Sunday, April 18, 2010

ஈசி மாங்காய் ஊறுகாய்

இப்ப மாங்காய் சீசன்.மாதா ஊட்டாத சாதத்தை மாங்காய் ஊட்டும்னு சொல்வாங்க.இது எங்க அண்ணன் வீட்டு தோட்டத்தில் உள்ள ஒட்டு மாங்காய்.அதைப்பார்த்தவுடன் ஊறுகாய் போடும் ஆசை வந்துவிட்டது.மாங்காயில் தான் சுலபமாக ஊறுகாய் போடலாமே.

தேவையான பொருட்கள் ; மாங்காய் -அரைகிலோ(சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்) ,உப்பு -1 டேபிள்ஸ்பூன் குவியலாய்,மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் குவியலாய், எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன்,கடுகு - 1 டீஸ்பூன் ,பெருங்காயப்பொடி - கால்ஸ்பூன்

நறுக்கிய மாங்காயுடன் உப்புத்தூள்,மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.


அதனை பாட்டிலில் வைத்து வெயில் ஒரு நாள் வைத்து எடுக்கவும்.மறுநாள் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு திரும்பவும் வெயிலில் வைக்கவும்.நன்றாக உப்பு மிளகாய்த்தூள் மாங்காயில் ஊறியிருக்கும்.


கடாயில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு வெடிக்க விட்டு பெருங்காயப்பொடி போடவும்.


ஊறிய மாங்காய் துண்டுகளை சேர்க்கவும்,கிளறவும்.அடுப்பை சிம்மில் 10 நிமிடம் வைக்கவும்.மாங்காய் ஊறுகாய் பக்குவமாக வெந்து இருக்கும்.எண்ணெய் மேல் வந்து இருக்கும்.ஆற வைக்கவும்.தயார் செய்த ஊறுகாயை ஒரு பாட்டிலில் எடுத்து வைக்கவும்.
சுவையான ஈசி மாங்காய் ஊறுகாய் ரெடி.பிடித்த அனைத்திற்கும் சைட் டிஷ் ஆக உபயோகிக்கலாம்.விரும்பினால் சிறிது வினிகர் சேர்க்கலாம்.நான வினிகர் சேர்க்கவில்லை.நீண்ட நாட்கள் வைக்க ஃப்ரிட்ஜில் வைக்கவும்.குறைந்த நாட்களில் காலியாகிவிடும் என்றால் வெளியே வைத்தே உபயோகிக்கலாம்.
-ஆசியா உமர்.


24 comments:

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஹைய்யா எனக்கு பிடிச்ச மாங்கா ஊறுகாய். பார்த்தாலே எச்சி ஊறுது. சாப்பிட்டா சுவை அதிகமா இருக்கும்.

ஜெய்லானி said...

//நறுக்கிய மாங்காயுடன் உப்புத்தூள்,மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்//

இதே போதும் இப்பவே ஜொள்ள்ள்ள்ள்ள்ல்

ஜெய்லானி said...

ஊறுகாய் ரெஸிபி அருமை. ஆமாம் மாங்கா மடையன்னு சொல்றாங்களே அதை வச்சி எதாச்சும் செய்யலாமுங்கலா ?. ஏன்னு கேட்டா நம்ம கிட்ட ஒரு ’மங்கு’ இருக்குது அதாங்கேட்டேன்.

Mrs.Menagasathia said...

ஐய்யோஓஓஓஒ அக்கா அப்படியே நாக்குல எச்சி ஊறுது.இந்த ஊறுகாய் மட்டும் இருந்தால் போதும் அப்படியே சோறு சாப்பிடுவதுபோல் சாப்பிடுவேன்.ம்ம்ம்ம் வேறென்ன ஜொள்ளு விடுறேன்....

Jaleela said...

ஸ்ச்ச் ரொம்ப பிடிக்கும், அப்படியே கூட சாப்பிடுவேன்.

நானும் அடிக்கடி மாங்காய் கிடைக்கும் காலங்களில் செய்வது தான்.

பாட்டிலும் போட்டு வைக்க எல்லாம் பொறுமை கிடையாது, செய்து உடனே காலியாகிடும்.

ஸாதிகா said...

கடுகு,வெந்தயப்பொடி சேர்க்காமல் செய்த ஊறுகாய்..செய்து டேஸ்ட் பண்ணிப்பார்ப்போம்.

ஸாதிகா said...

ஜெய்லானி இந்நேரம் உங்கள் பதிவைப்பார்த்து ஒரு பயந்தசுபாவம் கொண்ட ஜீவன் நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கும்.(அந்த நூடுல்ஸ் வைத்து ஆசியா அல்லது நம்ம ஆல் இன் ஆல் கிட்டே ஒரு ரெசிப்பி கேட்டுடாதீங்க.தாங்காது)

JAIVABAIESWARAN said...

சகோதரி, பரமத்தி உறவினர் வீட்டு மரத்தில் இருந்து என் துணைவியார் 5 மாங்காய் கொண்டுவந்தார்கள். உங்கள் ரெசிபியைப்பார்த்து மனைவியிடம் சொன்னேன்! உடனே, நாளை இதைப்பார்த்து செய்து விடுங்கள் என்று சொல்லிவிட்டார்.உங்கள் பிளாக்கைப்பார்த்த எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்!

asiya omar said...

ஸாதிகா ஊறுகாய் போடுவதில் நிறைய முறை இருக்கு,இது ஒரு ஈசி முறை.செய்து பாருங்க தோழி.

asiya omar said...

