Monday, April 26, 2010

சரவணபவன் பீன்ஸ் பொரியல்

பீன்ஸ் நல்லதாக பார்த்து வாங்கி இரண்டு விளிம்பையும் கிள்ளி விட்டு நார் எடுத்து கழுவி நீள் வாக்கில் இப்படி நறுக்கி கொள்ளவும்.
தேவையான பொருட்கள் எடுத்துக் கொள்ளவும்.பீன்ஸ் - 200 கிராம்,எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்,வெங்காயம் -1,காய்ந்த மிளகாய் - 2,பூண்டு பல்-1(விரும்பினால்),சீரகம் -அரைஸ்பூன்,மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்,தேங்காய் துருவல்- 2 டேபிள்ஸ்பூன்,கருவேப்பிலை -2இணுக்கு,உப்பு -தேவைக்கு

மிள்காய் வற்றல்,சீரகத்தை மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்,அதனுடன் தேங்காய் துருவல் , அரிந்த பூண்டு சேர்த்து பல்ஸில் 3 சுற்று சுற்றவும்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,கருவேப்பிலை,வற்றல் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி,பீன்ஸ் சேர்த்து கிளறி,உப்பு,மஞ்சப்பொடி சேர்த்து பிரட்டவும்.சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேக விடவும்.


நல்ல மசுமையாக வெந்ததும் திறந்து தேங்காய் விழுதை சேர்த்து பிரட்டவும்.ஒன்று சேர்ந்து மணம் வரவும் அடுப்பை அணைக்கவும்.விரும்பினால் மல்லி இலை கட் செய்து சேர்க்கவும்.

சுவையான சத்தான சரவணபவன் பீன்ஸ் பொரியல் ரெடி.பின்குறிப்பு : பீன்ஸை நீளவாக்கில் கட் செய்து பொரியல் வைத்தால் ருசி மாறுதலாக இருக்கும்.

--ஆசியா உமர்.

31 comments:

LK said...

@ஆஸியா

சைவ குறிப்பு போட்டதற்கு நன்றி

LK said...

அது என்ன சரவணபவன் பீன்ஸ் ??
இதுக்கு எங்க பக்கத்துல வேற பேரு சொல்லுவாங்க யோசிச்சு சொல்றேன்

asiya omar said...

எல்.கே அங்க பீன்ஸை இப்படி நீளவாக்கில் கட் செய்து பண்ணுவதால் இந்த பெயர்,சும்மா அட்ராக்‌ஷனுக்கு தான்.

Mrs.Menagasathia said...

நல்ல பச்சை கலரில் சூப்பராயிருக்குக்கா...

sarusriraj said...

பார்கும் போதே சூப்பரா இருக்கு , செய்து பார்கிறேன்.

Chitra said...

தேங்காய் துருவலை தூவி, சமைப்பேன். நீங்கள் சொல்லியது போல, அரைத்து விட்டு அடுத்த முறை ட்ரை பண்றேன். Thank you.

Geetha Achal said...
This comment has been removed by the author.
asiya omar said...

மேனகா,சாரு,கீதா நன்றி.
சித்ரா தேங்காயை சும்மா சுற்று தான் சுற்ற வேண்டும்,பர பரன்னு தான் இருக்கணும்.

LK said...

பருப்பு உசிளினு சொல்லுவாங்களே அதுவும் இதுவும் ஒன்னா??

asiya omar said...

எல்.கே பீன்ஸ் உசிலி அது வேற ரெசிப்பி,அதற்கு க.பருப்பு ஊறவைத்து,சீரகம்,வற்றல்,உப்பு சேர்த்த்து பரபரன்னு அரைத்து ஆவியில் வேக வைத்து உதிர்த்து இந்த பீன்ஸ் உடன் சேர்த்து செய்வதற்கு தான் பீன்ஸ் பருப்பு உசிலின்னு பேரு.

Cool Lassi(e) said...

Yummy! Saravana Bhavan is my favorite Indian restaurant and I love this beans poriyal!

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Deivasuganthi said...

எனக்கும் french cut beansதான் பிடிக்கும். இங்கே frozenல கிடைக்கும்.

மங்குனி அமைச்சர் said...

உங்களது என்ன சரவணபவன் பீன்ஸ் டிஷ் அருமை (????@@@????)

asiya omar said...

