Sunday, April 11, 2010

ஹிப் ஹிப் ஹுர்ரே


இது என் ஐம்பதாவது இடுகை.
ப்ளாக்கில் எழுத ஆரம்பித்து சரியாக
இரண்டே மாதங்கள் நிறைவு
அதில் கிடைத்த மனநிறைவு

நிஜம் -1

ட்டகாசமான விருதுகள்

தர்சனமான நட்புகள.

னிமையான பரிமாறல்கள்

கைபுரிந்த நல்லிதயங்கள்

ரிமையான கொண்டாட்டங்கள்

க்கமான பின்னூட்டங்கள்

ண்ணிலடங்கா வருகைகள்

ட்டில் எழுதா உணர்வுகள்

ம்பது அசத்தல்கள்

ற்றுமையான ஒத்துழைப்புகள்

டோடி வந்த உறவுகள்

வ்வ்வ் என்ற சந்தோஷங்கள்

என்ற ஆச்சரியங்கள்

இத்தனையும் தமிழ்

உயிர் எழுத்தின் அடையாளங்கள்

என் ப்ளாக்கில.


நிஜம் - 2

கிலிங்க் கிலிங்க
தபால்காரரின் சைக்கிள்
மணியோசை
ஒரு வருடமாய் மாதம்
தவறாமல்
இந்த ஈமெயில் காலத்திலும்
கடிதம் வந்தது
இன்றுமட்டும் ஏன்
வித்தியாசமாய் ஒலிக்கிறது ?
இனி அதற்கு
வேலையில்லை என்றா?

வந்தது என்னவோ
தபாலில் டிக்கட் நகல் தான்
பிரிண்ட் அவுட் எடுக்கும்
வேலை கூட மிச்சம்


பிரிந்தது ஒரு வருடம்
தான் என்றாலும்
காலாண்டு அரையாண்டு
விடுமுறையில் வந்து
அன்பு மழையில்
நனைந்தேன்.

ஒரு வருடம்
ஒரு யுகமாய்
கழிந்தாலும்
சொந்த ஊர் வாழ்க்கை
புளிக்கவா செய்யும் ?
அழகிய என் மகன்
அவரின் கவனிப்பில் புஸ்டியாய்

இங்கு எந்தக்கவலையும்
இல்லாமல்
சமையல் குறிப்பு
கொடுத்துக்கொண்டும்
நான். ?


அவரும் மகனும் அஙகே
நானும் மகளும் இங்கே
மகனிடம் நல்மாற்றங்கள்
ஆயிரம் கண்டு
அதிசயித்தேன்.

மகளோ எப்பொழுதும்
டேடி புராணம்
காலம் கனிந்தது
கவலை விட்டது
நானும் வருவேனே
விண்ணைத்தாண்டி.....

-ஆசியா உமர்.


எழுத ஆரம்பித்த குறுகிய காலத்தில் எனக்கும் விருது கொடுத்து அசத்திய வலையுலக நட்புள்ளங்கள் மேனகா,ஜெய்லானி,ஜலீலா,மின்மினி,ஸாதிகா ஆகியோருக்கு என் மனமார்ந்த மகிழ்ச்சியை தெரிவிக்கிறேன்.விருதுகள் அனைத்தும் என் வரவேற்பறையை அலங்கரிக்கின்றன.ஒவ்வொரு முறை நுழையும் பொழுதும் அந்த விருதுகளை பார்ப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.மிக்க நன்றி.

16 comments:

ஜெய்லானி said...

ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்!!!
சமைத்து மட்டுமில்ல எழுதியும் அசத்தலாம் குறுகிய காலத்தில் சீக்கிரமே ஒரு சென்சுரி போடுங்க !!!!
மீண்டும் வாழ்த்துக்கள்!!!!!!

ஜெய்லானி said...

வாங்க கண்கள்(அல்ஐன்) உங்களை வரவேற்கும்

Chitra said...

CONGRATULATIONS!

இரண்டு மாதங்களில் ஐம்பது பதிவுகள் - பல விருதுகள் - சூப்பர்!

Keep Rocking!

மகி said...

விருதிற்கும் ஐம்பதாவது பதிவிற்கும் வாழ்த்துக்கள் ஆசியா அக்கா!
துபாய் வந்துட்டீங்களா? :)
ஒரே இனிப்பான சேதிகளா இருக்கு..அடுத்து ஒரு ஸ்வீட் ரெசிப்பி குடுங்க! :))))

ஸாதிகா said...

ஐம்பதுக்கு வாழ்த்துகள்.அ இல் ஆரம்பித்து ஃ இல் முடித்த கவிதை அழகு.மீண்டும் வளைகுடா வந்து பழையபடி வருகின்றீர்களா?ரொம்ப சந்தோஷம் ஆசியா.

Jaleela said...

ஆசியா சந்தோஷத்தில் ஹூர்ரே பாடிக்கொண்டு

போட்ட பதிவு சூப்பர்.

50 ஆவதுக்கு வாழ்த்துக்கள். ஒரு வருடம் அங்குமிங்குமாய் ஒரு வழியாய் கழிந்து விட்டதா?

Geetha Achal said...

தங்களுடைய 50வது பதிவுக்கு வாழ்த்துகள்...அ முதல் ஃ வரை கவிதை சூப்பர்ப்...இன்னும் இது போல பல குறிப்புகள் கொடுக்க வாழ்த்துகள் அக்கா...

அஹமது இர்ஷாத் said...

வாழ்த்துக்கள்

ஐம்பது....

ஆயிரமாக மாற

எதிர்பார்ப்புகளுடன்..

Mrs.Menagasathia said...

50 வது இடுகைக்கு வாழ்த்துக்கள்!!

2 மாதங்களில் 50 இடுகை மிக ஆச்சர்யம்.இன்னும் பல சதங்கள் அடிக்க வாழ்த்துக்கள்!!

அ ஆரம்பித்து ஃ முடித்த கவிதை சூப்பராயிருக்கு..

Deivasuganthi said...

50க்கு வாழ்த்துக்கள்.!!!!!

sarusriraj said...

வாழ்த்துக்கள்....

LK said...

அரைச்சதத்திற்கு வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

50 பதிவிற்கு வாழ்த்து சொல்வதோடு , வெற்றி கரமாக 50 பதிவுகளை வெளியிட்ட (நாங்க பட்ட கஷ்டம் உங்களுக்கு எங்க தெரிய போகுது ) உங்களுக்கு , நோக்கிய கேமரா மொபைல் பரிசு அறிவித்துள்ளேன் , வந்து எனது ப்ளாக்ல் ஒரு ஜெராக்ஸ் எடுத்து கொள்ளவும் (ஒரு நாலு நாள் ஆல் வல்லானா ஏன்னா அழிச்சாட்டியம் பன்றிக, வந்து நம்ம வீட்ல பாருங்க உங்களுக்கு ஒரு டுயுசன் இருக்கு )

வால்பையன் said...

அரைசதத்திற்கு வாழ்த்துக்கள்!

asiya omar said...

ஜெய்லானி,சித்ரா,மகி,ஸாதிகா,ஜலீலா,கீதா ஆச்சல்,அஹமது இர்ஷாத்,மேனகா,தெய்வசுகந்தி,சாரு,எல்.கே,மங்குனி அமைச்சர் அனைவரின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி,நன்றி.
வால் பையன் உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

Vijis Kitchen said...

Congrats. keep Blocking.