Saturday, April 17, 2010

மொஃதா பரிசு போட்டி முடிவு

மொஃதா பரிசுப்போட்டியில் கலந்து கொண்டவர்கள் நான்கே நபர்கள்.
1.ஜெய்லானி - முதல் பரிசு -சரியான பதில் சொன்னமைக்கு சபாஷ்-குடல் கத்திரிக்காய்
2.ஸாதிகா - அவர் ஜெய்லானியின் பதிலே சொல்லி இருந்தார் - இரண்டாம் பரிசு.
3.மேனகா -போட்டி கறி குழம்புன்னு பதில் - மூன்றாம் பரிசு
4.ஜலீலா - பதில் மட்டன் அவரைக்காய் , கலந்து கொண்டமைக்கு ஆறுதல் பரிசு.

இதோ சரியான பதில் சொன்ன ஜெய்லானியிக்கும், ஸாதிகாவிற்கும் பரிசு சுடச் சுட சூப்பரான திருநெல்வேலி அலவா.இது பாரம்பரியமிக்க 125 வருடமாக புகழ்பெற்ற கடையின் அல்வா.
முன்றாவது பரிசும்,ஆறுதல் பரிசும் பெற்ற மேனகா,ஜலீலாவிற்கு நெல்லை கோதுமை பனியம்(பனியாரம்)எங்க ஊர் ஸ்பெஷல்.பரிசு பெற்ற அன்புள்ளங்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.
-ஆசியா உமர்
24 comments:

Chitra said...

சே, வடை - இல்லை, இல்லை - அல்வா போச்சே! படங்கள் பார்த்ததும் நாவில் நீர் ஊருது........ பரிசு வாங்கியவர்கள், என்னுடன் ஷேர் பண்ணுங்கப்பா. இல்லைனா, என்னை விட்டு விட்டு சாப்பிடப் போகிற உங்களுக்கு வயிறு வலிக்கும்.

ஸாதிகா said...

நல்ல வேளை பரிசாக அதே மோஃதா உருண்டை கொடுக்காமல் அல்வா கொடுத்தீங்களே.தோழி நிஜ அல்வா எனக்கு ஜைலானிக்குத்தானே "அல்வா" கொடுத்தீங்க?

மங்குனி அமைச்சர் said...

என்னாது, இது என்ன போட்டி , எப்ப வச்சிங்க , இந்த போட்டி முடிவுல ஏதோ உள்குத்து இருக்கு, இதை நாங்கள் ஏற்றுகொள்ள மாட்டோம் ,

ஜெய்லானி said...

சபாஷ்!!!!!எனக்கே ஹல்வா வா ? !!.

ஜெய்லானி said...

பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்..

asiya omar said...

ஜெய்லானி,ஸாதிகா எல்லாரும் அல்வா கொடுக்கிறதுன்னு சொல்வாங்களே,நாமும் கொடுப்போமே பரிசாக அல்வாவை என்று இந்த ஏற்பாடு.இரண்டு பேருக்கும் நிஜ அல்வாதான்.அட்ரஸ் என் மெயில் ஐடிக்கு அனுப்பினால் அல்வா பார்சல் அனுப்பப்படும்.காரத்திற்கு மிக்ஸர் தரலாமுன்னு பார்த்தேன்,அல்வா கொடுப்பதின் அர்த்தம் மாறிப்போகுமேன்னு விட்டுட்டேன்.

asiya omar said...

சித்ரா உங்களுக்கு மட்டும் தனியாக ஓரு ப்லேட்.சரியா?

asiya omar said...

மங்குனி நீங்க வேற எனக்கு நோக்கியா மொபைல்,கேமரா பரிசு தந்திருக்கீங்க,எடுத்துக்கங்க ஒரு ப்ளேட்டை.நிறைய இருக்கு.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அடடா இந்த போட்டிவிவரமெல்லாம் எனக்கு தெரியாதே.. எங்கிட்ட சொல்லிருக்ககூடாதோ.. நானும் கலந்திருப்பேனே.. சே வடை போச்சே..

நல்வாழ்த்துக்கள் ஆசியா கையினால் பரிசு பெற்றவங்களுக்கு...

Mrs.Menagasathia said...

பணியாரம் சூப்பர்ர் அக்கா,அப்போ எனக்கு அல்வா கிடையாதா?????

sarusriraj said...

என்ன போட்டி எனக்கும் தெரியாது இருந்தாலும் எனக்கும் ஒரு பார்சல் அனுப்பிவிடுங்க.

asiya omar said...

