Tuesday, April 27, 2010

மினி இட்லி டிப்

மினி இட்லியும் பாசிப்பருப்பு சாம்பாரும் ரொம்ப அருமையாக இருக்கும்.அதையும் இப்படி டிப் செய்து சாப்பிட்டால் ஆகா என்ன ருசிதான்.
தேவையான பொருட்கள் ;

இட்லி மாவு அரைக்க:மூன்று பங்கு அரிசி ,ஒரு பங்கு உளுந்து ஊறவைக்கவும்.5 மணி நேரம் ஊறிய பின்பு முதல் நாள் தனி தனியாக அரைத்து 2 டேபிள்ஸ்பூன் நல்ல எண்ணெய்,உப்பு கலந்து கரைத்து வைக்கவும்.ம்றுநாள் மாவு பொங்கி இருக்கும்.இட்லி அரிசிக்கு தான் 3:1 ,சாதாரண அரிசிக்கு 4;1.இனி சிம்பிளாக சிறுபருப்பு சாம்பார் வைக்கலாம்.
தேவையான பொருட்கள் :-
பாசிப்பருப்பு - 50-75  கிராம்,
தக்காளி- 1 (பெரியது),
வெங்காயம்- 1( பெரியது),
மிளகாய் -2,
மஞ்சள் பொடி - கால்ஸ்பூன்,
சாம்பார் பொடி-அரைஸ்பூன்,
பெருங்காயப்பொடி-கால்ஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்,நெய் - 1டீஸ்பூன்,
கடுகு -அரைஸ்பூன்,வற்றல்-2,கருவேப்பிலை
மல்லி இலை - சிறிது,
உப்பு- தேவைக்கு.
குக்கரில் பாசிப்பருப்பு,மஞ்சள் பொடி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.கொதித்ததும் 1 டீஸ்ப்பூன் நெய்,சாம்பார் பொடி,மிளகாய்,நறுக்கிய வெங்காயம்,தக்காளி,உப்பு சேர்த்து மூடி 3 விசில் வைத்து இறக்கவும்.நன்கு வெந்து இருக்கும்,மசித்து விடவும்.பின்பு கடாயில் எண்ணெய் வீட்டு காய்நததும்,கடுகு,வற்றல்,கருவேப்பிலை,சிறிது வெங்காயம்,பெருங்காயப்பொடி தாளித்து கொட்டவும்.மல்லி இலை தூவி இறக்கவும்.சுவையான சிம்பிள் சாம்பார் ரெடி.

இட்லி மாவை கரைத்து மினி இட்லி தட்டில் எண்ணெய் தடவி ஒரு டேபிள்ஸ்பூன் மாவை இரண்டு குழிக்கு வருமாறு எடுத்து எல்லா குழிக்கும் ஊற்றவும். இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி பத்து நிமிடம் வைக்கவும்.


இட்லி வெந்தவுடன் தண்ணீர் தெளித்து ஸ்பூன் வைத்து எடுக்கவும். வெள்ளைவெளேர்னு மல்லிப்பூ மினி இட்லி ரெடி.

நிறைய மினி இட்லி அவிக்க நேரம் இல்லாவிட்டால் சாதா இட்லி அவித்து கட் செய்து சாம்பார் விட்டு ஸ்பூன் போட்டும் பரிமாறலாம்.பெரியவங்களுக்கு இப்படி கொடுக்கலாம்.


குழந்தைகளுக்கு இப்படி மினி இட்லியில் சாம்பார் டிப் செய்து கொடுத்தால் சாப்பிட ஆர்வமாக இருக்கும்,ஸ்பூன் போட்டு அழகாக சாப்பிட்டுவிடுவார்கள்.

பெரியவர்கள் மட்டும் என்ன ஒரே இட்லியான்னு சொல்றவங்க கூட ஆசையாக சாப்பிடுவாங்க.கூடவே ஒரு டிகிரி காஃபி கொடுத்திடுங்க,அமோகமாக இருக்கும்.


பின் குறிப்பு :சின்ன வெங்காயம் உபயோகித்தால் டேஸ்ட் சூப்பராக இருக்கும்,எனக்கு இங்கு பக்கத்தில் கிடைக்காததால் பெரிசு போட்டு இருக்கேன்.சாம்பார் பொடி சேர்க்காமல் கூட வெறும் மஞ்சப்பொடி,பெருங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்தும் செய்யலாம்,காலை சாம்பார் என்றால் இப்படி ஈசியாக செய்து அசத்தி விடலாம்.

