Wednesday, April 21, 2010

மின்மினியின் குழிப்பணியாரம்

இது சகோதரி மின் மினி ப்ளாக்கை பார்த்து செய்த கோதுமை மாவு குழிப்பணியாரம்.(சிறிது மாற்றத்துடன்)
தேவையான பொருட்கள் : கோதுமை மாவு - ஒரு கப்,முட்டை - 1,தேங்காய்ப்பால் - 1கப்(கரைக்க தேவைக்கு),சீனி - 6 டேபிள்ஸ்பூன்,வெனிலா எசன்ஸ் - 2 சொட்டு ,சோடா உப்பு -ஒரு பின்ச்.அனைத்தையும் சேர்த்து பீட்டரில் அடித்தும் அல்லது கையால் கரைத்தும் எடுக்கலாம்.

குழிப்பணியாரச்சட்டியில் லேசாக எண்ணெய் தடவி மாவை கரண்டி கொண்டு குழிகளில் விடவும்,மூடவும்.வெந்ததும் திருப்பி விடவும்,விரும்பினால் பிரட்டும் பொழுது நெய்யோ அல்லது எண்ணெய் சிறிது சேர்க்கலாம்.


சுவையான இலகுவாக செய்யக்கூடிய கோதுமை மாவு குழிப்பணியாரம் ரெடி.இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்,ஸ்கூலிற்கு ஸ்னாக்ஸ் மாதிரி கொடுத்து அனுப்பலாம்.

-ஆசியா உமர்.

15 comments:

Ammu Madhu said...

முட்டை இல்லாமல் செய்ய முடியுமா?

Cool Lassi(e) said...

Yummy Paniyaram. I love the wheat version of it dear!Romba pramadham!

Chitra said...

yummy!!!!!!!

asiya omar said...

அம்மு முட்டை இல்லாமல் தாராளமாக செய்யலாம்.வாழைப்பழம் வறுதத முந்திரி சேர்த்தும் செய்யலாம்.

asiya omar said...

thanks chitra,cool lassie.

LK said...

வழக்கம் போல் சுவையா இருக்கும்

LK said...

//சுவையான இலகுவாக செய்யக்கூடிய கோதுமை மாவு குழிப்பணியாரம் ரெடி.இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்,ஸ்கூலிற்கு ஸ்னாக்ஸ் மாதிரி கொடுத்து அனுப்பலாம்//

காலைல இது சரி வருமான்னு தெரியல ஆனால் மாலை நேர சிற்றுண்டிய இருக்கும் ..
ஒரு சின்ன சந்தேஹம். தப்பா நினைக்காதீங்க, நீங்க முட்டை சேர்க்காம எதுவும் பண்ண மாட்டீங்களா???

HARIKA said...

யூசுவலா எங்க வீட்டில் இதை செய்வாங்க தான். இருந்தாலும் நீங்க எழுதிய வகையில் சூப்பர்.

Mrs.Menagasathia said...

சூப்பர்ர் பணியாரம்!!

ஜெய்லானி said...

//ஒரு சின்ன சந்தேஹம். தப்பா நினைக்காதீங்க, நீங்க முட்டை சேர்க்காம எதுவும் பண்ண மாட்டீங்களா???//

ஸார் தப்பா நினைக்காதீங்க காப்பி டீயில முட்டை சேர்க்க மாட்டோம் .

LK said...

@ஜெய்லானி

சந்தோசம்


உங்க அளவுக்கு இல்லாட்டியும் நானும் சும்மா ஒரு முயற்சி பண்ணி இருக்கேன் பாருங்க http://lksthoughts.blogspot.com/2010/04/blog-post_24.html

athira said...

சூப்பர் பணியாரம். குண்டுத்தோசைபோலவே இருக்கு.

Smiple and nice.

மின்மினி said...

ஆஹா... நான் செய்த கோதுமை பணியாரத்துக்கு உங்களால் அங்கீகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி ஆசியாக்கா.

asiya omar said...

அதிரா கருத்திற்கும்,வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி.தொடர்ந்து வாங்கோ.

asiya omar said...

நன்றி மின்மினி. ஈசியாக இருந்ததால் செய்து பார்த்தேன்,பிள்ளைகளுக்கு ரொம்ப பிடித்து விட்டது.இனி அடிக்கடி செய்வேன்.