ஜலீலா மாங்காய் அதுவும் புளிப்பிலலாத மாங்காய் என்றால் நானும் அப்படியே சாப்பிடுவேன்.

asiya omar said...

சகோ.ஜெய் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.பரமத்தி என்றால் சேலம் பரமத்தி வேலூரா?

Ammu Madhu said...

நான் நேற்று தான் ஆவக்காய் போட்டேன்.இதுக்குள்ள பத்து தரம் திறந்து திறந்து பாத்துட்டேன் ஊரிருச்சானு.ஊறுவதற்கு நான்கு நாட்கள் ஆகும் என்று தெரிந்தும் என்னால் காக்க முடியவில்லை.எனக்கு மாங்காய் அவ்வளவு பிடிக்கும்.உங்க ஊறுகாய் நான் பொதுவாக போடும் முறையை விட வித்யாசமாக உள்ளது.இனிக்கே செஞ்சு பாத்துடறேன்.வாய் ஊருது உங்க ஊறுகாய் பார்க்கும் பொழுது.கலக்கல்.

Chitra said...

ச்சச்ச்ச்ஸ்.......நாவில் நீர் ஊறி...... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......!

Deivasuganthi said...

உப்பு மிளகாய்த்தூள் கலந்துட்டா, அப்புறம் எங்க ஊற விடறது. எல்லாத்தையும் அப்படியே சாப்பிட்டு முடிச்சுருவேன். இது பார்க்கவே வாயூறுதுங்க.

asiya omar said...

அம்மு,சித்ரா,சுகந்தி மாங்காய் என்றால் பிடிக்காதவர்களை பார்ப்பது அரிது தான் போல.கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

மனோ சாமிநாதன் said...

அன்பு ஆசியா!

மாங்காய் ஊறுகாய் வெந்தயப்பொடி சேர்க்காமல் புதுமாதிரியாக இருக்கிறது. வீணாக ஆசையைக் கிளப்பி விட்டு விட்டீர்கள்! ஊரில் இந்த நேரம் மாவடு, மாங்காய் என்று பிரமாதப்பட்டுக் கொண்டிருக்கும். உருண்டை மாங்காய், நெத்து மாங்காய் என்று பார்த்துப் பார்த்து வாங்குவேன். ஏக்கமாக இருக்கிறது!

மங்குனி அமைச்சர் said...

///மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் குவியலாய், எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன்,கடுகு - 1 டீஸ்பூன் ///கரட்டா மாங்காய் சீசன்ல , போட்ருக்கிங்க சூபர்.
அப்புறம் இந்த டீஸ்பூன்,டேபிள்ஸ்பூன் ஓகே , அந்த "டீ" , டேபிள் ரெண்டையும் ஏன்னா பண்ணனும்னு நீங்க சொல்லலையே

asiya omar said...

மனோ அக்கா கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

அமைச்சர் கேள்விக்கு ஜெய்லானி வந்து பதில் சொல்வார்.

Sashi said...

Pakkarappovey mouth watering, I like all ur recipes. U cook most of my fav dishes. Pesama unga vitukku vanthu guesta 10 days nalla sapidalamnu irrukku ?

asiya omar said...

sashi you are most welcome,but my cooking used to be always simple ,whatever i have i use to cook with that,not like yours pa.(high standard)

அன்னு said...

ஆஸியாக்கா,
சரியா எவ்வளவு நாள்னு பாக்காம 4 நாளுக்கு மேல ஆயிடுச்சு. இன்னிகுதான் எண்ணில போட்டு வேக விட்டென். எந்த நிலைமைல இருக்கும்னு தெரியாது.ஹெ ஹெ... ஒரிசால விதவிதமா ஊறுகாய் செய்வாங்க. இப்ப நான் இதை காட்டினா கடுகு என்மேலதான் வெடிக்கும்

:( பாக்கலாம். !!

asiya omar said...

எம்மா அன்னு நீ ஏதாவது செய்துட்டு ஒரியாக்காரர்கிட்ட என்னை போட்டு கொடுக்காதே,ஆமாம் பக்குவமாக செய்து கொடு,எங்களுக்கு இங்கு ரே -னு ஒரு ஒரிஸ்ஸாகாரங்க ஃபேமிலி ஃப்ரெண்டு,பிரச்சனை என்னன்னால் அந்த அம்மா சிரிக்க மட்டும் தான் செய்யும்,ஆங்கிலம் அவ்வளவா வராது.அவங்க பையன் சிவான்ஸ் தான் என் பெட்.நான் சிச்சயம் அவங்க கிட்ட கேட்டு ஒரிய ரெசிப்பி போடுறேன்.

அன்னு said...

//எம்மா அன்னு நீ ஏதாவது செய்துட்டு ஒரியாக்காரர்கிட்ட என்னை போட்டு கொடுக்காதே//
ஹிஹிஹி....
//நான் சிச்சயம் அவங்க கிட்ட கேட்டு ஒரிய ரெசிப்பி போடுறேன். //
விதவிதமா வடகம், இனிப்பு ஊறுகாய், பாலில் அல்லது பாலேட்டில் செய்யிற பட்சணம்னு ஏகபட்ட ஐட்டம் இருக்கு அவங்ககிட்ட....கேளுங்க. அதே போல அவங்க மட்டும்தேன் இந்தியாவுலயே ரொம்ப கம்மியா ஸ்பைஸ் யூஸ் பண்றவங்க. ட்ரை பண்ணுங்க. :))