--ஆசியா உமர்.

21 comments:

LK said...

arumai akka... enga veetla intha paasi paruppu sambarthan atigam.. chappathiku kooda use pannalam..

asiya omar said...

thanks LK.Chappathi,Dhal super combination.

sarusriraj said...

பார்கும் போதே சாப்பிடும் ஆவலை தூண்டுது, நான் சாம்பார் பொடிக்கு பதில் பச்சை மிளகாய் சேர்த்து கொள்வேன்.

Aruna Manikandan said...

I too love this combination..
I add gosthu powder it gives more taste...
Pass me this bowl!!!

Daisy Blue said...

Mini idli enoda favorite... oru spoon nei vitu saapta supero super !

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

இட்லி சாம்பார் சூப்பருங்கோ..

நாஸியா said...

ஆஹா!! வாய் ஊருதே! ரொம்ப ஈசியா சொல்லி தந்திருக்கீங்க. இன்ஷா அல்லாஹ் முயற்சி செஞ்சு பாக்குறேன்!! :))

நேத்து உங்க சுருட்டு கறி ட்ரை பண்ணினேன், ரொம்ப நல்லா வந்திருக்கு.. :) Jazakallahu khair

asiya omar said...

நாஸியா உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.என்னோட குறிப்பு செய்து பார்த்தமைக்கு மகிழ்ச்சி.நாஸியா,ஆசியா பெயர் ரைமிங்கா இருகே,மீனிங் என்னன்னு சொல்ல முடியுமா?யாருக்காவது பெண் குழந்தை பிறந்தால் பெயரை சஜஸ்ட் பண்ணலாம்னு தான்.

asiya omar said...

சாரு,அருணா.டெய்ஸி,ஸ்டார்ஜன்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

Mrs.Menagasathia said...

மினி இட்லி+சாம்பார் சூப்பர்ர் காம்பினேஷன்..நனும் சாம்பார் பொடி பதிலாக ப.மிளகாய்தான் சேர்ப்பேன்....

Chitra said...

கூடவே ஒரு டிகிரி காஃபி கொடுத்திடுங்க,அமோகமாக இருக்கும்.


......இது............. !!!
மினி இட்லிஸ் + பாசி பருப்பு சாம்பார் + பில்ட்டர் காபி = அசத்தல் கூட்டணி.

Geetha Achal said...

சூப்பர்ப்...மினி இட்லி டிப்....பார்க்கும் பொழுதே சாப்பிட தோனுது...நான் இன்று தான் இட்லியினை பற்றிய பதிவினை எழுதவேண்டும்...நன்றி அக்கா...

Cool Lassi(e) said...

Actually I had this a couple of days ago when my mom visited me. I love the Saravana Bhavan style of food. They are fabulous!

நாஸியா said...

அடடே.. ஆமா நல்ல ரைமிங்காத்தான் இருக்குப்பா!!ஹிஹி..

வந்து நாஸியாக்கு என்ன அர்த்தம்னு தெரியல.. ஆனா எங்க வாப்பா பேரோட முதல் எழுத்தும், எங்கும்மா பேரோட கடைசி எழுத்தும் சேர்ந்தது தான் நாஸியா.. ஹிஹி

(மெயில் பண்ணுங்க, இன்ஷா அல்லாஹ்)

malar said...

நல்ல பதிவு...

செய்து பார்கனும்...

zahrat al arab restaurent - இது எங்கு இருக்கிறது?

asiya omar said...

மலர்,அபுதாபியில் ஒரு சின்ன ரெஸ்டாரண்ட்.

ஜெய்லானி said...

அரபியில் நாஸியா என்பது தனது ஹைழை மறந்த பெண்.

asiya omar said...

நன்றி,ஜெய்லானி.ஒவ்வொரு புத்தகத்திலும் ஒவ்வொரு அர்த்தம் சில சமயம் இருப்பதுண்டு.

Deivasuganthi said...

மினி இட்லி சூப்பர்.நானும் பச்சை மிளகாய் சேர்த்துதான் செய்வேன்.

மகி said...

Asiyaakka,super mini idlies! Yummmm!

asiya omar said...

especially for you,mahi.