Saturday, April 10, 2010

கேப்பை கூல் கூழ்

தேவையான பொருட்கள் ; கேப்பை களி அல்லது உருண்டை முதல் நாள் செய்தது ஒரு கையளவு,மோர் - 1கப்,வெங்காயம் -பாதி,மிள்காய் -கால்,மல்லி கருவேப்பிலை -சிறிது,உப்பு -தேவைக்கு.



கேப்பை உருண்டையை கையளவு எடுத்து உதிர்த்து மோருடன் மிக்ஸியில் போடவும்.



பல்ஸ் வைத்து 4 முறை திருப்பவும்.

வெங்காயம்,மிள்காய்,மல்லி கருவேப்பிலை நறுக்கி ரெடி செய்யவும்.


மிக்ஸியில் கேப்பை,மோருடன் தேவைக்கு நறுக்கியவற்றை சேர்க்கவும்.
திரும்ப மிக்ஸியை பல்ஸில் வைத்து 2 முறை சுற்றவும்.சுவையான சத்தான ஆரோக்கியமான கேப்பை கூல் கூழ் ரெடி.இதனை அருந்தினால் வயிறு குளுமையாக இதமாக இருக்கும்.


-ஆசியா உமர்.

17 comments:

ஸாதிகா said...

பச்சை வெங்காயத்தை அரைத்தா?????நான் எஸ்கேப்.

asiya omar said...

ஸாதிகா வெங்காயம் ,மல்லி,மிளகாய்அரைபடாது,கலந்து இருக்கும்,அவசரமான பதில்.மிக்ஸ் ஆகத்தான் இந்த பல்ஸ்.அரைக்க சொல்ல வில்லை.

ஜெய்லானி said...

மொதல்ல பரிசு எங்கே!!! டோண்ட் எஸ்கேப்.. பரிசு ப்பிளிஸ்........

ஜெய்லானி said...

கேப்பை கூல்......கூல்......

asiya omar said...

இந்த பதிவின் முடிவில் பரிசு அறிவிக்கப்படும்,இன்னும் யாராவது கலந்து கொள்கிறார்களான்னு பார்ப்போம்.

Deivasuganthi said...

இதுல வெங்காயம், மிளகாய் சேர்க்காமதான் செய்வேன். சின்ன வெங்காயம் சேர்த்து பார்க்கிறேன்.

Mrs.Menagasathia said...

சூப்பர்ர்ர் அக்கா...

prabhadamu said...

கேப்பை கூல் supper akka

asiya omar said...

தெய்வசுகந்தி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

மேனகா,ப்ரபா மிக்க நன்றி.

Geetha Achal said...

சூப்பர்ப்...சத்தான கேப்பை கூழ்...மிக்ஸியில் வெங்காயத்தினை அடிப்பது மிகவும் அருமையான ஐடியா...கையினால் அதனை நன்றாக கலப்பதைவிட...இப்படி மிக்ஸியில் கலப்பது மிகவும் நல்லது...சூப்பர்ப்...

asiya omar said...

கீதா ஆச்சல் மொஃதா பற்றி கேட்டு அறுசுவையில் கேட்டு இருந்தீர்கள்.குறிப்பு கொடுத்து இருக்கிறேன்.கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

Chitra said...

கேப்பை கூழ் - ருசிக்கும் ஆரோக்கியமான கூழ். நன்றி.

LK said...

udambukku sathhana ondru

sarusriraj said...

ரொம்ப நல்லா இருக்கு

asiya omar said...

சித்ரா,lk,சாரு மிக்க நன்றி.

Sashi said...

Wow , nutritious, I am home sick now. enga amma summer seasonla cook panni tharuvanga .. heavenly .. My mom doesnt add green chili though.