டு கோழி முட்டை முக்கியம்.

Sashi said...

Thanks a lot for ur appreciation. You are an experienced and wonderful chef. I am just a newbie. :) Learning a lot from you guys. Unga recipes ellam authenticaa irrukku. Itha try panna ennakku inga variety meen kidaikkamatinguthu. I treasure ur website. Anytime I can try recipes from ur website. :)

மங்குனி அமைச்சர் said...

லேடிஸ் ஸ்பெஷல் , அசத்துங்க

மங்குனி அமைச்சர் said...

பாருங்க இப்பவே நம்ம ஜெய்லானி செல்லம் கத்த ஆரம்பிச்சிருச்சு , மேடம் சாப்டு அந்த முள்ளு எல்லாம் எடுத்து நம்ம ஜெய்லானி செல்லத்துக்கு போடுங்க

ஜெய்லானி said...

//மங்குனி அமைச்சர் --பாருங்க இப்பவே நம்ம ஜெய்லானி செல்லம் கத்த ஆரம்பிச்சிருச்சு , மேடம் சாப்டு அந்த முள்ளு எல்லாம் எடுத்து நம்ம ஜெய்லானி செல்லத்துக்கு போடுங்க//

மங்கு இந்த வலை உனக்கு இல்லை. நீயா வந்து மாட்டிக்காதே

prabhadamu said...

ஆசியா அக்கா இப்படி அசத்துரிங்கலே. வாயில் நீர் ஊறுத்து.

ஸாதிகா said...

மீனுடன் முட்டை சேர்த்து குழம்பா?டிரை பண்ணுவோம்?

asiya omar said...

தமிழினி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.தமிழ்10 ஒட்டுப்பட்டையை இணைத்துவிட்டேன்.
அனைவரையும் சென்று பார்வையிடவும் பிடித்திருந்தால் ஓட்டளிக்கவும் வேண்டுகிறேன்.

asiya omar said...

sashi thanks always for your best compliments.you are always welcome.

asiya omar said...

மங்குனி,ஜெய்லானி மீ எஸ்கேப்....

asiya omar said...

ஸாதிகா செய்து பாருங்க,ஒரு சமயம் உங்களுக்கு டேஸ்ட் பிடிக்கலாம்.எங்க ஊர் ஆட்கள் எல்லாரும் இதை விரும்பி சாப்பிடுவாங்க,குழந்தை பெற்றால் தினமும் தாய்மார்களூக்கு எலும்பு சூப் தானே,இடையில் போரடிக்காமல் இருக்க இந்த மாதிரி பத்தியமீனில் செய்து கொடுப்பாங்க,அதையொட்டி எல்லாரும் செய்து சாப்பிடுவது வழக்கம்.

சே.குமார் said...

fish kulambu summa padikkum pothey nammala thukkuthey.
orukku ponathum viral fish kulambuthan ponga.

vazththukkal

Priya said...

வாவ்... அழகான புகைப்படங்களுடன் அருமையான குறிப்பு!

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

எங்கம்மாகிட்ட சொல்லி செய்யச் சொல்லனும்..