Monday, April 12, 2010

சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

சித்திரை மகளே வருக
சிரித்து மகிழவே வரம் தருக
சீரிய நோக்கம் சிறப்புறவும்
சின்ன சின்ன ஆசை நிறைவேறவும்
சிந்தனையில் தெளிவும்
சிக்கலின் அழிவும்
சினம் இல்லா வாழ்வும்
சிற்றின்ப வெறுப்பும்
சிறுக சிறுக சேமிப்பும்
சீமை சென்றாலும்
சீர்மிகு செந்தமிழ்நாட்டின்
சிறப்பை போற்றவே
சின்னதாய் வலையைப்பின்னி
சினேகமாய் வந்துலாவும் வலையுலக
சிங்கங்களே
,
உங்கள் அனைவருக்கும்
சித்திரைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.


--ஆசியா உமர்20 comments:

மனோ சாமிநாதன் said...

அன்பு ஆசியா!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

மங்குனி அமைச்சர் said...

எனாங்க இது ஒரே கலக்கலா இருக்கு ,
ஒரு பொது அறிவு போட்டி
இந்த கவிதையில் (?????? கவிதை தானே ????)
எத்தனை "சி" உள்ளது என்று சரியாக சொல்வோர் குழுக்கள் முறையில் தேர்தெடுக்க பட்டு முதல் பரிசாக 1000 பொற்காசுகளும் , இரண்டாம் பரிசாக " "சி" க்கலை கன்னுடுபிடித்த சீமான்" என்ற பட்டமும் . வழங்கப்படும், முதல பரிசை வழக்கம் போல் நம் ஜெயலானியும் இரண்டாம் பரிசை உயர்திரு , மாண்புமிகு , பெருமைமிகு நம் மங்குனி அமைசர் வழங்குவார் என்பதை தெரிவித்து கொள்கிறோம் .

Chitra said...

அருமையான கவிதை மூலம் வாழ்த்திய உங்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

@@மங்குனி அமைச்சர் said...

ஒரு பொது அறிவு போட்டி
இந்த கவிதையில் (?????? கவிதை தானே ????)
எத்தனை "சி" உள்ளது என்று சரியாக சொல்வோர் குழுக்கள் முறையில் தேர்தெடுக்க பட்டு முதல் பரிசாக 1000 பொற்காசுகளும் , இரண்டாம் பரிசாக " "சி" க்கலை கன்னுடுபிடித்த சீமான்" என்ற பட்டமும் . வழங்கப்படும்


@@asiya omar said...

இந்த பதிவின் முடிவில் பரிசு அறிவிக்கப்படும்,இன்னும் யாராவது கலந்து கொள்கிறார்களான்னு பார்ப்போம்.

மங்குனி அமைச்சர் said...

என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

sarusriraj said...

கவிதை மூலம் வாழ்த்திய தங்களுக்கு நன்றி

Mrs.Menagasathia said...

ஆசியாக்கா கவிதை மூலம் அழகா வாழ்த்து சொல்லிருக்கிங்க.உங்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

ஹைஷ்126 said...

அருமையான கவிதை. வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. அனைவருக்கும் என் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஆசியாஉமர் உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

athira said...

அழகான கவிதை வாழ்த்துக்கள் ஆசியா.

ஊசிக்குறிப்பு:
போட்டிக்குத் தயாரானேன், பின்பு பரிசுவழங்குவோரைப் பார்த்ததும் என் ஆசைக்கு விலங்கிட்டேன்.... சத்தியமாக எனக்குப் பரிசு வேண்டாம் ஆசியா, இதைவிட “அது” எவ்ளோ பெட்டர்... நான் சொக்கலேட்டைச் சொன்னேன்:).

asiya omar said...

எல்லோருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.வாழ்த்து சொன்ன அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றி.இரண்டு நாள் முக்கிய வேலை நிமித்தமாக என்னால் ப்ளாக்கிற்கு லீவு.சந்திப்போம்.
மனோ அக்கா,மங்குனி,ஜெய்லானி,சித்ரா,சாரு,மேனகா,சகோ.ஹைஷ்,அதிரா,ஸ்டார்ஜன் வருகைக்கு மிக்க நன்றி.ஜெய்லானிக்கும் மங்குனிக்கும் மீண்டும் வந்து பதில் சொல்கிறேன்.உங்களை நான் இப்ப நிறைய பேருக்கு அறிமுகப்படுத்த வேண்டியதுள்ளது,ப்ளாக் பற்றி விசாரிப்பதை விட உங்களை விசாரிப்பவர்களே அதிகம்.

ஜெய்லானி said...

@@@athira--//போட்டிக்குத் தயாரானேன், பின்பு பரிசுவழங்குவோரைப் பார்த்ததும் என் ஆசைக்கு விலங்கிட்டேன்.... சத்தியமாக எனக்குப் பரிசு வேண்டாம் ஆசியா, இதைவிட “அது” எவ்ளோ பெட்டர்... நான் சொக்கலேட்டைச் சொன்னேன்:).//

ஹி..ஹி..க்கி..கி..கீஈஈஈஈஈஈஈ.
இஞ்ஜி அதிகமா கடிபட்டது வாயில அதான் இப்படி,....மொப்பி.....

Jaleela Kamal said...

ஆசியா ஒரே கவிதை மழை, என்ன அமைச்சர் வீடு வீடா போய் பரிசு கொடுக்கிறீர்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், அல் அயினிலா, நேற்று உங்கள் பக்கம் ஓப்பனே ஆகல,
இன்று தான் பார்க்க முடிந்தது.

ஸாதிகா said...

'சி' வரிசையில் கவிதை பாடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துவிட்டீர்கள் ஆசியா.நல்லா இருக்கு

Vijis Kitchen said...

Happy Tamil New Year,

Your poem is superup.

Sashi said...

Ininiya Tamil puthandu nalvalthukkal .. Hope you had a great time.

மங்குனி அமைச்சர் said...

////asiya omar said...

நன்றி.ஜெய்லானிக்கும் மங்குனிக்கும் மீண்டும் வந்து பதில் சொல்கிறேன்.உங்களை நான் இப்ப நிறைய பேருக்கு அறிமுகப்படுத்த வேண்டியதுள்ளது,ப்ளாக் பற்றி விசாரிப்பதை விட உங்களை விசாரிப்பவர்களே அதிகம்./////


இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகலபத்திடீக , அதுல அறிமுகம் வேறையா , இதுக்கு ஒரு சர்தார்ஜி ஜோக் இருக்கு , அதாவது ஒரு சர்தார்ஜி ஒரு சினிமாவ டெயிலி போய் பாத்தானாம் அத பாத்தா ஒருத்தர் , ஏம்பா அந்த படத்த டெயிலி போய் பாக்குரன்னாம் , அதுக்கு சர்தார்ஜி சொன்னானாம் ................................................................................................. (இல்ல வேணாம் )

asiya omar said...

jaleela,shadiqah,viji,sashi thanks pa.tamil typing problem.it wiil take one more day to settle down here.