தெய்வசுகந்தி,அமைச்சர் உங்கள் கருத்திற்கு மகிழ்ச்சி.

Aruna Manikandan said...

First time here....
Beans poriyal looks delicious..

ArunaManikandan
http://ensamayalkuripugal.blogspot.com

asiya omar said...

thanks aruna for your first visit and for the encouraging comment.

Jaleela said...

பீன்ஸ் பொரியல் பச்சை நிறத்தில் உடடே எடுத்து சாப்பிடும் வண்ணம் இருக்கும், அடுத்த முறை முயற்சி செய்து பார்க்க வேண்டியது தான்.
என்னை தவிர பிள்ளைகள் பின்ஸ் பொரியல் சாப்பிடுவதில்லை, பீன்ஸை வேறு எப்படியாவது தான் செய்து கொடுப்பது.

asiya omar said...

கருத்திற்கு மகிழ்ச்சி ஜலீலா,இங்கே மகள் தவிர நாங்கள் முவரும் சாப்பிடுவோம்.

vanathy said...

ஆசியா அக்கா, பார்க்கவே சாப்பிட வேணும் போல ஆவலைத் தூண்டும் படங்கள். அருமை.

asiya omar said...

நன்றி வானதி.ஒருமுறை செய்து பாருங்க.

மகி said...

Will try this soon! :)

asiya omar said...

thanks mahi.hope u like it.

மகி said...

ஆசியாக்கா, இன்று உங்க சரவணபவன் பீன்ஸ் பொரியல் செய்தேன்..சூப்..ப்பர்ர்ர்ர் !! எங்களுக்கு ரொம்ப பிடிச்சது..ஐயர் வீட்டு பொரியல் மாதிரி இருக்குன்னு என் கணவர் சொன்னார்!! நன்றி!
போட்டோ எடுத்திருக்கேன்..எப்படி உங்களுக்கு அனுப்பன்னு தெரில! :)

asiya omar said...

மிக்க நன்றி மகி,உங்களுக்கு பதில் மெயில் செய்திருக்கேன் பாருங்க.சகோ.ஹைஷ் என்னோட முருங்கைக்காய் பொரியல் செய்து படம் அனுப்பியிருந்தார்.அதனை என்னோட முருங்கைக்காய் பொரியலில் இணைத்துள்ளேன்.சென்று பார்க்கவும்.

Geetha Achal said...

உங்களுடைய குறிப்பினை பார்த்து செய்தாச்சு...சூப்பர்ப்...குறிப்புக்கு நன்றி...இந்த லிங்கினை பார்க்கவும்...http://geethaachalrecipe.blogspot.com/2010/06/blog-post.html

asiya omar said...

நன்றி கீதாஆச்சல்,உங்கள் ப்ளாக் பார்த்தேன் அருமை.மனோ அக்காவும் செய்து அவங்க தளத்தில் போட்டு இருந்தாங்க,மிக்க மகிழ்ச்சி.

Nithu Bala said...

Dear, I get to see this recipe in Mahi's blog..this sounds very nice..have never tried this way..thanks for sharing..drop on at my blog when you get time..
www.nithubala.com

asiya omar said...

thanks nithubala,sure.with great pleasure.

சாருஸ்ரீராஜ் said...

அக்கா உங்கள் பீன்ஸ் பொரியல் செய்தேன் , ரொம்ப நல்லா இருந்தது , என் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டாங்க, இப்போ வாரம் ஒரு முறை பீன்ஸ் உங்கள் மெத்தட்ல தான் செய்கிறேன். இது மாதிரி கத்திரிகாயும் செய்து பார்த்தேன் சூப்பர். எங்க அம்மாவிடம் சொல்லி அவுங்களும் செய்து பார்த்துவிட்டு பாராட்டினார்கள்

Vijiskitchencreations said...

Asiya. நல்ல ரெசிப்பி. எங்க ஊரில் இப்படி தான் எல்லா பொரியலகளுக்கும் போடுவாங்க. துறுவிய தேங்காய், சீரகம், (பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை ) இது வேண்டுமானால் சேர்த்துகொள்ளலாம். கோஸ், சின்ன இடி சக்கை,மரவள்ளி கிழங்கு, பீன்ஸ், கேரட், காராமணி போன்ற எல்லாவற்றிற்கும் நாங்க இப்படிதான் செய்வோம். எனக்கு ரொம்ப பிடித்த ரெசிப்பி.