ஸ்டார்ஜன் வலச்சரத்தில் மொஃதாவை போட்டு இருந்தீர்களே பரிசு விபரம் பார்க்காலையா?கருத்திற்கு நன்றி.

asiya omar said...

மேனு அல்வா தானே ப்ளேட்டில் இருக்கே.பங்கு கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

சாரு ,பார்சல் தானே அனுப்பிட்டாபோச்சு.மகிழ்ச்சி.

ஜெய்லானி said...

@@@மங்குனி அமைச்சர்--//என்னாது, இது என்ன போட்டி , எப்ப வச்சிங்க , இந்த போட்டி முடிவுல ஏதோ உள்குத்து இருக்கு, இதை நாங்கள் ஏற்றுகொள்ள மாட்டோம்//

ச்சே..ச்சே...அப்டி அழாதே மங்கு!!!. ஒரு புளியாங் கொட்டை அளவு தரேன். நல்ல புள்ளயா நாள் முழுக்க சப்பி சப்பி சாப்பிடுவியான். ச்சூ..ச்சூ..கண்னை தொடச்சுக்க.....

ஜெய்லானி said...

//மேனு அல்வா தானே ப்ளேட்டில் இருக்கே//

அநியாயம் , அக்கிரமம் . எங்க ரெண்டு பேருக்கு குடுத்துட்டு நைசா எல்லாருக்கும் தரீங்களா ? அடேய் மங்கு உள்குத்து நல்லா வேலைசொய்யுதுடோய்..

இதை நாங்கதான் தரனும்.அதான் சரி,,


மேனகாக்காவ் , பாதி உங்களுக்கு பாதி எனக்கு ஓக்கே !!!

ஜெய்லானி said...

@@@ Chitra --//சே, வடை - இல்லை, இல்லை - அல்வா போச்சே! படங்கள் பார்த்ததும் நாவில் நீர் ஊருது........ பரிசு வாங்கியவர்கள், என்னுடன் ஷேர் பண்ணுங்கப்பா. இல்லைனா, என்னை விட்டு விட்டு சாப்பிடப் போகிற உங்களுக்கு வயிறு வலிக்கும்//

நா கண்ணை மூடிகிட்டுதான் சாப்பிடுவேன். அப்ப எப்புடி கண்ணு படும்.

Geetha Achal said...

அடடே...எனக்கும் போட்டு நடந்தது தெரியாதே...சரி பராவயில்லை...எப்படியும் நம்ம ஆசியா அக்காகிட்ட அன்பாக எனக்கும் பரிசு கொடுங்க என்றால்..கண்டிப்பாக கிடைக்கும் தானே அக்கா...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அப்ப எனக்கு பரிசு கிடையாதா..

asiya omar said...

அல்வா பரிசு கொடுத்தாச்சு,அந்த ப்ளேட்டை யாரும் தொடாதீங்க,உங்க எல்லோருக்கும் நான் தனியாக அனுப்பி வைக்கிறேன்.ஜெய்லானி யாரும் பங்குக்கு வந்தா நான் பொறுப்பல்ல.

Deivasuganthi said...

நானும் கத்தரிக்காய்ன்னு (பாதி பதில்! என்ன கறுவாடுல கொஞ்சம் சறுக்கிட்டேன்)சொன்னேன் !!! எனக்கும் பரிசுல பங்கு வேணும்.

asiya omar said...

சுகந்தி உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.எது வேணும் அனுப்பி வைக்கிறேன்.

ஜெய்லானி said...

@@@Deivasuganthi --//நானும் கத்தரிக்காய்ன்னு (பாதி பதில்! என்ன கறுவாடுல கொஞ்சம் சறுக்கிட்டேன்)சொன்னேன் !!! எனக்கும் பரிசுல பங்கு வேணும்.//

@@@ asiya omar--//சுகந்தி உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.எது வேணும் அனுப்பி வைக்கிறேன்.//

//ஜெய்லானி யாரும் பங்குக்கு வந்தா நான் பொறுப்பல்ல.//


ஒன்னுமே புரியல உலகத்திலே என்னமே நடக்குது மர்மமாய் இருக்குது

Mrs.Menagasathia said...

//மேனகாக்காவ் , பாதி உங்களுக்கு பாதி எனக்கு ஓக்கே !!!// ஜெய்லானி அப்போ ஸாதிகா அக்காவுக்கு தரவேணமா....