Saturday, April 24, 2010

முள்ளானம்

எங்க ஊரில் மட்டன் எழும்பு சூப்பை சாதத்துடன் சாப்பிடும் வகையில் சமைத்ததை இப்படி தான் சொல்வது வழக்கம்.

தேவையான பொருட்கள் ;ஆட்டு எழும்பு - அரைக்கிலோ,வெங்காயம்- 1,தக்காளி -1,இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2டீஸ்பூன்,மல்லி கருவேப்பிலை -சிறிது,தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,முந்திரி பருப்பு - 4, மல்லித்தூள் -2 டீஸ்பூன் மிளகுத்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,சீரகத்தூள் - முக்கால் டீஸ்பூன்,மஞ்சள் தூள் - முக்கால் டீஸ்பூன்,நல்ல எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,உப்பு - தேவைக்கு.

எலும்பை சுத்தமாக கழுவி எடுத்து கொள்ளவும்.


வெங்காயம்,தக்காளி,இஞ்சிபூண்டு,மசாலாவகை,மல்லி இலை சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.



குக்கரில் எழும்பை போட்டு,அதனுடன் அரைத்த விழுதையும்,தேவைக்கு உப்பும் சேர்க்கவும்.எலும்பு மூழ்கும் அளவு தண்ணீர் சேர்க்கவும்.

கொதிக்க வைக்கவும்,பின்பு குக்கரை மூடி சிம்மில் வைத்து முக்கால் - ஒரு மணி நேரம் சிம்மில் வைக்கவும்.



குக்கரை திறந்தால் எழும்பு வெந்து இப்படி இருக்கும்.



பின்பு அது கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.



தனியாக ஒரு வெங்காயம் கட் செய்து கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் வதக்கி,கருவேப்பிலை சேர்த்து சிவற வதக்கி குக்கரில் உள்ள ஆனத்தில் கொட்டவும்.குழந்தைபெற்றவர்களுக்கும் இதனை செய்து கொடுக்கலாம்.


சுவையான சத்தான முள்ளானம் ரெடி.ப்ளைன் சாததுடன்,முள்ளானம்,பொரித்த கறி.கீரை கூட்டு,அவித்த முட்டை,பொரித்த அப்பளம்,கடலை துவையல் வைத்து சாப்பிட அமர்க்களமாக இருக்கும்.


-ஆசியா உமர்.









18 comments:

LK said...

வழக்கம் போல் நோ கமெண்ட்ஸ் . நடத்துங்க

asiya omar said...

எல்.கே.வருகைக்கு நன்றி.மகிழ்ச்சி.உங்களுக்காகவே எடுத்த குறிப்பை போட்ட பின்பு இனி வெஜ் குறிப்பு தான்.ஆனால் அதுவும் இஸ்லாமிய சைவமாகத்தான் இருக்கும்.

LK said...

ரொம்ப நன்றி ஆஸியா இஸ்லாமிய சைவமா இருந்த என்ன.. நல்ல இருந்த செஞ்சு பாக்கவேண்டிதன்

ஹரீகா said...

அருமை !! இதை பாராட்டவுக்கோ, சப்பாதிக்கோ தொட்டுக்கொள்ள சுவையா இருக்கும்லக்கா. இங்கு கிடைக்கும் "குப்ஸ்" க்கும் நல்லா இருக்கும் என்றே தோன்றுகிறது.

அன்புடன் மலிக்கா said...

சூப்பர் முள்ளானம்..செய்துடவேண்டியது இன்னக்கி..

ஓட்டும் போட்டாசி..

மின்மினி said...

எங்கூட்டலயும் இப்படித்தான் பண்ணுவோம். முள்ளானம் ரொம்ப நல்லா வச்சிருக்கீங்க ஆசியாக்கா

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

எங்கம்மாவும் நன்னியும் (பாட்டி) இதேமாதிரி செய்வாங்க.. முள்ளானம் இடியாப்பம், கொழுக்கட்டை, தக்கடிக்கு ரொம்ப டேஸ்டா இருக்கும். எங்க நன்னி அருமையா செஞ்சித்தருவாங்க.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நன்னி= அம்மம்மா.

asiya omar said...

ஹரீகா கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.ஆமாம்பா,மீதியானால் இரவு சப்பாத்தி,பரோட்டா,தோசைக்கும் நல்ல இருக்கும்.ஏன் பட்டான் ரொட்டிக்கும் அருமையாக இருக்கும்.

asiya omar said...

மலிக்கா,மின்மினி,ஸ்டார்ஜன் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி.

Mrs.Menagasathia said...

முள்ளானம் பெயரே வித்தியாசமா இருக்கு...நாங்க எலும்பு குழம்புன்னு சொல்லுவோம்.மிகவும் அருமையாக இருக்கு.ஒரு ப்ளேட் பார்சல் ப்ளீஸ் ஆசியாக்கா...

asiya omar said...

மேனு மீனில் முள்ளுன்னு சொல்ற மாதிரி மட்டன் எலும்பையும் முள்ளு சொல்வது வழக்கம்.அதனால தான் முள்ளானம்.

athira said...

ஆசியா சூப்பர்.... படத்தைப் பார்த்தவுடந் நாவூறி விட்டது....

மங்குனி அமைச்சர் said...

ஏன் மேடம், சாப்பிடும் போது முள்ளு குத்திடாது ?
ஓகே, ஓகே செருப்பு போட்டுகிட்டு சாபிட்றேன்

(அருமையா உள்ளது )

asiya omar said...

மங்குனி அமைச்சர் said...
ஏன் மேடம், சாப்பிடும் போது முள்ளு குத்திடாது ?
ஓகே, ஓகே செருப்பு போட்டுகிட்டு சாபிட்றேன்

(அருமையா உள்ளது )

பாராட்டிற்கு மகிழ்ச்சி.

Chitra said...

mouth-watering...... super!

அன்னு said...

ஸலாம் ஆஸியாக்கா,

ராமநாதபுரத்தில் படிக்கறப்ப சாப்பிட்டதுதான் நினைவுக்கு வருது. அருமையான ஆணம். இன்னும் காரமா இருக்கும். நான் எலும்பு மட்டும் இல்லாம மட்டன் இறைச்சியும் சேர்த்து செஞ்சேன். சூப்பரா இருக்கு. நன்றி.

asiya omar said...

அன்னு செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி,நன்றி.