Monday, April 19, 2010

தக்காளி ரசம்

தக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம்.


தேவையான பொருட்கள் ;தக்காளி - பெரியது -5 ,தண்ணீர் - முக்கால் லிட்டர், முழு மிளகு - 2 டீஸ்பூன்,சீரகம் -ஒன்றரை டீஸ்பூன்,மஞ்சள்தூள் -கால்ஸ்பூன்,பெருங்காயப்பொடி - கால்ஸ்பூன். பூண்டு -10 பல (தோலுடன்) எண்ணெய் - 4 டீஸ்பூன்,கடுகு -1டீஸ்பூன்,உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன்,மிளகாய் வற்றல் - 3 ,கருவேப்பிலை,மல்லி இலை -சிறிது ,உப்பு - தேவைக்கு.
தக்காளியை சிறியதாக நறுக்கி கைவிட்டு நொருங்க பிசைந்து வைக்கவும்.முக்கால் லிட்டர் தண்ணீர் சேர்த்து தேவைக்கு உப்பு சேர்க்கவும்.

முழு மிளகு,முழு சீரகம்,பூண்டு சேர்த்து பரபரவென்று தட்டி வைக்கவும்.


வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுத்தம்பருப்பு,வற்றல் ,கருவேப்பிலை தாளித்து இடித்து வைத்த மிளகு,சீரகம்,பூண்டு கலவையை சேர்த்து நன்கு வதக்கவும்.மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் சேர்க்கவும்,சிறிது வதக்கவும்.தக்காளி கரைசலை சேர்க்கவும்.தீயை மிதமாக வைக்கவும்.நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.நுரை கூடி வரும்.அடுப்பை அணைக்கவும்.


கமகமக்கும் சுவையான தக்காளி ரசம் ரெடி.இதனை ப்லைன் சாதத்துடன் வெறும் பொரித்த வெங்காய முட்டையுடன் ,அப்பளத்துடன் சாப்பிட்டாலே அமோகமாக இருக்கும்.அப்படியே சூப் மாதிரியும் குடிக்கலாம்.

எனது தக்காளி புளி ரசம் ரெசிப்பியைக்காண அறுசுவையை கிளிக்கவும்.

--ஆசியா உமர்.

17 comments:

Chitra said...

my choice is tomato! yummy!

Sashi said...

Thakkali rasam ennoda favorite !! I drink as it is sometimes. Will try yours soon.

ஜெய்லானி said...

நான் இதை தனியா எடுத்து கோப்பையிலேயே குடித்து விடுவேன்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

தக்காளி ரசம் செம் டேஸ்டா இருக்கும்.. அப்படியே குடித்துக்கொண்டே இருப்பேன்.. என் மனைவி நல்லா ரசம் வைப்பாங்க..

LK said...

nammaku araichi vitta rasamthan pidikum ithu pidikaathu

Jaleela said...

ஓ இங்கும் ரசமா? ரொம்ப‌ ந‌ல்ல‌ இருக்கு ஆசியா ,ம‌சாலா த‌ட்டி சேர்த்தாலும் சுவை அபார‌ம்.

Akashkrishna said...

ஒரு சிறிய பச்சைமிளகாயையும் பூண்டுடன் ஸேர்தது இடித்தால் இன்னும் வாசனை ஊரை கூட்டும்
சூப்பர் கீப் இட் அப்

மங்குனி அமைச்சர் said...

இது வந்து ஜலீலா மேடம் நடந்த சொதப்பல்ல அவுக ரொம்ப டெண்சனாகிட்டாக , அது நால

ஆசிய ஓமர் மேடம் , எது செஞ்சாலும் ஒழும்கா செய்ங்க , பாருங்க தலகரி குழம்புல ஒரு கண்ண விட்டிக , மட்டன் பிரைல ஒரு கைய விட்டுக்க , கிட்னி பிரைல ஒரு கிட்னிய விட்டிக , ஏற்கனவே மூளை வேற இல்ல , இப்ப பாருங்க இந்த ஜெய்லானி பீசு கொலம்பி தள்ளுது , இனிமே ஒரே சான்சு தான் மொத்தம்மா பாக்கி இருக்க ஜெயலானிய வச்சு ஒரு பிரியாணி போட்ட்ருங்க

மங்குனி அமைச்சர் said...

// Chitra said...

my choice is tomato! yummy!//


மேடம் இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல , தக்காளி , தக்காளி ரசம் ரொம்ப கஷ்டமான விஷயம் அத இவுக போட்டாக , அத நீங்க பாரட்டுரிக்க , கொஞ்சம் பாத்து , முதல்ல போய் "சந்திரலேகா" படம் பாத்தத எழுதுங்க

மங்குனி அமைச்சர் said...

// ஜெய்லானி said...

நான் இதை தனியா எடுத்து கோப்பையிலேயே குடித்து விடுவேன்///


எதுல இருந்து எத தனியா எடுப்ப ? உனக்கே ஒத்த கையி , அடுத்த பிரியாணி நீ தாண்டி , போய் ஜலீலா மேடம் ப்ளாக் பாரு

அன்புடன் மலிக்கா said...

என்ன ஜலீக்காவும் நீங்களும் ரசமென்னும் புளீயானம் செய்திருக்கீங்க

சூப்பர் என் பசங்களுக்கு பிடித்தது.

நேரம்கிடைக்கும்போது இதையும் பாருங்கள்

http://fmalikka.blogspot.com/2010/04/blog-post.html

இதையும்
http://niroodai.blogspot.com/2010/04/blog-post_21.html

asiya omar said...

சித்ரா,சசி மிக்க நன்றி.
ஜெய்லானி,ஸ்டார்ஜன்,ஜலீலா மொல்ல நன்றி.
எல்.கே அரைத்து விட்ட ரசம் யாருக்குத்தான் பிடிக்காது?
ஆகாஷ் நானும் மிளகாய் போடுவது வழக்கம்.
மங்குனி ரொம்ப கவலைப்படாதிங்க.
மலிக்கா கருத்திற்கும் அழைப்பிற்கும் மகிழ்ச்சி.

Geetha Achal said...

ஆஹா...சூப்பர்ப்..எனக்கு மிகவும் பிடித்த தக்காளி ரசம்..அப்படியே சாப்பிட்டுவிடுவேன்...

Mrs.Menagasathia said...

மிளகு சீரகத்தை தட்டி வதக்கி சேர்த்ததில்லை.அப்படியே புளிகரைசலில் சேர்த்துவிடுவேன்.உங்களின் செய்முறை சூப்பரா இருக்கு.அதுவும் தக்காளி ரசம் எனக்கு பிடித்த ஒன்று...

Mrs.Menagasathia said...

உங்கள் முறாஇப்படி இன்று மிளகு,சீரகத்தை வதக்கி வைத்து தக்காளி ரசம் செய்தேன்.நான் செய்யும் ரசத்தை விட வித்தியாசமா நல்லாயிருந்தது ஆசியாக்கா.நன்றி உங்களுக்கு!!

asiya omar said...

கீதாஆச்சல்,மேனு கருத்திற்கு மிக்க நன்றி.
மேனு ரசம் செய்து பார்த்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

goma said...

நாளைக்கு இந்த ரசம்தான் ....சாப்பிட வந்திடுங்கோ