Tuesday, April 27, 2010

”யு ஆர் மை டாட்டர் லைக் சிஸ்டர்”

நான் ப்ளாக் எழுத ஆரம்பித்ததில் இருந்து என் உடன்பிறந்த சகோதரர் ஜனாப்.கலந்தர் அவர்களைப்பற்றி எழுதனும் என்று அடிக்கடி நினைப்பதுண்டு.இன்று அதற்கு சரியான நாள்.நான் இன்று மெயில் செக் செய்யும் பொழுது நெட்லாகில் இருந்து அண்ணனோட பிறந்தநாளை நினைவு படுத்தி மெயில் வந்திருந்தது.இதுவரை பழக்கம் இல்லாவிட்டாலும் இன்று போனில் அழைத்து வாழ்த்து சொன்னேன்.அவர்களுக்கு மிக்க ம்கிழ்ச்சி.

வாழ்த்துகிறேன் போற்றுகிறேன்.

செந்தமிழை தாய்மொழியாக கொண்டிருந்தாலும்
ஆங்கிலேயரை விட ஆங்கிலப்புலமை பெற்ற
ஆங்கிலப் பேராசிரியராய் அவருடைய பணியைத்
தொடர்ந்த திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி
அறியும் அவர் புகழை
அங்கு பயின்ற மாணவர் போற்றுவர்
என்றும் இவர் புகழை
ஐம்பத்து ஏழு வயதிலும்
ஐந்து வயது குழந்தையின் துறுதுறுப்பு
சமுதாய பணியில் சடையாமல் ஈடுபடும்
சர்வகலா வல்லவர்
உதவி என்றால் இரவு பகல் பாராமல்
ஓடிவரும் நல்லவர்
வள்ளல்களை விட வறியவர்களிடம்
வலிய பழகும் பண்பாளர்

கிட்டதட்ட 25 வருட அரபு நாட்டு வாழ்க்கையில்
கிட்ட அழைத்த எம் ஊர் மக்கள் ஏராளம்
எத்தனை குடும்பம் உயர்ந்தது உங்களால் !
எண்ணி பார்க்க தகுதியில்லை.

ஐக்கிய அரபு நாட்டுப் பள்ளிகளில்
இருபது வருட முதல்வர்
அனுபவத்தால் பயனடைந்த
பிள்ளைகளும் பெற்றோர்களும்
இன்றும் போற்றுகின்றனர்.

என் சிற்றறிவுக்கு
எழுத வரலையே
என்றாலும் முடிவாய் முற்றாய்
ஒன்று சொல்ல கடமைப்பட்டுள்ளேன்
நான் வளர்ந்ததும்,கற்றதும்,வாழ்வதும்
தங்களால்.
நீங்கள் நீடுழி நெடுங்காலம் குடும்பத்துடன்
நீங்கா மகிழ்ச்சியுடனும்,ஆரோக்கியத்துடனும்
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்
நெகிழ்ந்து போற்றுகிறேன்.

--ஆசியா உமர்.
பின்குறிப்பு : என் சகோதரர் என்னிடம் “யு ஆர் மை டாட்டர் லைக் சிஸ்டர்” என்று அடிக்கடி சொல்வதுண்டு.

14 comments:

LK said...

உங்கள் சகோதரர்க்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Mrs.Menagasathia said...

சகோதரர்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Jaleela said...

ஆசியா உங்கள் அன்பு (அப்பா) சகோதரருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகக்ள், இன்னும் அவர் புகழ் மேலோங்க மனமார்ந்த வாழ்த்துகக்ள்.

Geetha Achal said...

உங்கள் சகோதரருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....

ஹரீகா said...

அன்பை தரும் அண்ணன்கள் இங்கே ரொம்ப சொற்பம். நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் அக்கா. என் அண்ணனும் ஜமாலில் தான் படித்தார் என்ற ஒரு சிறிய தகவலையும் சொல்லிக் கொள்ள ஆசைபடுகிறேன்.

"யூ ஆர் மை டாட்டர் லைக் சிஸ்டர்" (ஓ கிரேட்)என்று சொன்ன (உங்கள்/எங்கள்)அண்ணன் நீண்ட, நிம்மதியான, நல் வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவணை வேண்டுகிறேன்.

பிரார்த்தனை நிறைவேற வேண்டுதல்களுடன்
ஹரீகா

ஜெய்லானி said...

சகோதரர்க்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!!

Chitra said...

உங்களுக்குத் தந்தையாய் - சகோதரராய் இருந்து உங்களை நேசித்து, ஆசிர் வழங்கும் நல்ல மனிதரை பற்றி வாசிப்பதில், மகிழ்ச்சி. அவருக்கு, எங்களது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

உங்கள் அண்ணனுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என் அன்பு சகோதரருக்கு/ஆசியாவுக்கும் வாழ்த்துகள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வாழ்த்துகவிதை ரொம்ப நல்லாருக்கு..

asiya omar said...

எல்கே,மேனகா,ஜலீலா,கீதா,ஹரீகா,ஜெய்லானி,சித்ரா,ஸ்டார்ஜன் அனைவருக்கும் வாழ்த்திற்கும்,பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி.

செந்தமிழ் செல்வி said...

ஆசியா,
உங்கள் சகோதரருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

asiya omar said...

செல்விக்கா வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

Kousalya said...

என் பதிவிற்கு தொடர்ந்து பின்னுட்டம் அளித்து வருகிறீர்கள், மிக்க நன்றி தோழி, சகோதரருக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

asiya omar said...

கௌசல்யா உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.உங்கள் போஸ்டிங்கை தமிலிஷ்க்கு சப்மிட் செய்திருந்தேன்,கவனித்தீர்களா?