Friday, April 9, 2010

இடியாப்பம் ஃபிர்னி

இடியாப்பம் செய்வதற்கு இடியாப்ப மாவு - 2 கப்,கொதி நீர் - மூனரை கப்(கூட குறைய இருக்கலாம்- மாவின் தரம் பொருத்து),உப்பு -சிறிது,நெய் - 1 டீஸ்பூன்

ஒரு பாத்திரத்தில் மாவை எடுக்கவும்,உப்பு,நெய் போடவும்,ஒரு கனமான கரண்டியின் கை கொண்டு கிளறவும்,கொதி நீரை விட்டு கிண்டவும்,கொஞ்சம் சாதா நீரை தெளிக்கவும்,கட்டி பிடிக்காது,மாவு திரண்டு வரும்.சிறிது நேரம் கிண்டிய மாவை மூடி வைக்கவும்.ஒரு கையளவு எடுத்து இடியப்பகுழலில் வைத்து தட்டில் பிழிந்து அவித்து எடுக்கவும்.

ஃபிர்னிக்கு தேவையான பொருட்கள் ;ரவை - 1 சிறிய கப்,சீனி - 2 கப்,பால் அரை லிட்டர் , தண்ணீர் கால் லிட்டர் ,ஏலக்காய் - 5 ,நெய் - 1டேபிள்ஸ்பூன்,முந்திரிபருப்பு - 10,கிஸ்மிஸ் - 10 .
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து ரவை போட்டு 5 நிமிடம் கழித்து அடுப்பில் வைத்து ஏலம் சேர்த்து மிதமான தீயில் அகப்பை கொண்டு கிண்டி அடிபிடிக்காமல் ரவையை வேக வைக்கவும்.

சிறிது நேரத்தில் ரவை வெந்து கெட்டியாகி வரும்.


முந்திரி கிஸ்மிஸ் நெயில் வறுத்து வைக்கவும்.


வெந்த ரவையில் பால் தேவைக்கு சேர்க்கவும்.சீனி சேர்க்கவும்,சீனி சேர்ந்து பிர்னி கொதித்து வரும்.விருப்பப்பட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் கொடி போல் ஊற்றவும்.நெய்யில் வறுத்த முந்திரி கிஸ்மிஸ் சேர்க்கவும்.கலந்து விடவும்.

வெள்ளை வெளேர்னு சூப்பர் சுவையுள்ள ஃபிர்னி ரெடி.இதனை இடியாப்பத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.சும்மாவே பவுலில் ஸ்பூன் போட்டு சாப்பிட இனிப்பு பிரியர்களுக்கு அமிர்தமாக இருக்கும்.
--ஆசியா உமர்.

16 comments:

Mrs.Menagasathia said...

வாவ்வ்வ் மிக அருமையாக இருக்கு.பிர்னியுடன் இதுவரை இடியாப்பம் சாப்பிட்டதில்லை.இடியாப்பதிலும் நெய் சேர்த்து கிளறியதில்லை.உங்க முறைப்படி செய்தால் செம அசத்தலா இருக்கும்னு நினைக்கிறேன்.அடுத்த முறை இதுமாதிரி செய்திடலாம்..

மனோ சாமிநாதன் said...

ஆசியா!

இடியாப்பத்துக்கு ஃபிர்னி தொட்டுக்கொள்வது என்பது வித்தியாசமாக இருக்கிறது. ஒரு சுவையான சைட் டிஷ்-ஐ இடியாப்பத்திற்குத் தந்திருக்கிறீர்கள்!!

ஜெய்லானி said...

கடைசி வரி ஹை...சூப்பர்.

செந்தமிழ் செல்வி said...

ஆசியா,, என்ன இப்படி எக்ஸ்பிரஸ் வேகககத்ஹ்தில் ஓடறீஇங்க??!!!!

வித்தியாசமான சைட் டிஷ். அடுத்த முறை முயற்சிக்கிறேன்.

asiya omar said...

மேனகா தவறாமல் வருகை புரிந்து கருத்து சொல்வதற்கு மிக்க நன்றி.

asiya omar said...

மனோ அக்கா மிக்க மகிழ்ச்சி.

செல்விக்கா வருகைக்கும்கருத்திற்கும் மிக்க நன்றி.ப்யணம் அருகே இருப்பதால் எடுத்ததை போட்டு விடலாம்னு நினைச்சேன்.வேறு ஒன்றுமில்லை.

asiya omar said...

ஜெய்லானி சீனிக்கு பதிலாக வெல்லம் போடலாமேன்னு சொல்லிவிடுவீங்கன்னு நினைச்சேன்,பரவாயில்லை அக்செப்டா?

Ammu Madhu said...

kalakkal.

Chitra said...

இடியாப்பத்துக்கு firni , புதுசு. Thank you for the recipe.
நெய் சேர்த்து இடியாப்பம் செய்தால், இன்னும் softaaga வருமா?

asiya omar said...

அம்மு மிக்க நன்றி.
சித்ரா நெய் சேர்த்து மாவை கிண்டும் பொழுது மாவு கட்டி பிடிக்காது,பிழிவதும் ஈசி,இடியாப்பமும் ஒட்டாமல் வலை வலையாக சாஃப்டாக வரும்.

sarusriraj said...

இடியாப்பத்துக்கு பிர்னி புது மாதிரியா இருக்கு கட்டாயம் செய்து பார்கிறேன். பார்க்கும் போதே சாப்பிட தோணுது.

ஸாதிகா said...

செம காம்பினேஷன்.இடியாப்பத்திற்கு சைட் டிஷ் என்னன்னு சென்னைவாழ் பிரண்ட்ஸ் கேட்டால் பாயசம் என்று நான் சொல்லுவதைகேட்டு வியப்பார்கள்.ஆசியா எதற்கு இடியாப்பமாவுடன் நெய் சேர்க்கிறீர்கள்?கண்டிப்பாக கொதி நீருடன் குளிர்ந்தநீரும் சேர்க்கணுமா?எனக்கு சில சமயம் இடியாப்பம் பிசுபிசுப்பாக வருகின்றது.சில சமயம் பிழிய முடியாமல் சீறுகிறது.விளக்கம் தாருங்கள்.இருந்தாலும் இடியாப்பத்தை விடுவதில்லை.வாரம் ஓரிரு முறையாவது செய்து விடுவேன்.

asiya omar said...

சாரு வாரம் ஒருமுறை காலை டிஃபன் இடியாப்பம்,ஃபிர்னி,காரத்திற்கு முட்டை இடியப்பம் இது ரெகுலர் மெனு.செய்து பாருங்க.

asiya omar said...

ஸாதிகா வீட்டில் ரெடி செய்த மாவு என்றால் நல்ல கொதிக்கும் நீர் ,உப்பு,பக்கத்தில் அரை டம்ளர் சாதா நீர் ரெடியாக வைத்துக்கொள்ளவும்.மாவை ஒரு கனமான பாத்திரத்தில் எடுத்து கொண்டு கொதிக்கும் நீரை விட்டு கிண்டும் பொழுது அரை கப் சாதா நீரையும் விட்டால் கட்டி பிடிக்காது,பக்குவமாக மாவு வெந்து இருக்கும்.ரெடிமேடு மாவு என்றால் பாக்கட்டில் கொடுத்து இருக்கும் instructions -ஐ பின்பற்றி செய்யனும்.நெய் சேர்ப்பதால் பிசுபிசுப்பும் இருக்காது,மணமாக கையில் ஒட்டாமல் மாவு எடுக்கும் பொழுது பக்குவமாக திரண்டு வரும்.இடியாப்பம் வலைவலையாக ஒட்டாமல் வரும்.கஷ்டப்பட்டு பிழிய தேவையில்லை,மரக்குழல் கொண்டுதான் பிழிவேன்.நல்லா வரும்.என்னதான் இருந்தாலும் மாவு வறுப்பு சரியான பக்குவமாக இருந்தால் கவலைப்படாமல் அவிக்கலாம்.

Jaleela said...

ரொம்ப நல்ல இருக்கு முன்பு இடியாப்பம் பிழிவேன் , இப்ப எல்லாம் ரெடிமேட் தான்

இடியாப்பத்துக்கு பீர்னி (மஞ்சள் பீர்னி, வெள்ளை பீர்னி இஸ்லாமிய இல்ல விஷேஷங்களில் செய்வது. ரொம்ப அருமையாக இருக்கும்.

asiya omar said...

ஜலீலா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.